(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - கானல் நீரினால் காய்ந்த நதிகள் - 05 - ரேவதிசிவா

 knkn

சம்பிராதயமாய் கட்டிவிட்டு

சட்டமில்லா உறவாய் நடத்த

சம்மதம் இல்லா சம்பந்தமாய்

ஊதியமில்லா உதவியாளாய்

விருப்பமில்லா விலைமாதுவாய் வாழ

உன்னால்  வித்திடப்பட்ட குழந்தையை

உனதாக ஏற்காமல் உலவும் உனக்கு

 நான் யார்?

மனைவியா? காதலியா? வேலைக்காரியா?விலைமாதுவா? இல்லை பண்டமாற்றுப் பொருளா?

பெண் என்று பிறந்த காரணத்திதால்தான் இவ்வகை இடர்பாடுகளோ?

மனதில் முழுவதும் பல கேள்விகள் அவளிடம் என்றும் போல் இன்றும் அணிவகுக்கவே செய்கின்றன.சிந்தனை செய்யவதற்கேனும் தன்னால் முடிகின்றது என்பது பெரிய விஷயம்!

ஏய்! இன்னும் அங்க என்ன செய்ற? சாப்பாடு எடுத்து வைடி! எனக்கு என்று வந்து வாச்சிருக்கே! சே! கருமம்.வாடி என்னும் வசை நிறைந்த கத்தலில் செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டு சென்றாள் அவள்.

ஆம்.அவள்தான்.சமூகம் அவளுக்கிட்டப் பெயர் பரோ அல்லது மோல்கி.

Paro (from the Hindi word par, which means from across the state border) or molki (one who is purchased) or Slave bride.

திருமணம் என்றால் பல கனவுகள் நிறைந்தது.ஆனால் பலருக்கு அது கனவாய் போய்விடுகிறது.அப்படி பட்ட பெண் ஒருத்திதான் இவள்.

நம்மில் பலர் விருப்பமில்லா வாழ்க்கை அமைத்தாலும் அதை விருப்பமுள்ளதாய் மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம்.அப்படி முயற்சி செய்து மோசமாய் தோற்கப் போகும் ஒருத்தியைத்தான் பார்க்கப் போகிறோம் நண்பர்களே !

இடம்: ஹரியானா

மேலே குறிப்பிட்டப்படி  கத்தியவன் ஹாரக்.

தனக்கும் மனைவி வேண்டும் என்று தந்தையை நச்சரித்தவன் அடுத்தவனின் திருமணத்தைப் பார்த்து!

இப்பொழுது உயிரோடு இல்லை இப்பாதகனைப் பெற்ற அம்மகாப் பாதகன்.

அன்று நடந்த நிகழ்வை தெரிந்துக் கொள்வதற்கு முன், இங்கு நடக்கும் நிகழ்வை இப்பொழுது கவனிப்போம்.

எதுவும் பேசாமல் அவனுக்கு உணவைப் படைத்தாள் அவள்.அவளின் கன்னத்தில் அவனின் கைத்தடம்.உள்ளத்தில் எத்தனையோ தடம்!

அவளை முறைத்தவாரே நன்கு கொட்டிக் கொண்டான்,ஹாரக்.

அப்பொழுது குழந்தை அழ, அவனை கவனிக்க முடியா தன் இயாலாமை நினைத்து வருந்தினாள்.

நான்கு வயது குழந்தை தன் தம்பியின் அழுகையை நிறுத்தவதற்காகத் தன் பிஞ்சு விரல்களால் வருடினாள்.

அம்மாவின் கவனிப்பு கிடைக்கவில்லை என்றாலும் , அம்மாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவளின் ஸ்பரிசத்தில் அழுகையை நிறுத்தி அவளைப் பார்த்தான் ஐந்நுமாதக் குழந்தையானவன்.

குழந்தைக்களுக்கெல்லாம் உணவிற்கு அடுத்ததாய் அதிகம் வேண்டியது தாயின் ஸ்பரிசம்தான்.

ம்.ஸ்பரிசம்.இந்த தொடுதல்  நமக்கு பல உணர்வுகளைத் தரும்.பாதுகாப்பு, அரவனைப்பு,ஆறுதல்,அன்பு,வெறுப்பு,கூச்சம்,வலி என்று நீளும்.

ஆனால் குழந்தை மற்றும் தாயிடம்தான் இது பல உணர்வுகளைக் கலந்தே தரும்.

அக்கா தம்பிக்கிடையே நடக்கும் அழகிய காட்சி ஒன்று அங்கு அறங்கேறியது.

படுத்திருந்த மோசமான துணியில் இருந்து தமக்கையின் மடியில் மாறியவனுக்கு  பசியை மறந்து,தமக்கையை சீண்டும் எண்ணம் அப்பொழுது எழுந்ததோ என்னவோ? தன் பிஞ்சு விரலில் அவளின் முடியை தலையாட்டியின் கயிறாய் பாவித்து, அக்காவை அழகாய் தலையாட்ட வைத்தான்!கூடவே பொக்கைவாய் தேனொழுகல் தீர்த்தம் வேறு ...

கொஞ்சமாய் அவனின் ஆட்டலுக்கு உடன்பட்டு, பின் அவனின் பட்டுக்கைகளைப் பிரித்தெடுத்து தன்னால் முடித்தவரை தட்டி தன் தாயைப் போல் தூங்கச் செய்தாள்.

அக்காவை ஆட்டிவைத்தது போதுமென்று எண்ணி அவனும் கண்ணுறங்கினான்.

அவளை வார்த்தையிலும் தன் வயிற்றில் உணவையும் கொட்டிக்கொண்டே இருந்தவனுக்கு தன் செயலால் உருவாகியவனின் குரல் காதில் விழுந்தும் விழாத மாதிரி அவளிடம் எரிந்து விழுந்தான்.

அவனின் அக்கிரமங்களைக் கண்டும் சகித்துக் கொண்டிருந்தாள்.விடிவு வருமென்று  கண்ணை மூடிக்கொண்டு இருப்பவர் போல் ஆனது அவளின் நிலையும்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.