(Reading time: 16 - 32 minutes)

பூர்வியும் நடந்து தீவின் பின் பக்கம் வந்திருந்தாள். அங்கிருந்து பார்த்தால், மற்ற தீவு மிக அருகில இருப்பது போல் தெரிந்தது. சரி சிறிது தூரம் தண்ணீரில் நடந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து, நீரில் இறங்கி நடக்க துவங்கினாள். நீர் மிக தெளிவாக வெளிர் நீல நிறத்தில் அழகாக இருந்தது. அப்படியே நடந்து மற்ற தீவை அடைந்தாள்.  அந்த தீவும் அழகாக இருந்தது. இதை ஒரு போட்டோ எடுத்து சென்று ஸ்ருதியிடம் காண்பிக்கலாம் என நினைத்த பொழுது, போனை போட்டிலேயே மறந்து விட்டு வந்தது நினைவு வந்தது,  இருப்பினும் மெல்ல நடக்க துவங்கினாள். அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

சிறிது நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருட்ட துவங்கியது. இங்கு எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும். அதனால் பூர்வி திரும்பி நடக்க துவங்கினாள்.

பயணியர் அனைவரும் அந்த சிறிய தீவை சுற்றி முடித்ததும், மழை மேகமாக இருந்தால், கிளம்பலாம் என முடிவெடுத்து ஆரிப் அனைவரையும் அழைத்து போட்டில் ஏறும் படி கூறினான். அனைவரும் ஏறினர். ஆரிப் எல்லோர் தலைகளை எண்ணி ஒன்று குறைவதை கண்டான். யார் குறைவது என்று அப்பொழுது  தான் சரியாக பார்த்து பூர்வி இல்லாததை கண்டு அவளது செல் போனை அழைத்தான்.

அது போட்டிற்குள்ளேயே அலறியது.  ஆரிப்க்கு டென்ஷன் ஏறியது. அதற்குள் மழையும் வலுக்க துவங்கியது. ஆரிப் உடனே போனில் எம்.டி நாஷிடை அழைத்தான். அவர் எடுக்கவில்லை. அடுத்து என்ன என்று யோசித்த பொழுது இந்தர் ரெசார்டில் இருப்பது நியாபகம் வந்தது. உடனே செல்லில் இந்தரை அழைத்தான்.

ங்கு ரெசார்டில் இந்தரின் போனில் மெல்லிசை ஒலித்தது. அவன் வேலையாக இருந்ததால் ஸ்கிரினில் யார் என்று பார்க்காமல் எடுத்து “ஹலோ “ என்றான்.

“இந்தர் அம்மா பேசறேன்” என்று சம்யுக்தா பேசினார்.

“ சொல்லுங்க மா........

“ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல தான் கூப்பிட்டேன்.”

“என்னம்மா?

“உன் தாத்தா இன்று போனில் பேசினார். உனக்கு கல்யாணத்திற்கு ஒரு நல்ல பொண்ணு பார்த்து வைத்து இருக்காராம். உன்னிடம் சொல்ல சொன்னார்.”

“என்னம்மா விளையாடறிங்களா? நான் எப்போ கல்யாணத்துக்கு ரெடி சொன்னேன்?

“அதெல்லாம் உன் தாத்தா கிட்ட பேசிக்கோ”

“மா அவர் சொன்னா நா மறுபேச்சு பேச மாட்டேன்னு சொல்றிங்களா?

“இந்தர் கண்ணா, நானோ உன் தாத்தாவோ உனக்கு எதிரிங்க கிடையாது. நானும் ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்கேன். தாத்தாவும் அதை தான் கேட்டார் முதலில் , நீ யாரையாவது விரும்பரியான்னு. அதனால் உன் விருப்பத்துக்கு தான் முதல் மரியாதை எல்லாம். நீ யாரையும் சொல்லலைன்னா, அவர் முடிவு பண்ண பொண்ணு தான்னு சொல்லிட்டார். அப்புறம் உன் இஷ்டம்.

“மா......... சரி நான் அப்புறம் பேசறேன், எனக்கு வேற கால் வருது.”

“சரி இந்தர் கண்ணா யோசி. பை”

இந்தர் சாதரணமாக சம்யுக்தா போனை பாதியில் கட் செய்ய மாட்டான். ஆனால் இந்த பேச்சை அவனால் தொடர முடியவில்லை.

அடுத்த காலை அட்டென்ட் செய்த போது

“என்ன ஆரிப், எனி ப்ராப்ளம்? என கேட்டான்.

“ஆமா சார், முதலில் எம்.டி யை தான் கூப்பிட்டேன் அவர் எடுக்கவில்லை சாரி சார் அதனால் தான் உங்களை கூப்பிட்டேன்.

“இட்ஸ் ஓகே, என்ன ப்ராப்ளம்ன்னு சொல்லு.”

“சார், வந்த இடத்தில், கூட வந்த மானேஜர் மேடத்தை மட்டும் காணோம் சார்.”

“எந்த மேனஜர் மேடம்?

“பூர்வஜா மேடம் சார்”, குட பாண்டோஸ் முழுசா தேடிட்டேன் சார். அவங்க பொடு  பாண்டோஸ் போய்ட்டாங்க போல “

“நீ சொல்லலையா அங்க போக கூடாதுன்னு?

“சார் நான் சொன்னேன் சார், அவங்க கேட்கலை போல, இங்க இப்போ மழை வேற பெருசா பெய்யுது, கேஸ்ட் ஏல்லாம் வெய்ட் பன்னட்றாங்க,  நான் என்ன செய்ய சார்? ஆரிப் அழாத குறையாக கேட்டான்..........

“நீ , கெஸ்ட்டை எல்லாம் கூட்டிக் கொண்டு கிளம்பு , நான் பார்த்து கொள்கிறேன்” என கூறிக் கொண்டே அவனது ஸ்பீட் லாஞ்சை அடைந்தான்.

இந்தருக்கு படபடப்பாக இருந்தது. பூஜா திரும்புவதற்கு மறுபடி நீரில் இறங்கி இருக்க கூடாது என வேண்டி கொண்டான்.

அங்கே பூர்வி  திரும்பி போக நினைத்த பொழுது வானம் இருண்டு நல்ல மழையும் ஆரம்பமாகி இருந்தது. அவசரமாக திரும்பி வந்து பார்த்த பொழுது நீரின் மட்டம் அதிகம் கூடி இருந்தது. இருப்பினும் நீரில் கால் வைத்தாள், ஆனால் அது ஒரு புறமாக இழுப்பது தெரிந்தது. உடனே கரை ஏறி விட்டாள்.

முழுவதுமாக இருட்டி நேரமும் சென்று கொண்டே இருந்தது. மழையில் முழுவதுமாக நனைந்து குளிர் வேறு வாட்டியது. என்ன செய்வது என அறியாமல் சுருண்டு ஒரு மரத்தடியில் அமர்ந்தாள் பூர்வி.

NAU

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 09

Episode 11

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.