(Reading time: 8 - 16 minutes)

14. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

"நீ வருவ!இந்தக் கோபம்,பிடிவாதம் எதுவும் இல்லாம என் சட்டையைப் பிடித்து உன் காதலை சொல்லுவ!"-மீண்டும் மீண்டும் அவன் கூறியவற்றையே நினைவுக் கூர்ந்தாள் மாயா.அவளது அதிகப்படியான மன உளைச்சல் அவளுக்கு தலைவலியையே அளித்தது.

"இல்லை!இது உண்மையில் வியூகமே!இது உண்மையல்ல!மாயா எவரும் ஆட்படாதவள்!சுதந்திரமானவள்!நான் வாழ எந்த ஆண்மகனின் அன்பும் எனக்கு அவசியமில்லை.காதலினால் விளையப்போவது ஏதுமில்லை!மரணம் அனைத்தையும் ஓர்நாள் கெடுத்து ஆளும்!மனம் சஞ்சலம் கொள்ளும் முன்,இந்த நாடகத்திற்கு முடிவு அளிக்க வேண்டும்!என் வைராக்கியத்தை காதல் ஆள நான் அனுமதி அளிக்கப் போவதில்லை."-எனில்,மாயாவின் மனதினில் ஈரம் சுரக்க ஆரம்பித்ததா??அவளுக்குள்ளும்,அவளது அந்தப் பிடிவாதத்தின் உள்ளும் ஏதோ ஒன்று ஔிந்துள்ளது!!

தனது பூஜையறைக்குள் சப்தமில்லாமல் நுழைந்தாள் மாயா.அவளது வருகையை எதிர்நோக்கி இருந்த ஈசன்,இன்முகத்தோடு அவளை வரவேற்றார்.என்றும் இல்லாத நடுக்கம் அவள் நடையில் தெரிந்தது!ஆற்றக்கூடாத பணியை ஆற்றியது போல்,அவள் விழிகளில் அவளை ஆண்ட இறைவன் ஒருவித கலக்கத்தை உணர்ந்திருப்பார் போலும்!!அவள் மனதில் ஒரு நொடி ருத்ராவின் முகம் வந்துப் போனது.

"தேவையில்லாத சலனங்கள் எனக்கு எதுக்கு?இதனால் எனக்கு எந்தச் சுகமும் இல்லை.எனக்கு தேவையெல்லாம் என் கடமையை முடிக்கணும்!அது பூர்த்தியான பிறகு,அதற்கு மேலும் வாழணும்னு கூட எனக்கு ஆசையில்லை.மாயா மாயைகளை கடந்தவள்!எக்காரணம் கொண்டும் ஒரு சின்ன வலைக்குள்ளே என்னை நான் அடக்க விரும்பலை!என் சக்தி நீங்க தான்!எனக்குள்ள இருக்கிற பலம்,பலவீனம் எல்லாம் நீங்க தான்!எனக்கு உங்களுடைய வைராக்கியம் தேவை!"

"காதல் சாதாரணமான பந்தம் இல்லை!அதோட பவித்ரம்,அக்னியை விட உயர்ந்தது!ராணாவோட கண்ணுல உண்மையை பார்த்தேன்!அதில் பொய்யில்லை!அவனோட வைராக்கியத்துக்கு முன்னாடி என் பிடிவாதம் நிச்சயம் எடுபடாது!அதனால வேண்டுறேன்,எனக்கு உங்க வைராக்கியத்தை கொடுங்க!மாயா தான் ஜெயிக்க எந்த எல்லைக்கும் போவாள்!"-என்றவள் சற்றே முன்னேறி இறைவனின் கழுத்தில் சூட்டப்பட்டிருந்த உருத்திராட்ச மாலையை கழற்றி தன் கழுத்தில் சூடிக்கொண்டாள்.

"நான் சுக வாழ்க்கையை ஏற்ற ஒரு சந்நியாசி!அதை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்!"-வாக்களித்துவிட்டு திரும்பி நடந்தாள் மாயா.

அங்கீகாரம்!!மனிதன் மட்டுமின்றி மண்ணுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் பெற துடிக்கும் தகுதி!!மண்ணில் மனிதன் ஒரு பிறக்கும் வேளை,அவனது விதியானது செய்த வினைகளால் உருவாக்கப்படுகிறது.சொர்க்கம்,நரகம் இரண்டையும் தனக்குள்ளே கொண்டு பிறக்கிறான் மனிதன்.சிறு வயது முதல் நான் துன்பத்தை மட்டுமே அனுபவித்தேன் என்று உரைப்பவ் பலரை கேள்வியுற்று இருக்கிறேன்!துயர் கடலில் மூழ்கிய அந்நபரை பழிக்க,ஆற்றிய பாவங்களின் தர்மமே உன்னை வதைக்கிறது என்று தூற்றுவார் பலருண்டு அகிலத்தில்!!உண்மைதான்!!ஒரு பங்கு மட்டும்!நாணயத்தின் இரு முகங்களாய் மற்றொரு முகமும் வேதனைகளுக்கு உண்டு,அது மகத்துவமான செயல் ஒன்றை பூர்த்தி செய்யும் பணியை இறைவன் ஒருவனுக்கு அளிக்க எண்ணினால்,அவனை துன்பம் என்னும் கடலில் மூழ்க செய்து நீச்சல் பழக வைப்பார்.அளப்பரிய காரியம் ஆற்றும் ஒருவன் எச்சூழலிலும் சஞ்சலம் கொள்ளக் கூடாதல்லவா??ஆனால்,மனிதனில் சிலரோ இதுதான் விதி என்று எண்ணம் கொள்கின்றனர்.உலக வாழ்வினை உன்னதமாய் வாழ்வதும் ஒருவித சந்நியாசமே!பற்றற்ற வாழ்க்கையிலும் பற்று இருக்கலாகாது என்ற பற்று இருக்கத்தான் செய்கிறது!தாம் வாழ்வனைத்தும் துன்பத்தில் திளைப்பவர் என்றால் பெருமிதம் கொள்ளுங்கள்!மகத்துவமான பணி தம் பாதம் பணிய காத்திருக்கிறதல்லவா????

"க்ஸ்யூஸ்மீ சார்!"

"வா குரு!"

"அ..அர்ஜூன் சார் வந்திருக்கார்!"-தனது மடிக்கணினியில் பரபரப்பாய் ஏதோ செய்து கொண்டிருந்தவன் அதை அப்படியே நிறுத்தினான்.

"வர சொல்லு!"-என்றப்படி தன் கணினியை அணைப்பதற்குள் உள்ளே நுழைந்திருந்தான் அர்ஜூன்.

"பிரதாப்!"-சுழலும் நாற்காலியில் சாய்ந்தப்படி,எச்சலனமும் இல்லாமல் அவனைப் பார்த்தான் ருத்ரா.

"மாயாக்கிட்ட என்ன சொன்ன?"

"............."

"என்ன சொன்னன்னு கேட்டேன்!"

"ஏன்?அவ சொல்லலையாக்கும்?"

"எவ்வளவு தைரியம்டா உனக்கு?என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?"-அவன் தன் நெஞ்சில் கை வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.