(Reading time: 8 - 16 minutes)

"மாயாவை தான்!"-சட்டென அவன் கூறிவிட சிலையாகிப் போனான் அர்ஜூன்.சில நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் இருவரும்!!பின்,அதனாலோ என்னவோ ஒரு சமயத்தில் இருவரும் பலமாக சிரிக்க,குரு திகைத்து நின்றான்.

"ப்ராடு!சொல்லவே இல்லை!"

"அவ எப்படியும் உன்கிட்ட சொல்லுவான்னு தெரியும்!அதான்!"

"ஆளைப் பார்!எரியுற நெருப்புல எண்ணெய்யை வேற ஊற்றிவிட்டுட்ட!இனி என்ன செய்ய போறான்னே தெரியலை!"

"............."

"எப்படிடா?"-நம்ப முடியாமல் கேட்டான் அர்ஜூன்.

"போடா!"-அவன் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம் விளைந்தது.

"கடவுளே..!சகிக்கலை!"-நடப்பவற்றை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் குரு.

"ஓ..குரு!நீ இங்கே தான் இருக்கியா?"

"............."

"என்ன நடக்குதுன்னு புரியலையாப்பா?"

"புரிந்திருந்தா ரகுராமிடம் என்னிக்கோ பற்ற வைத்திருப்பானே!"-கேலியாக கூறினான் அர்ஜூன்.

"சார்??"

"அடடா!எப்படி நடிக்கிறான் பார்டா!நேஷ்னல் அவார்ட் கொடுக்கலாமா?"-என்றப்படி குருவிடம் வந்தான் ருத்ரா.

"ஆஸ்கரே தரலாமே!"

"ம்!!அதுவும் சரிதான்!"

"சா..சார்!என்ன..சொல்றீங்க?"

"தம்பி!நீ பிசினஸ்ல இப்போ தான் நடை பழக ஆரம்பித்திருக்க!நாங்க அப்படி இல்லை!எப்படி மாயாவுக்கு போன் பண்ணி,என்னைப் பற்றி சொல்லி,பழியை அர்ஜூன் மேலே போட்டு,என்னை மாயாவுக்கு எதிரா திசை திருப்ப வைத்தால்,நான் அவளை அழித்திடுவேன்னு உன் பாஸ் ஐடியா கொடுத்தாரா?"

"............."

"தெரியும்டா டேய்!என்னை அவ்வளவு முட்டாளா நினைத்தாயா?நீங்க ஒரு விஷயம் யோசித்தால்,நாங்க யோசிக்க மாட்டோமா?மாயாக்கிட்ட அர்ஜூன் சேர்ந்த கொஞ்ச நாளிலே எல்லா உண்மையும் எனக்கு தெரந்துவிட்டது!நாங்களும் மனசுவிட்டு பேசிட்டோம்.இது பத்து வருட நட்பு!எங்களோட 17 வயசுல ஆரம்பித்த பயணம்!இதை உடைக்க யாராலும் முடியாது புரியுதா தம்பி!"

"............"

"அப்பறம்,ரகுராமிடம் போய் அவருக்கு நன்றி சொன்னேன்னு சொல்லிடு!ஏன்னா,மாயாவை அறிமுகம் செய்து வைத்து என்னையும் கமிட்டடா மாற்றி இருக்கார்.அந்த நன்றியை நான் மறக்க மாட்டேன்னு சொல்லிடு!"

".............."

"கிளம்புங்க தம்பி!இனி கதையில உங்களுக்கு இடமில்லை."-அதிர்ந்துப் போய் நின்றிருந்தவன்,மெல்ல அந்த அறையை தியாகித்தான்.

"டேய்!வேற என்னடா என் செல்லம் சொன்னா?"-ஆர்வமாக விசாரித்தான் ருத்ரா.

"ஆ.. அசிங்க அசிங்கமா திட்டி அனுப்பினாள்!"

"என்னடா சொல்ற?"

"மாயா வாழ்க்கையில நல்லது நடக்கணும்னு ஆடைப்படுறேன்டா!ஆனா,அவ காதலையே வெறுக்கிறாள்!உண்மையை சொல்லணும்னா பயப்படுறாள்!சின்ன வயசுல இருந்தே ஏமாற்றத்தை சந்தித்து வளர்ந்தவள் இல்லையா?"

"ச்சீ...ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டால்ல!"

"ரொம்ப...!அந்தப் பயத்தை வைராக்கியம் என்ற போர்வையில மறைக்க முயற்சி பண்றா!அவ எதாவது முடிவு எடுக்கிறதுக்குள்ள மாயாவை கல்யாணம் பண்ணிக்கோடா!"

"ஏன்?என்ன முடிவு எடுக்கப் போறா?"-மாயாவின் புதுவித அரணை அவன் கூற விழையவில்லை.

"என்ன வேணும்னாலும் எடுக்க வாய்ப்பிருக்கு!"

"கவலைப்படாதே!மாயா என்னுடையவள்!27 வருடமா அவளை பிரிந்திருந்திருக்கேன்!இனிமேலும் பொறுமை காக்க எனக்கு மனசில்லை!"

"வசனத்தை விடு!செய்து முடி!மாயா மனசுல நீ நுழைய ஒரே வழி தான் இருக்கு!"

"என்ன அது?"

"அவ இழந்த அவளோட அப்பாவோட அன்பை நீ அவளுக்கு கொடுக்கணும்!"-ருத்ராவின் மனதில் ஒரு திகில் பரவியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.