(Reading time: 16 - 32 minutes)

10. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

ஜித்தூ...... என அழைத்து கண்களை மூடியது யார் என்று அந்த கைகளை பிரித்து பார்த்த பொழுது எதிரே இருந்த பூர்வியின் வாடிய முகமே முதலில் தெரிந்தது இந்தருக்கு. அவள் கோபமாக இருந்திருந்தால் கூட பரவாயில்லையோ? என தோன்றியது..........

எரிச்சலுடன் திரும்பி பார்த்து வியப்பில் , “ஹே வண்டு இங்க என்ன செய்யற?” என புன்னகைதான்......

“போங்க இந்தர், இப்படி என்னை வண்டுன்னு கூப்பிடாதிங்கன்னு எத்தனை தடவை சொல்றது?, என்னை அழகா குழலின்னு கூப்பிடலாம்ல!!!!  என குழலூதினால் அந்த வண்டார் குழலி........

“நான் எப்பவும் போல தான் உன்னை கூப்பிடறேன், நீ தான் என்னை  இந்தர்ன்னு கூப்பிடாமல், புதுசா ஜித்து ஜில்லாடி ன்னு தெறி பட பாட்டு மாதிரி பாடிட்டு இருக்க” என அவள் புதிதாக கூப்பிடுகிறாள் என பூர்விக்கு புரியவைக்க முயன்று கொண்டு இருந்தான் இந்தர்.......

பூர்விக்கு புரிந்தாலும், நம்ம ஸ்ருதிக்கு புரியணுமே!!!!!

“அப்போ இவங்க தான் உங்க fiancee ஆ பாஸ்?  என ரகசியமாக கேட்டாள் ஸ்ருதி........

அவ எனக்கு பியான்சியோ இல்லையோ, நீ எனக்கு வில்லி தான் என்று மனதிற்குள் கூறி கொண்டு, “இல்லை என்னோட அத்தை பொண்ணு வண்டார் குழலி” என்று பூர்வியை பார்த்து கொண்டு ஸ்ருதிக்கு பதில் கூறினான்........

அதற்குள் அர்ஜுனும், சம்யுக்தாவும் வந்து சேர்ந்து விட.......

“குழல் நாங்க கிளம்பும் முன் தான் வந்தாள் இந்தர், அதான் அப்பா உன்னிடம் சர்ப்ரைஸ்ன்னு சொன்னார்”  என சம்யூக்தா கூறினார்......

Maldives ல் on landing விசா என்பதால் இவர்களுக்கு அவளது பயணத்தை பற்றி ஏதும் அறிவிக்காமல் வந்திருதாள் குழலி........

அதற்குள் கேக் அவர்கள் டேபிளுக்கு வரவும் , அர்ஜுனும், சம்யுக்தாவும் சேர்ந்து வெட்டினர்.......

முதல் துண்டுகளை ஒருவர் மற்றவர்க்கு ஊட்டிய பின் அர்ஜுன் ஒரு கேக் துண்டை எடுத்து குழலிக்கு கொடுத்தார். தங்கை மகள் மீது பாசம் அவருக்கு எப்பொழுதும் அதிகம் தான்........

சம்யுக்தா அடுத்த கேக் துண்டை இந்தருக்கு கொடுப்பார் என பூர்வி நினைத்து மனதளவில் சோர்ந்த பொழுது, மனதளவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது போல் கற்பனை செய்து அதனால் துக்கம் அடைந்தாள். என்னதான் தான், இந்தரை விட்டு விலக நினைத்தாலும், தன் கண் முன்னே, அவன் வேறு யாருடனோ இணைவதற்கு சூழ்நிலை அமைவதை பூர்வியால் பொருத்து கொள்ள முடியவில்லை தான்.

ஆனால், சம்யுக்தாவோ அடுத்த துண்டை பூர்வியிடம் கொடுத்தார். அதை பார்த்த ஸ்ருதியோ.......

“ஆன்டி, இவ்வளவு ஓர வஞ்சனை கூடாது உங்களுக்கு. நான் எதோ பேச்சு வாக்கில் சொல்லிட்டேன், எனக்கு மாமியார் ஆகும் வாய்ப்பு உங்களுக்கு இல்லன்னு, அதுக்காக கேக் முதலில் எனக்கு குடுக்க கூடாதுன்னு எல்லாம் கிடையாது. உங்களை மாமியாரா தான் எத்துக்க முடியாதே தவிர நீங்க கொடுக்கும் கேக்கை ஏத்துக்க முடியும்” என கூறவும் அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்..........

“அப்படின்னா முதலில் எங்க அத்தை எனக்கு தான் கொடுக்கணும் என்று குழலி சண்டைக்கு வந்தாள்.......

“அது என்ன என் மனைவியை எல்லோரும் பங்கு போடறது? சம்யு எனக்கு மட்டும் தான்” என அர்ஜுன் கூற  

“போதும் பா உங்க ரோமன்ஸ்” என இந்தர் கூறினான்........

“எங்க கல்யாண நாள் அதுவும் கூட ரொமான்ஸ் பண்ணலன்னா எப்படி? என அர்ஜுன் கூறியதற்கு சம்யுக்தா அழகாக வெட்கப்பட்டார்........

“சரி விடுங்க, இந்தர் நீ ஒரு பாட்டு பாடு” என சம்யுக்தா கூறினார்.

“மா, திடிர்ன்னு பாட சொன்னா என்ன பாட?

“எனக்கு வர போற மருமகளை பத்தி , உனக்கு என்ன கற்பனை இருக்கோ அதை பற்றி பாடு” என சம்யுக்தா கூறினார்.......

“மா, இப்போ தான் பியான்சி பத்தி பேசி ஒரு பல்ப் வாங்கினேன். மறுபடி முதலில் இருந்து ஆரம்பிகிரின்களே?

“வாங்கின பல்பை எரிய வை. ஓகேவா ? என கூறி சம்யுக்தா புன்னகைத்தார்.

அதை கேட்டு இந்தரும் பாட ஆரம்பித்தான்..........

அவனது பாட்டிற்கு தகுந்தார் போல் ஹாட்வின் அவனது கிட்டாரில் உடன் வாசிக்க ஆரம்பித்தான்.............

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ

சிவந்த கன்னங்கள் ரோசபூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ

சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ

அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ

மை விழி ஜாடைகள் முல்லை பூ

மணக்கும் சந்தன பூ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.