"அது சாத்தியமில்லாதது!மகேந்திரன் சார் அளவுக்கு மாயாவை யாராலும் பார்த்துக்க முடியாது!"
"மாயாவோட வைராக்கியத்தை உடைக்கிற சக்தி மகேந்திரன் அங்கிளோட அன்புக்கு மட்டும் தான் உண்டு!உனக்கு மாயா வேணும்னா நீ மாயாவோட வைராக்கியத்தை உடைத்து தான் ஆகணும்!"
"மாயாவோட எனக்கு பிடித்ததே!அவளோட அந்தத் திமிர் தான் என்னை ஒட்டுமொத்தமா சாய்த்தது!நான் அந்தத் திமிரை என் கூடவே வைத்தக்கொள்ள விரும்புறேன்!"-அர்ஜூனிடம் பேச்சில்லை.
"அவ என்னை காதலிக்கலை என்றாலும் பரவாயில்லை.எனக்கு அந்தத் திமிர் வேணும்!"
"மாயா உண்மையிலே ரொம்ப லக்கி!"-மென்சிரிப்போடு கூறினான் அர்ஜூன்.
இறைவனின் கோவில் பிரகாரத்தில் மரத்துப் போன இதயத்துடன் மூன்றாவது முறையாக வலம் வந்துக் கொண்டிருந்தார் காயத்ரி.கொளுத்தும் அக்னி வெயிலின் வெப்பம் அவர் மனதின் வேதனைகளின் வெப்பத்தைக் காட்டிலும் வீரியம் குறைந்ததாகவே தோன்றியது.மூன்றாம் சுற்றினை பூரணமாய் முடித்தவர் சந்நதியின் வெளியே தன்னுடன் வந்திருந்த மித்ராவின் அருகே அமர்ந்தார்.
"எதுக்கும்மா இந்த வெயிலில் இப்படி வருத்தப்படுறீங்க?"-ஆறுதலாக கேட்டாள் மித்ரா.
"நான் செய்த தவறுகளுக்காக முடிந்த அளவு நானே தண்டனை தேடிக்கிறேன்மா!அப்படியாவது மாயாவோட கோபத்தை அந்த ஈசன் தணிக்கிறாரான்னு பார்க்கிறேன்."-சில காலங்களாய் மனதிற்கு நெருக்கமாய் ஆனவளிடம் தன் புதல்வியிடம் உரைப்பதைப் போல் தன் கவலைகளை கூறினார் காயத்ரி.
"நீங்க கவலைப்படாதீங்கம்மா!மாயா அக்கா நிச்சயம் மனசு இறங்கி வருவாங்க!"-எந்தவித சம்பந்தமும் இன்றி வாழ்ந்தாலும்,தனது புதல்வியை தமக்கையாய் ஏற்ற மித்ராவின் முகத்தை பாசத்தோடு வருடினார் காயத்ரி.
"அதான் என் வேண்டுதலும்!ஒரு சாதாரண அம்மாவா எனக்கும் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணணும்,பேரன் பெயரத்தி எடுக்கணும்னு ஆசை இருக்கு!"-மன விருப்பத்தை கூறியதும் சட்டென ருத்ராவின் நினைவு அவள் மனதில் எட்டிப் பார்த்தது.
"ஆனா,மாயா அந்தக் கனவுகளை எல்லாம் வளர்த்து வைத்திருக்காளான்னு தெரியலை!எல்லா தப்பும் என் மேலே தான்.நான் அவங்களை விட்டு வந்திருக்க கூடாது!"-கண் கலங்கியது அவருக்கு!!
"மா!அழாதீங்க!உங்க விருப்பம் நிச்சயம் ஈடேறும்!கவலைப்படாதீங்க!"-இயன்றவரை ஆறுதல் கூற முயன்றாள் மித்ரா.
"சரிம்மா!வா கிளம்பலாம்!நேரமாயிடுச்சு!"-காயத்ரி பரிந்துரைக்க,அந்த ஆலயத்தினை தியாகித்துப் புறப்பட்டனர் இருவரும்!!
ஆரவாரமற்ற நெடுஞ்சாலையில் வெப்பக் காற்றினை கிழித்து கொண்டு சென்றது அவர்களின் கார்!!
யாரும் தெளிந்திருக்க மாட்டர் நிகழவிருக்கும் விபரீதம் குறித்த துருப்புச்சீட்டு அவர்கள் கடந்துப் போகம் பாதையில் தான் உள்ளது என்பதை!!
தொடரும்
{kunena_discuss:1104}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.