(Reading time: 14 - 27 minutes)

“ரெண்டு பேரும் பேசி முடிச்சிடின்களா இல்லை, நான்  குறுக்க வந்துட்டேனா? என இந்தரை பார்த்து வினவினார் சம்யுக்தா......

“மாம், நீங்க கூட  வருவீங்களே தவிர குறுக்க வர மாட்டிங்க, அதுவுமில்லாம உங்களை விட முக்கியமா எதுவும் கிடையாது மாம்..........   

அதை கேட்டு சம்யுக்தா பெருமையுடன் புன்னகைத்து கொண்டார்......

“ஒரு நாள் என்னோட farm island க்கு வாங்க” என அம்மூவரையும் அழைத்தார் சம்யுக்தா........

“அங்க என்ன இருக்கு ஆன்டி? என ஸ்ருதி ஆர்வமுடன் கேட்கவும்.......

“ஐயோ, இப்போ கேட்காத ஸ்ருதி, அப்புறம் உங்க ஆன்டி சாப்பாடு மறந்து, நம்மையெல்லாம் மறந்து, அவளோட farm பத்தி பேச ஆரம்பிச்சுடுவா”  என அர்ஜுன் அவசரமாக குறுக்கிட்டார்...........

அதை கேட்டு அனைவரும் சிரித்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்......

அங்கு உணவை பறிமாரி கொண்டிருந்த பாரதியிடம் “ நல்லா சமைத்து இருக்கீங்க பாரதிக்கா” என பூர்வி கூறினாள்.........

“இன்று உங்களுக்காக மேடம்  தான் சமைச்சாங்க, நீங்க அவங்க கிட்ட தான் சொல்லணும்” என பாரதி கூறி சென்றார்.............  

“நல்லா இருக்கு ஆன்டி” என பூர்வி அவரிடம் கூறியதற்கு........

“நான் ரொம்ப நல்லா சமைப்பேன்னு எல்லாம் கிடையாது டா, அங்கிளுக்கும், இந்தருக்கும் என்ன எல்லாம் பிடிக்குமோ, அதை எல்லாம் மட்டும் நல்லா சமைப்பேன். நமக்கு மனசுக்கு நெருக்கமானவங்களுக்கு செய்யும் எல்லாம் நல்லா தான் வரும்” என கூறி புன்னகைத்தார்........

அதை கேட்ட பொழுது ஏனோ சுவிஸ்ஸில் பால் கோவா கிண்டிய போது நன்றாக வந்தது நியாபகம் வந்தது. அதே யோசனையுடன் இந்தரை பார்த்த பொழுது அவனும் பூர்வியை தான் பார்த்து கொண்டிருந்தான்.

“எனக்கு கூட அப்படி ஓர் முறை சுவிஸ்ஸில் பால் கோவா சாப்பிட்டது, நியாபகம் இருக்குமா”  என இந்தர் கூறியதற்கு..........

“நான் சுவிஸ் வந்த பொழுது, சித்தி வீட்டில்  உனக்கு பால் கோவா செய்தது இல்லையே இந்தர், சித்திக்கும் செய்ய தெரியாது, ஆனால் எப்படி சுவிஸ்ஸில்? என சம்யுக்தா ஆச்சரிய்பட்டார்...........

“எப்பவோ சுவிஸ்ஸில் சாப்பிட்டேன்மா” என இந்தர் பதில் அளித்தான்.........

“வாவ், எனக்கு கூட ஒரு முறை பூர்வி, சுவிஸில் செய்த பால் கோவா மறக்க முடியவில்லை” என ஸ்ருதி பதில் கூறினாள்.

“அப்போ, சுவிஸ் போய் பால் கோவா சாப்பிட்டால் மறக்க முடியாது போல” என அர்ஜுன் கூறி சிரித்தார்.

“சரி இப்படி ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தால், நமக்கு லேட் ஆகும், சீக்கிரம் சாப்பிடு ஸ்ருதி” என அவளை அவசரபடுதினாள் பூர்வி..........

மூவரும் கிளம்பியதும், ஸ்ருதிக்கும், ஹெலனாவிர்க்கும், சுடிதார் மெட்டிரியலும், பூர்விக்கு மட்டும் ஒரு மைசூர் சில்க் புடவையும் கொடுத்தார்...........

“இதெல்லாம் எதுக்கு ஆன்டி? என மறுத்தாள் பூர்வி........

“வீட்டிற்க்கு கன்னி பெண்கள் வந்தால், சப்த கன்னிகைகளும் வந்தது போல், அதனால் அவங்களை வெறும் கையோடு அனுப்ப கூடாதுங்கறது ஐதீகம். அதனால் தான் குங்குமமாவது கொடுப்பார்கள். அதனால் வாங்கிகோங்க” என சம்யுதக்தா கூறினார்.........

“அப்போ நான் அடிக்கடி இங்க வர்றேன் ஆன்டி” என குறும்புடன் ஸ்ருதி கூறினாள்....... 

“நீங்க எல்லோரும் எப்போ வேணா இங்க வரலாம், இது உங்க வீடு மாதிரி நினசுக்கோங்க.” என சம்யுக்தா கூறியதற்கு.........

“நான் கண்டிப்பா நினைவில் வைத்து கொள்றேன் ஆன்டி, அது என்ன எங்க ரெண்டு பேருக்கு சுடிதார் துணி, பூர்விக்கு மட்டும் புடவை? என ஸ்ருதி கேட்டதற்கு............

“நீங்க ரெண்டு பேரும் pant, topsல் வந்து இருக்கீங்க, பூஜா மட்டும் தான் சுடிதார்ல வந்து இருக்கா. அதானால் ஒரு அப்கிரேட் உங்க ட்ரஸ்ல செய்து, இப்படி கொடுத்து இருக்கேன்.” என சம்யுக்தா கூறினார்.........

ஒரு வழியாக அவர்களிடம் விடை பெற்று ரெசார்ட்டை வந்து அடைந்தனர்...........

ன்று மாலை மூவரும் வேலை முடித்து பூர்வியின் அறையில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்.

“காலையில் நல்லா இருந்தது. அந்த ஆன்டி ரொம்ப நல்லா பழகறாங்க. ஹெலனா, நம்ம ரெண்டு பேரிடம் பேசும் போது ஆன்டி மா சேர்த்து பேசறாங்க, ஆனா பூர்விகிட்ட பேசும் போது மட்டும் டா சேர்ந்து பேசறாங்க. உனக்கு எதாவது புரிஞ்சிதா? என ஸ்ருதி தனது வழக்கமான டிடக்டிவ் வேலையே ஆரம்பித்தாள்.

“எனக்கு ஒன்னும் புரியலை, but she is a very nice lady ன்னு மட்டும் புரிஞ்ஜூது”. என ஹெலனா கூறினாள்.........

“இவ ஒருத்தி, பேசும் போதே பாதி ஆங்கிலம், பாதி தமிழ்ன்னு ஆங்கிலோ இந்தியன்னு நிருபிசிகிட்டே இருப்பா, பாயன்ட்க்கு வராம” என ஸ்ருதி அலுத்து கொண்டாள்............

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.