(Reading time: 10 - 19 minutes)

15. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

ரும் இருட்டு!!சுற்றிலும் எங்கும் இருள் மட்டுமே நிறைந்திருந்தது!!வானிலிருந்து மழை பொழிந்து அந்த இருளை பயங்கரமாய் வெளிப்படுத்தி கொண்டிருந்தது.வானின் இடி முழக்கம் மனதினை இறுகப் பற்றும் அச்சத்தை விதைத்திருந்தது.மலை உச்சி!!சரியாக 1000 அடிக்கு மேல் செல்லும் ஆழம்!!!வதம் செய்ய ரௌத்திரத்தோடு தாண்டவமாடிய ஈசனின் 18 அடி சிலை!!!சுற்றியும் வனம்!!!தூக்கி எறியப்பட்டு இறைவனின் திரிசூலத்தில் சரணடையும் மாங்கல்யம்!!அலறல் ஓசை!!முகம் முழுதும் செங்குருதி ஆராதனையாய் தெரிக்க,கையில் நெடிய வாளுடன்,இரக்கமற்ற முகத்தோடு காளி அவதாரமாய் நின்ற மாயா!!!

"மாயா!"-நன்றாக உறங்கி கொண்டிருந்த காயத்ரி,அலறி அடித்தப்படி எழுந்து அமர்ந்தார்.சுற்றும் யாருமில்லை!!ஜன்னலின் திரைச்சீலை மட்டும் காற்றில் அசைந்துக் கொண்டிருந்தது.முகம் எல்லாம் வியர்வை துளிகள்!!அவரை அறியாமல் கண்ணீர் கண்களில் இருந்து வழிந்துக் கொண்டிருந்தது.

"மாயா!"-மனமுடைய அழுதார்.மணி அதிகாலை ஐந்து என்று காட்டியது!!

கண்கள் விட்டு இன்னும் அந்தக் காட்சி அகலவில்லை.

'என்ன நடக்க இருக்கிறது?மாயாவிற்கு ஏதேனும் ஆபத்து நிகழ உள்ளதா?'பதறியது தாயின் மனம்.

"கடவுளே!நான் என்ன செய்வேன்?"-அவசர அவசரமாக தனது கைப்பேசியை எடுத்து,அர்ஜூனுக்கு அழைப்பு விடுத்தார்.

நீண்ட நேரம் கழித்து,கைப்பேசியை எடுத்து காதில் வைத்தான் அவன்.

"அர்ஜூன் குமார்!"

"அர்ஜூன்...நா..நான்..காயத்ரி பேசுறேன்பா!"-பதறியப்படி பேசினார் அவர்.

"மா!என்னாச்சு?ஒரு மாதிரி பேசுறீங்க?"

"ம..மாயா..மாயா நல்லா தானேப்பா இருக்கா?"

"ஏன்மா?மாயாவுக்கு என்ன?"

"ஒரு கெட்ட கனவு கண்டேன்பா!"-பேச முடியாமல் தடுமாறினார் அவர்.

"இருங்கம்மா!டென்ஷன் ஆகாதீங்க!நான் மாயாவுக்கு கால் பண்றேன். கான்பிரன்ஸ்ல போடுறேன்!"

"ஆ...!"-சில நொடிகள் கடந்திருக்கும்,

"ஹலோ!"-உறக்கக் கலக்கத்தில் இனிமையாக ஒலித்தது மாயாவின் குரல்.

"ஏ..மாயா!எங்கே இருக்க?"

"வீட்டில!"

"எதுவும் பிரச்சனை இல்லையே!"

"இல்லையே!என்ன?"

"ஒண்ணுமில்லை!சும்மா தான் கேட்டேன்!"

"ப்ச்...!தூங்கும் போது டிஸ்ட்ரப் பண்றீயே அர்ஜூன்!"

"ஸாரி...ஸாரிம்மா!நீ தூங்கு!குட் நைட்!"

"குட் நைட்!"(ம்கூம்..!ஐந்து மணிக்கு குட்நைட்டாம்!)

"மா!கேட்டீங்களா?"

"ரொம்ப தேங்கஸ் அர்ஜூன்!"

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கும்மா?அப்படி என்னம்மா ஆச்சு?"

"நேர்ல சொல்றேன்பா!எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?"

"என்னம்மா?"

"மாயாவோட ஜாதகத்தை கொஞ்சம் வாங்கிட்டு வர முடியுமா?"

"ஜாதகமா?"

"ம்..கொஞ்சம் வாங்கிட்டு வரீயா?"

"சரிம்மா!வரேன்!பத்து மணிக்கு மொவுண்ட் ரோடு காப்பி ஷாப்க்கு வந்துடுங்க!"

"ம்..சரி கண்ணா!"-இணைப்புத் துண்டிக்கப்பட்டது.மனம் முழுதும் கவலைகள் சூழ்ந்திருந்தன.

செங்குருதியினை முகம் முழுதும் பூசி நின்றவளின் பிம்பம் சாதாரணமாய் எடுத்துக் கொள்ளும் நிகழ்வாய் தோன்றவில்லை அவளுக்கு!

"உடனடியா வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போகணும்!சங்கரா..என் மாயாவுக்கு எதுவும் ஆகக் கூடாது!நீ தான் கூடவே இருந்து அவளை பாதுகாக்கணும்!"-மனமுருக வேண்டினார் அத்தாய்!!

"மாயா!"-வழக்கமாக உண்ணும் இறைவனின் நெய்வைத்தியத்தை சுவைத்துக் கொண்டிருந்தவள் எதிரே வந்தமர்ந்தான் அர்ஜூன்.

"தேவசேனா!அர்ஜூனுக்கு டிபன் எடுத்து வை!"-உத்தரவிட்டாள் அவள்.

"தினமும் இவ்வளவு தித்திப்பை சாப்பிடுற?ஆனா,குண்டாகவே மாட்டுற?"-அவள் புருவம் சுருக்கி அவனை பார்த்தாள்.

"என்ன விஷயம்?"

"அம்மா...!அம்மா!ஒண்ணு வாங்கிட்டு வர சொன்னாங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.