(Reading time: 10 - 19 minutes)

"ஆனா!மாயா அவர் உயிரோட இருக்கும் போதே பிறந்துட்டா!"-அதைக் கேட்டவர் பலமாக சிரித்தார்.

"நடக்கிறது எல்லாம் தீர்மானிக்கப்பட்டது!அன்னிக்கு பாரத யுத்தம் திரௌபதி பிறப்பிற்கு முன்னாடியே தீர்மானிக்கப்பட்டது!ராவணன் வதம் சீதையின் பிறப்பிற்கு முன்னாடியே தீர்மானிக்கப்பட்டது!அதே மாதிரி தான் இதுவும்!"

"மனமுருக இறைவனை வணங்குறவங்க வேதனை இறைவனோட வேதனை!இந்த ஸ்திரியோட தந்தையோட ஒவ்வொரு துளி கண்ணீரும் மகத்துவமானது!அதனோட விளைவு தான் இந்தக் கன்னிகை!"

"வாழ்க்கையில பிடிப்பு இல்லாம வாழுற இவளுடைய வாழ்க்கையில வசந்தம் வீச வாய்ப்பில்லை!எதற்கும் பயப்படாதவள்!எமனே எதிர் நின்றாலும் எதிர்க்கிற துணிச்சல் கொண்ட கன்னிகை!நரகம் இவளுடைய வசிப்பிடம்!மரணம் இவள் சூடுற அணிகலன்!"-அதிரும் வண்ணம் கூறினார் அவர்.

"கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஞானம் கொண்டவள்!"

"மாயாவோட வாழ்க்கையில கல்யாணம்...?"

"இவளுக்கு மாங்கல்ய பிராப்தி இல்லை!"-மீண்டும் அதிர்ச்சி!

"ஆனா,இவளுக்கு விவாஹம் நடந்தால்,இவளுடைய கழுத்தில மாங்கல்யம் ஏறினால்,இந்த ஸ்திரி உயிரோட இருக்கிற வரை அந்தப் பையனுடைய நிழலைக்கூட எமனால நெருங்க முடியாது!திருமணம் நடந்தால் சந்தானமும் குறையிருக்காது!இவ மூலமா உலகுக்கு வரும் வாரிசு புது சரித்திரத்தை எழுதும் வல்லமை பெற்று பிறக்கும்!செல்வம்,ஞானம்னு சகல சித்திகளையும் தன்னுள்ளே அடக்கினவள் இவள்!மரண சித்தி உட்பட!"

"என்ன சொல்றீங்க சாமி?"

"இவளுக்கான கடமை பூர்த்தியான பிறகு,இவள் உலக வாழ்க்கையை தியாகம் செய்வாள்!அதுவும் இன்னும் சில காலங்களில்!!"

"இவளால உன் மாங்கல்யத்துக்கு ஆபத்திருக்கு!"-உச்சக்கட்ட அதிர்ச்சியை அளித்தார் அவர்.

"அதுவும் நீயே விரும்பி விதவை கோலம் ஏற்ப!இவளை யாராலும் தடுக்க முடியாது!அதை ஞாபகம் வைத்துக்கொள்!"

"இதற்கு பரிகாரமே இல்லையா?"-கண்ணீரோடு வேண்டினார் அவர்.

"இருக்கு!இந்த ஸ்திரியோட கோபத்தை தணிக்கணும்!"

"............"

"அது நடக்காத காரியம்!இருந்தாலும்,உன் வேதனைகளுக்காக அந்த வாய்ப்பு அமையும்!அதை பயன்படுத்தி இவளை உலக வாழ்க்கையோட ஒன்றிணைய வைத்தால்,இவ உயிர் பிழைக்கும்!இல்லைன்னா...."

"இல்லைன்னா?"

"வருத்தமான விஷயம்!ஆனா,சொல்லி தான் ஆகணும்!இந்த ஸ்திரி புனிதமானவள்!உலகத்துல இருக்கிற எந்தப் பாவப்பட்ட கரமும் இவளை தீண்ட முடியாது!அதனால,இவளுடைய இறுதி சடங்கு செய்ய கூட இவளுடைய சரீரம் உங்களுக்கு கிட்டாது!"-அழுத்தமாக கூறினார் அவர்.

"அன்னிக்கு மகா காளியோட கோபத்தை தணிக்க ஈசனோட உதவி தேவைப்பட்டது!அதே மாதிரி உனக்கும் உதவி கிட்டும்!அதை புத்திசாலித்தனமா பயன்படுத்துறதுஉன் கடமை!"

"இன்னிக்கு இந்த ஜாதகத்தை படித்ததால் என் பாவகர்மங்கள் எல்லாம் என்னை நீங்கிப் போயிடுச்சு!கவலைப்படாதே!அந்த இறைவன் எப்போதும் துணையா இருப்பார்.சுபமஸ்து!!"-ஆசி வழங்கி அனுப்பினார் அவர்.

மாயாவினை குறித்து அவர் கூறியது அனைத்தும் நிகழும் என்றால்,எனில்,ருத்ராவின் காதல் சாம்பலாவது உறுதி அல்லவா??காயத்ரியின் நிலை அகிலத்தில் எந்தயொரு தாய்க்கும் நிகழ கூடாது என்பதே என் வேண்டுதல்!!மனம் வருடும் மயிலிறகாய் வந்த காதல் வாழ்வும் கரைந்துப் போக,அதன் சாட்சியாய் வந்தவளுக்கும் நிகழப் போகும் கோரம் உண்மையில் எவ்வளவு தைரியமான தாயையும் கலங்கடிக்கும் வல்லமை கொண்டது.

"கடவுளே!மாயா என் கூட சேரலைன்னாலும் பரவாயில்லை!என் பொண்ணுக்கு எதுவும் ஆக கூடாது!"-மன வறட்சியோடு கல்லாய் அவர் வெளி வர,அவர் கண்களில் யாவரும் வணங்கும் ஈசனின் லிங்க வடிவம் பல ஆராதனைகளுடன் தென்பட்டது.

கல்லாய் போன உணர்வுகளுடன்,இறைவனின் பாதம் சரணடைந்தார் அவர்.

"மாயாவுக்கு நீங்க தான் உலகம்!என்னைவிட,அவரைவிட மாயாவை பற்றி சகலமும் தெரிந்தவர் நீங்க மட்டும் தான்!என் பொண்ணை காப்பாற்றுங்க!அவ வாழணும்!எந்த ஒரு சுகத்தையும் அனுபவிக்காம அவ மரணிக்க கூடாது!நான் இதுவரை இவ்வளவு துணிச்சலா கேட்டதில்லை.ஆனா,எனக்கு வேற வழி தெரியலை!மாயாவோட வைராக்கியத்தை,அவளுடைய பிடிவாதத்தை உடைங்க!அவ வாழணும்!கணவன் குழந்தைங்கன்னு சந்தோஷமா அவ வாழணும்!அவ வாழ்க்கையில என்னால வசந்தத்தைக் கொண்டு வர முடியலை!ஆனா உங்களால முடியும்! மாயாவோட பிடிவாதத்தை உடைங்க!எனக்கு என் பொண்ணு வேணும்!என் மாயாவை எனக்கு திருப்பிக் கொடுங்க!"-கல் மனமும் கரையும் அளவு கதறினார் காயத்ரி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.