(Reading time: 14 - 27 minutes)

“என்னவோ நீ தூய தமிழில், ஆங்கிலம் கலக்காம பேசற மாதிரி, அவளை ஏண்டி வார்ர” என பூர்வி கூறினாள்........

“அதை விடு, நீ பேச்சை மாத்தாத,  அப்புறம் அந்த ஆன்டி உன்னை பூஜான்னு கூப்பிடறாங்க. நாங்க எல்லாம் பூர்வின்னு தானே உன்னை கூப்பிடறோம்” என அடுத்த சந்தேககத்தை கேட்டாள் ஸ்ருதி.......

“அது அவங்க மகன் சொன்னதால இருக்கும்” என பூர்வி வாயை விட்டாள்.....

“அப்போ பாஸுமா? என இழுத்தாள் ஸ்ருதி.........

“இன்னைக்கு என்ன உன்னோட புருஷ் இன்னும் பேச வரலையா WhatAppல்  ” என அவளை திசை திருப்பினாள் பூர்வி........

ஒரு வழியாக இருவரையும் பேக் செய்து அனுப்பி விட்டு படுக்கையில் விழுந்த பொழுது இந்தர் நியாபகமே மேலிட்டது. அவர்கள் வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்து,  ஸ்டேடஸ் ல் அவர்கள் எங்கோ அல்ப்ஸ் மலை மீதும் தாங்கள் எங்கோ பரங்கி மலை மீதும் இருப்பது போல் தோன்றியது பூர்விக்கு.

தனது தந்தையும், நல்ல படியாக சம்பாதித்து, சொந்த வீடு, கார் என்று வசதியாக இருந்தாலும், இந்தரின் வசதிக்கு முன் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது.

அதனால் இனி மேல், இந்தரிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும் என நினைத்து உறங்கிப் போனாள் பூர்வி.........  

ரண்டு நாள் கழித்து இந்தர் வந்த பொழுதும் தனது எண்ணத்தில் உறுதியாய் இருந்தாள் பூர்வி.........

மூவரையும் தனது ஆபிஸ் அறைக்கு அழைத்து “இன்று லஞ்ச் க்கு வெளியே போகிறோம். நீங்க மூணு பேரும் கிளம்பி வாங்க” என்று இந்தர் அழைத்த பொழுது.........

“எனக்கு வேலை இருக்கு, சாரி என்னால வர முடியாது” என மறுத்தாள் பூர்வி.......

“இன்று அம்மா, அப்பா கல்யாண நாள். அதானால உங்களை லஞ்ச் க்கு அழைத்தது அம்மா தான், நீ வரலைன்னா, நீயே அம்மாவிடம் போன் செய்து சொல்லிடு” என அவனது ஐ போனை அவளிடம் நீட்டினான் இந்தர்.............

சம்யுக்தாவிடம் மறுப்பதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது பூர்விக்கு. அதனால் அவனிடமிருந்து போனை வாங்காமல், “ ஆன்டி கூப்பிடுவதால் வர்றேன்” என கூறினாள்.

“அப்போ நாங்கள்ளா கூப்பிட்டா வரமாட்டிங்க” என அவளை பார்த்து கேட்டான் இந்தர் சிறிது கோபத்துடன்........

“கூல் பாஸ், நாங்க எல்லாம் எப்போ கூப்பிட்டாலும் வர ரெடியா இருக்கோம் .” என ஸ்ருதி அவனை அமைதிபடுதினாள்.

“சரி கிளம்புங்க, அம்மாவும், அப்பாவும் நேரா அங்க வந்துடுவாங்க, நாம இப்போ கிளம்பினா சரியா இருக்கும். இங்கருந்து 20 நிமிஷமாகும் Ithaa Resort போக.” அவர்களை கிளப்பினான் இந்தர்........

இவர்கள் அங்கு போய் சேர்ந்த நேரம், அவர்கள் இருவரும் வந்திருக்கவில்லை. அவன் முன்பே பதிவு செய்திருந்த டேபிளில் சென்று அமர்ந்தனர். இந்தர், அவனது அப்பாவை செல்லில் அழைத்தான்.

“ஹலோ அப்பா எங்க இருகிங்க?

“வந்துட்டு இருக்கோம் இந்தர், உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கூட இருக்கு, வந்து காட்றேன்” என கூறி சஸ்பென்ஸ் வைத்து இணைப்பை துண்டித்தார்......

குழப்பத்தில் இருந்தாலும் அவர்களுடன் பேச ஆரம்பித்தான். ஹாட்வின்னும் உடன் வந்திருந்ததால் ஆங்கிலத்திலேயே உரையாடி கொண்டிருந்தனர்.  முன்பை விட இப்பொழுது ஹெலனாவும், ஹார்ட்வினும் நெருங்கி இருப்பது அனைவருக்கும் புரிந்தது. ஹர்ட்வின் செல்லமாக ஹனி என்றும், ஹெலனா ஹாட் என்றும் பரஸ்பரம்  அழைத்து பேசி கொண்டிருந்தனர்.

ஸ்ருதி அவர்களை கலாய்த்து கொண்டிருந்தாள். அப்படியே இந்தரிடம் திரும்பி “பாஸ் உங்களை எப்படி உங்களுக்கு வர போற   பியான்சி அழைப்பார்கள் செல்லமா” என கேட்டு குறும்பு மின்ன புன்னகைத்தாள்.....

அதற்கு இந்தரும் சிரித்து கொண்டே, என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் இந்தர்ன்னு கூப்பிடுவாங்க, அம்மா மட்டும் கண்ணான்னு பாசமா கூப்பிடுவாங்க. சோ இது போல் எதுவும் இல்லாம என்றால், நாங்க தனியா இருக்கும் பொழுது மட்டும் ஜித்தூ ன்னு கூபிடுவா” என்று கூறினான்.........

அதை கேட்டு பூர்வியின் மனதில் தென்றல் வீச தான் செய்தது. தான் மனதில் இந்தரை அவ்வாறு அழைப்பது இவனுக்கு எப்படி தெரியும் என குழம்பி கொண்டிருந்தாள்...........

அந்நேரம் “ஜித்தூ........ என அழைத்தபடி அவனது பின் புறமிருந்து அவனது கண்களை மூடினாள்  நவ நாகரிக நங்கை ஒருத்தி............

NAU

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 08

Episode 10

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.