(Reading time: 16 - 32 minutes)

“சரி நான் போய் யார்ன்னு பார்த்து இங்கு அனுப்பறேன்”. என கூறி எழ போனாள் பூர்வி........

“உட்கார் பூஜா. உன்னிடம் கொஞ்சம் பேசணும்.”

“ம்...... சொல்லுங்க”

“நான் சொல்லாமலே உனக்கு தெரியாதா?

“அனுபவ பாடம், யாரும் எதுவும் சொல்லுமுன், நாமா எதையும் நினைக்க கூடாதுன்னு, சொல்லுங்க..”

“ப்ளீஸ் பூஜா, அது மூணு வருடம் முன் நடந்தது. அதை மறந்துடேன்.”

“நீங்க சொல்லனும்னு அவசியம் இல்லை இந்தர், நான் எப்பவோ மறந்துட்டேன், எல்லாத்தையும், உங்களையும் சேர்த்து..”

“பொய் சொல்ற பூஜா, நீ இன்னும் என்னை மறக்கலை. மறந்திருந்தா, என்னை இங்கு பார்த்த அன்றே, சாதாரணமா என்னிடம் பேசி இருப்ப!!!

“ஒரு பாஸ்கிட்ட எந்த அளவு பேச முடியுமோ அந்த அளவு பேசினேன்.”

“சரி நமக்குள்ள வாக்கு வாதம் வேண்டாம். இப்போ உள்ள நிலையை பார்ப்போம்” என கூறி , அந்த மணலில் ஒற்றை காலில் முழங்காலிட்டு, அவன் வைத்திருந்த ஒற்றை சிவப்பு ரோஜாவை எடுத்து அவள் முன் நீட்டி,

நான் விழிக்க உன் முகம் வேண்டும்

என் முகம் பார்க்க உன் விழிகள் வேண்டும்

நான் நடக்க உன் துணை வேண்டும்

என் தலை சாய்க்க உன் மடி வேண்டும்

இதற்கெனவே நீ என் கை சேர வேண்டும்.

என்ற  கவிதையை  கூறி அவனது மனதை வெளிபடுத்தினான். முடிவில் “வில் யூ மேரி மீ பூஜா“ என அவன் கேட்ட பொழுது முழு வெண்மதி வானத்தில் தோன்றி இருந்தது........

பூர்வியால் நம்பவே முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு பேச கூட நா எழவில்லை.  எதோ இந்த பூமியில் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பது போல் இருந்தது. என்ன தான் அவள் மனம், அவன் அழகாக ப்ரபோஸ் செய்ததை நினைத்து மகிழ்ந்தாலும், மூளை வேறு சொன்னது.

 “சாரி இந்தர், நான் உங்களை வெறும் பாஸா தான் பார்கிறேன்” என்று அவனை பார்க்காமல், வானத்தில் இருந்த நிலவை பார்த்த படி கூறினாள்.

மெதுவாக சேரில் ஏறி அமர்ந்தான் இந்தர். “அவள் முகத்தை பார்த்து சிறு பின்னகையுடன் “சரி நான் ஒரு தடவை முடியாதுன்னு சொன்னதுக்கு இப்ப நீ சொல்லிட்ட. இப்போ ப்ரெஷா கேட்கிறேன்.  வில் யூ மேரி மீ பூஜா” என இந்தர் ஆழ்ந்த குரலில் கேட்டான்.

“எப்பவும் நீங்க உங்களை பத்தி மட்டும் தான் நினைகிறிங்க , நான் அன்று கேட்ட போது, என்னை பத்தி கொஞ்சமாவது யோசிங்களா?

“நீயே அன்று சொன்ன, அது, சூழ்நிலையால கேட்டதுன்னு.”

“சூழ்நிலையால கேட்டாலும், நீங்க அதை மதிச்சு இருக்கணும்..”

“பூஜா ப்ளீஸ், புரிஞ்சிக்கோ.........  அந்த வயசில் நான் பிசினஸில் நல்லா கால் ஊணனும் நினைத்தது தப்பா? அந்நேரம் எனக்கு வேறு எந்த கவன சிதறலும் இருக்க வேண்டாம்ன்னு நினைத்தேன்.”

“அப்போ நான் உங்களுக்கு கவன சிதறலா?

இந்தருக்கும் பொறுமை குறைந்து கொண்டே போனது.

“முட்டாள் மாதிரி பேசாத பூஜா.”

“உங்களுக்கு என்னை பார்த்தா முட்டாள் மாதிரி தான் தெரியம். அன்னைக்கு நீங்க என்னை விட்டுடு போன போது எப்படி இருந்தது தெரியுமா? அன்னைக்கு மட்டும் அநேரம் எங்கக்கா போன் செய்து அவ ப்ரெக்னன்ட் சொல்லாம இருந்து இருந்தா, நீங்க இப்போ எங்கிட்ட பேசவே முடியாம போய் இருக்கும். இன்னும் கூட என்னால அதை மறக்க முடியல.” என கூறிய பொழுது அவள் கண் கலங்க தான் செய்தது.

“சாரி பூஜா........ பாஸ்டை  மறந்துட்டு , கொஞ்சம் பிரசன்டுக்கு வாயேன்.

“சாரி இந்தர், உங்களை கல்யாணம் செய்துகிட்டா, உங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது தான் நியாபகம் வரும். அதனால் உங்களை என்னால் எப்பவும் கல்யாணம் செய்துக்க முடியாது.”

“சரி நீயே என்னிடம் கல்யாணத்திக்கு கேட்டால்?

“நான் ஏன் உங்களிடம் கேட்க போறேன்.

“கேட்டால்?”

“உங்க கனவில் தான் அது நடக்கும்”.......

“நான் உன்னை கேட்க வைக்கிறேன் பூஜா. இது சவால்.!!!!!!

“சவாலா? அப்ப நிச்சயம் நடக்காது.” என கூறி அங்கிருந்து எழுந்து சென்றாள் பூஜா.......

“நான் இது வரை எந்த சவாலிலும் தோத்தது கிடையாது பூஜா. இதிலும் ஜெயிப்பேன். என கூறி கொண்டான் இந்தர். அவனுக்கு தெரியவில்லை வியாபாரத்தில் தான் சவால் விட்டு ஜெயிக்க முடியும். காதலில் அல்ல என்று.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.