(Reading time: 3 - 6 minutes)

07. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

ந்தா….

அவனின் உயிரில் கலந்து உணர்வில் நுழைந்து இதயம் தொட்டவள் அவள்…

அவன் விலக நினைத்தாலும், அவளது நினைவுகள் அவனை விலகவிடாமல் கட்டிப்போட்டு வைத்திருப்பதின் மர்மமும் அவன் இதுவரை அறிந்திடவில்லை…

“அண்ணா….. உன்னைத்தான்….”

ரித்தி அவனது தோள் தொட்டு நனவுலகுக்கு இழுத்து வர, அவன் முகமோ இறுகிப்போய் இருந்தது…

“பேசு அண்ணா… அவகிட்ட… நீ பேசினா மாறிடுவாண்ணா….”

“…………..”

அவனின் அமைதி ரித்திக்கு கோபத்தை வரவழைக்க,

“இரண்டு பேரும் இப்படி பிடிவாதம் பிடிச்சா என்ன அர்த்தம்?... யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுக்கணும்… அந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியாத மாதிரி இப்படி நீயும் நடந்துகிட்டா என்ன அண்ணா பண்ணுறது?...”

ரித்தி வெடுக்கென கேட்டுவிட்டு, அவனின் முகம் பார்க்க, அவன் பார்த்த பார்வையில் அவளுக்கு தொண்டை அடைத்தது…

அவனின் முகமே சொல்லிற்று, அவளின் வார்த்தைகள் எத்தனை பெரிய தாக்கத்தை அவனுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்று…

“அ….ண்….ணா…. சா….ரிண்ணா….. நா…ன்…. ஏதோ…..”

“இல்ல ரித்தி… உன் வருத்தம் எனக்கு புரியுது….”

“சாரிண்ணா… நான் வேணும்னே அப்படி சொல்லலை… மனசுல இருக்குற ஆதங்கத்துல அப்படி பேசிட்டேன்…”

“பரவாயில்ல ரித்தி… உன்னை என்னால புரிஞ்சிக்க முடியுது…”

“அவ எப்பப்பாரு உம்முன்னே இருக்கா அண்ணா… என்னால அதைப் பார்க்கவே முடியலை… எனக்கும் ஆசை இருக்காதா சொல்லு, அவளும் மத்தவங்க மாதிரி சந்தோஷமா வாழணும்னு….”

“கவலைப்படாத ரித்தி… எல்லாமே சீக்கிரம் மாறும்…”

“ஆமா, இப்படியே நம்பி தான் இத்தனை வருஷம் போயிடுச்சு… இனியாவது நல்லது நடக்கட்டும்னு தான் நான் கடவுளை வேண்டிக்குறேன்…”

“நடக்கும் ரித்தி….”

அவனின் குரலில் இருந்த உறுதி அவளை யோசிக்க வைக்க,

“ஹேய்… அண்ணா, என்ன எனக்கு தெரியாம எதாவது ப்ளான் போட்டுட்டியா?....”

அவள் சந்தேகத்துடன் கேட்டிட, அவனோ மெல்ல சிரித்தான்…

“அண்ணா… சொல்லு… விளையாடாத….”

அவள் கெஞ்ச,

“கொஞ்ச நாள் வெயிட் பண்ணு… உனக்கே தெரிஞ்சிடும்…”

“ஐயோ அதுவரை எல்லாம் தாக்குப் பிடிக்க முடியாதுப்பா என்னால…”

அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சொல்ல, அவளின் கரம் பற்றியவன்,

“கொஞ்ச நாள் தான் ரித்தி… அதுவரை வெயிட் பண்ணு… சரியா….” என தன்மையாக கூற,

“என்னவோ போண்ணா… நீயும் சந்தாவும் சீக்கிரம் ஒன்னா சேரணும்… அவ்வளவு தான் எனக்கும் வேணும்….”

அவள் அவன் முகம் பார்த்தபடி அவனது கைகோர்த்துக்கொண்டு கூற,

“என் ரித்தி தானா?... இப்படி அமைதியா பேசுறது?... நம்பவே முடியலையே…”

அவன் அவளை கேலி செய்ய,

“படவா… போடா… நானே கடுப்புல இருக்குறேன்… நீ வேற எரிச்சல் பண்ணாத…”

“என்ன கடுப்பு என் தங்கச்சிக்கு?...”

“அது…” அவள் சற்றே இழுத்தபடி தயங்க, அவன் புருவம் உயர்த்தினான்…

“என்ன ரித்தி… ஏன் தயங்குற?...”

“அது வந்துண்ணா, சந்தா அ…..வ வீ……..ட்டுக்குப் போயிருக்கா…”

இழுத்து இழுத்து சட்டென அவள் சொல்லி முடித்திட, அவனின் கண்கள் சிவந்தது…

கைகளை அவன் இறுக்கமாக வைத்துக்கொள்வதைக் கண்டவள்,

“சாரிண்ணா… உங்கிட்ட கொஞ்சம் நேர்ல பேசவேண்டி இருந்துச்சு… அதான் அவளையும் தனியா இருக்க வேண்டாம்னு சொல்லிட்டு, ஊருக்கு அனுப்பி வைச்சிட்டேன்…”

அவள் தமையனின் மனதை சமாதானப்படுத்த முயல,

“அவ அங்க போனா இன்னும் கஷ்டப்படுவா ரித்தி…” என்றவனுக்குள், அவளுக்கு இந்நேரம் அங்கே என்ன நடந்திருக்கும் என்று புரிய, அவன் தவியாய் தவித்திட்டான் தனக்குள்ளேயே

எழில் பூக்கும்...!

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.