(Reading time: 8 - 15 minutes)

“ கோபப்படாதே.. அவன் என்கிட்ட மன்னிப்பு தான் கேட்டான்” என்றான் விஷ்வானிகா. அவளே தொடரட்டும் என்ற எணத்தில் சகி அமைதியாக இருக்கவும் அதை புரிந்து கொண்டவள் போல  நடந்த்தை கூறினாள் அவள்.

“ ஐ எம் சாரி விஷ்வானிகா.. உன்னை நான் நிறைய தொந்தரவு பண்ணிட்டேன்”. அன்று தனது திருமண அழைப்பிதழை கொடுக்க்ம்போது தனிமையில் அதை சொல்லியிருந்தான் கௌதம்.

“..”

“காதல் என்பது தப்பில்லை. காதலிப்பதும் தப்பில்லைன்னு புரிஞ்சு காதலை சொன்ன எனக்கு உன் மனசை புரிஞ்சுக்க பொறுமை இல்லாமல் போச்சு. காதல்ன்னு சொன்னதும் அதுக்கு சரினு உடனே சொல்லமுடியாமல் நீ திணறுவதாக நினைச்சுத்தான் நான் உன்னை தொடர்ந்து வந்தேன்.உன் மனசுல என்ன இருக்குனு நான் புரிஞ்சுக்காம எனக்கு தோணுறதை காரணம் ஆக்கிக்கிட்டேன்”

“பழசெல்லாம் எதுக்கு கௌதம்?”

“காரணம் இருக்கு! அன்னைக்கு நீ சின்ன வயசு ப்ரண்டை காதலிக்கிறதாக சொன்னப்போ உன்மேல கோபம் வந்திச்சு,, பொய் சொலுறியோனு தோணிச்சு.. அதுவும் ப்ரண்டை யாராவது லவ் பண்ணுவாங்களான்னு நினைச்சேன்”

“..”

“ஆனா இன்னைக்கு என் வாழ்க்கையே மாறித்தான் போச்சு! அதுக்கு காரணம் என் சதீ! அவ என் மேல வெச்சிருந்த அன்பு, எல்லா நட்பும் காதலில் முடியாது. முடியனும்னு அவசியமும் இல்லை.. ஆனா, சில பேருக்கு காதலும் நட்பும் ஒரே உறவில் அமைஞ்சிடுது.அப்படி அமையுறதை மிஸ் பண்ணிடவே கூடாதுனு நான் வாழ்ந்து பார்த்து கத்துக்கிடேன்...”

“..”

“ஒரு வகையில், எனக்கு அதைக் கத்து கொடுத்த குருவே நீதான்!” என்றான் கௌதம். அமைதியாய் புன்னகைத்தாள் விஷ்வானிகா. ஏனோ உடனே வருணிடம் பேசவேண்டும் என்றே தோன்றியது அவளுக்கு!

“நீயும் வருணும் இதே மாதிரி சீக்கிரம் உங்களுடைய கல்யாணத்துக்கு கூப்பிடுவன்னு நம்புறேன்” என்றே விடைப்பெற்றிருந்தான் அவன். அதன்பின் விஷ்வானிகா ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டாள்.

“ஏன் எனக்கு கோபம் வரவில்லை? அப்படி என்றால் கௌதம் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேனா? எனக்குள் காதல் வந்துவிட்டதா?”. பட்டாம்பூச்சி பறந்தது, அவளது வயிற்றுக்குள் அல்ல தலைக்குள்.!

அதற்கான தீர்வை நாடித்தான் அவள் சகிதீபனைத் தேடி வந்தாள். அவள் எண்ணங்களைகேட்டு மகிழ்ந்தவன் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு,நான் கொஞ்சம் யோசிக்கனும்! டைம் கொடு” என்றான். அவன் மூளைக்குள் அணிவகுத்துள்ள திட்டங்களைப் பற்றி அறியாமல் பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பினா: விஷ்வானிகா.

மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க.. கூச்சப்படாதீங்க!” என்று அன்புடன் சொன்னார் நந்திதாவின் தாயார். தனது மேடிட்ட வயிற்றை வருடிக் கொண்டே தாயை முறைத்தாள் அவள்.

“ஏன் மா, ஒரு புள்ளத்தாச்சி பொண்ணு நான் இங்க இருக்கேன்..என்னை கவனிச்சியா? அதை விட்டுட்டு அவரை பார்க்கிற?” என்று அவள் சிணுங்கிட யாருக்கும் தெரியாத வண்ணம் அவளைப் பார்த்து கண் சிமிட்டினான் அபிநந்தன்.

“போடீ அரட்டை.. மாப்பிள்ளை உனக்காக அவருடைய வீட்டை விட்டே இங்க வந்துருக்காரு.. அதுவே பெருசு.,. இதில் என்ன கவனிக்கனும்? பாவம் பிள்ளை.. அவரை நாம தானே பார்த்துக்கணும்”என்று அவர் கேட்கவும், யாருக்கும் தெரியாமல் ந்ந்திதாவை பார்த்து கண் சிமிட்டினான் அபிநந்தன்.அவனை முறைப்பதாய் காட்டிக் கொண்டாலும் மனதில் அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் நந்திதா. தனக்காக தன்னுடன் தாய்வீட்டில் தங்கிடும் கணவனை கொஞ்சாமல் என்னத்தான் செய்வதாம்?

(இங்கு சகியும் அவனது குடும்பத்தினரும் அவரவரின் ஜோடிகளுடம் டுயட் பாடிட, மைத்ரேயி என்ன ஆனாங்கன்னு பார்ப்போம்!)

கல்யாண ஏற்பாடு!

எதிர்ப்பார்க்கவில்லை மைத்ரேயி. இவ்வளவு குறுகிய கால வரையரையில் திருமண ஏற்பாடுகளில் ஏனைய வேளைகள் முடிந்திருக்கும் என்று! அவளது அப்பாவைத் தொடங்கி கடைக்குட்டி கயல்விழி வரைக்கும் அனைவரும் பம்பரமாய் சுழன்று கொண்டு வேலைப் பார்க்க, அவளோ அலைப்பேசியை கையில் வைத்துக் கொண்டு யோசித்தாள்.

“அழைத்திடலாமா? அழைத்தாள் என்னாகிடும்?” என்று அவள் மனதினுள் கேட்டபடி நிற்க, இன்னொரு பக்கம் சகியின் தந்தையான வேணுகோபாலின் அலைப்பேசி அதிர்ந்தது.

“என்னது? ஆக்சிடண்ட் ஆ? எப்போ?” என்று அவர் அதிர, அவர் குரலில் தாக்கம் அங்கிருந்த மொத்த குடும்பத்தையுமே உலுக்கி போட்டது.

ஹாய் ப்ரண்ட்ஸ். “ மூங்கில் குழலானதே” மிகுந்த ஆவலுடன் நான் ஆரம்பித்த கதை. ஆயிரம் காரணங்களை அடுக்கி கொண்டே போனாலும்,கதையை நினைத்த பாதையில் முடிக்கவில்லை என்பதே உண்மை.

ஸ்ரீராம், கயல்விழி, கதிரோவியன், தான்யா போன்ற கதாப்பாத்திரங்களை மண்மணக்கும்கலாச்சாரத்துடன் உங்கள் கண்முன் ஒப்படைக்கவே ஆசைப்பட்டேன்.. ஆசைப்படுகிறேன்! அதற்கு இன்னும் சில படிப்பினையும் நேரமும் அவசியம் என்பதினால், அவர்களின் கதாப்பத்திரங்களுக்கு தற்காலிக இனிய முடிவொன்றினை கொடுத்து இத்தொடர்கதையை முடிக்க எண்ணுகிறேன்.

நான் கமல்ஹாஸன் சாரின் வார்த்தைகளுக்கு பெரிய ரசிகை. அதிலும் அவரின் வசன்ங்களில் ஒன்று அடிக்கடி என் மனதில் கேட்டுக் கொண்டே இருக்கும்!

“சாகா வரம்போல சோகம் உண்டோ?

தீரா கதையை கேட்பாரும் உண்டோ?”

நம்ம மூங்கில் குழலானதே தொடரும் தீரா கதையாகி விட கூடாது என்ற அக்கறையில் தான் இந்த முடிவு.எழுத்தாளருக்கு கதை என்பது குழந்தை போல. நம்ம குழந்தையின் வளர்ச்சி நம்ம கையில் தானே இருக்கு? சில நேரங்களில் குழந்தை நல்லா வளரணும்னு அதை ஹாஸ்டலில் சேர்த்து தூர வைப்போம்ல?அதே மாதிரி தான் இந்த குழந்தைக்கும் தற்காலிக தீர்வை தர எண்ணுகிறேன்! தரமான சிந்தனை மீண்டும் உதிக்கையில் குழந்தை தொடர்ந்து வளரும் இன்னொரு செல்ல பெயரில்.

நன்றி- புவி

அடுத்த அத்தியாயத்தில் நிறைவு பெரும்!

Episode # 24

Episode # 26

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.