(Reading time: 11 - 22 minutes)

11. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

ரவு நேரம், மழையில்  முழுவதுமாக நனைந்து, கும் இருட்டில்,  காற்று வேறு, வேகமாக அடித்து, குளிரை ஊசி போல், எலும்பு வரை குத்தியது பூஜாவுக்கு......... சுருண்டு அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தாள். கண்ணு எட்டிய தூரம் வரை வெளிச்சம் தெரியவில்லை. மனித நடமாட்டமே தெரியவில்லை.

இந்தர் மேல் தான் கோபம் வந்தது. இரண்டு நாள் முன்பே அவளது ராஜினாமாவை அவன் ஏற்றிருந்தால் தனக்கு இந்த நிலை வந்திருக்காது என நினைத்தாள். ஆனால் அவன் அதை ஏற்றிருந்தாலும் வருத்தமாக தான் இருந்திருக்கும் எனவும் நினைத்தாள்.

கடல் அலையும் ஆர்பரித்து எழுந்து அதிக சத்தத்தை எழுப்பியது. காற்றும் புயல் போல் வேகமாக அடித்து, மரங்களுக்கு ஊடே புகுந்து ஊ...ஊ ...... ஒலி எழுப்பியது.

இந்த புயல் காற்றில் யாரும் வந்து தன்னை காப்பாற்ற கூட முடியாது என புரிந்தது பூஜாவுக்கு....... யாரும் வந்தாலும் திரும்பி செல்லவும் முடியாது. அதற்கு அவர்கள் வராமல் இருப்பதே மேல் என நினைத்து கொண்டிருந்தாள்........... அவர்களும் வந்து தன்னுடன் சேர்ந்து கஷ்டபடுவதற்கு தான் மட்டுமே இதை சகித்து கொள்ளலாம் என நினைத்தாள்........

அவர்களது ரேசார்டிலிருந்து அரை மணி நேர பயணத்திலிருந்த தீவிற்கு கடலின் சீற்றம் காரணமாக மிகவும் தாமதமாகவே வந்து சேர முடிந்தது. அதுவும் இந்தர் கிளம்பும் அவசரத்தில் அவனுகிருந்த பதற்றத்தில் உடன் யாரையும் அழைத்தும் வரவில்லை.

இந்தர் ஒருவழியாக அந்த புயலில் படகை ஓட்டி வந்து நேராக பொடு பான்டோசையே அடைந்தான். அங்கிருந்த மக்கள் அவனுக்கு அதிகம் பழக்கம் இல்லாதவர்கள் தான், இருப்பினும் அவர்கள் உதவியுடன் மட்டுமே பூஜாவை தேட முடியும் என்பதால், தீவை அடைந்ததும் நேராக அட்டால் (Attol) ஆபிஸை அடைந்தான்.

நம் ஊரில் மாவட்டம் என்று சொல்வது போல், இங்கு சில தீவுகள் கொண்ட தீவு கூட்டத்தை, அட்டால் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு அட்டாலிலும், அரசு சுகாதார மையம் ஒன்றும், அரசு பள்ளி ஒன்றும், அரசு அலுவலகம் ஒன்றும், இயங்கும்.

அந்த அலுவலகத்தை இந்தர் அடைந்த பொழுது நன்கு  இருட்டி இருந்தது. உள்ளே இருந்த காவலாளி இடம், அட்டால் தலைமை அலுவலகரை பார்க்க வேண்டும் என கூறினான்.

காவலாளியும் அவனை சிறிது காத்திருக்கும் படி சொல்லி சென்று, தலைமை அலுவலகரை அழைத்து வந்தான். அவரிடம் தான் யார் என்பதை கூறி

“இன்று மாலை பக்கத்து ஆள் இல்லா தீவிற்கு பிக்னிக் வந்தவர்களில் ஒரு பெண்ணை காணோம், அவள் இங்கு வந்திருக்க கூடும் என எண்ணி இங்கு தேட வந்துள்ளேன். தாங்கள் உதவ முடியுமா?” என கேட்டான்......

இந்தர் அவர்கள் மொழியான, திவைஹி மொழியில் பேசியதால் அதற்கு நல்ல பலன் இருந்தது. உடனே அவரும் காவலாளியை, ஊருக்குள் அனுப்பி, ஐந்து, ஆறு பேரை அழைத்து வர செய்தார். அனைவரும் பூஜாவை தேடி சென்றனர்.

தீவின் வட பகுதியில் மட்டும் மக்கள் வசித்து வந்தனர்.தென் பகுதி மரங்கள் அடர்ந்து காடாக காட்சி அளித்து. தென் பகுதியை ஒட்டியே குட பாண்டோஸ் இருந்தது. அதனால் அனைவரும் சேர்ந்து அப்பகுதியில் தேடுதலை ஆரம்பித்தனர்.

அந்த குளிர்ந்த காற்று, மழையில் தேடுவதும் கடினமாகவே இருந்தது. இருந்தும் அணைத்து கடவுளிடமும் வேண்டி கொண்டான், பூஜா நல்லபடி கிடைக்க வேண்டும் என்று. தான் எந்த அளவிற்கு பூஜாவை விரும்புகிறோம் என்று இந்தருக்கு நன்கு புரிந்தது. அவள் இல்லாமல், தனது வாழ்க்கை நரகமாக தான் இருக்கும் என புரிந்தது. எந்நிலையிலும் பூஜாவை இழக்க  கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

இரண்டு மணி நேர தேடலுக்கு பின் ஒரு மரத்தடியில் பூஜா இருப்பதை பார்த்த பின் தான் இந்தருக்கு உயிரே வந்தது போல் இருந்தது.

“பூஜா” என அழைத்தபடி அவள் அருகே ஓடி சென்றான்.

குளிரில் பாதி விரைத்து போய் பாதி மயக்கத்தில் இருந்த  பூஜாவிற்கு எங்கோ இந்தரின் குரல் கேட்டது. இருப்பினும் அவன் எப்படி இங்கு வர முடியும், இந்த மழை, புயலில் என நினைத்தாள்.

இந்தர் அவள் அருகே வந்து பூஜா என அழைத்த பின்பே.......

“ஜித்தூ” என கூறி அவனை அணைத்து கொண்டாள். இது வரை இருந்த பயம் அகன்று தன்னை காக்க தேவ தூதனே வந்தது போல் உணர்ந்தாள்.

இந்தரும் அவளை நன்கு இறுக்கி அணைத்து கொண்டான். அந்த சூழ்நிலை மீண்ட சொர்கமாகவே இருந்தது இர்ந்தருக்கு.

இந்தரின் அணைப்பு  தந்த கதகதப்பில் இருந்த பூஜா யாரோ பேசும் குரல் கேட்டு சட்டென்று விலகி எழுந்து கொள்ள முயன்றாள். ஆனால் கால்கள் விரைத்து போய் இருந்ததால் அவளால் எழுந்து கொள்ளவும் முடியவில்லை, மறுபடி இந்தரின் மேலேயே சரிந்தாள்.

அவளை தாங்கி பிடித்தபடி எழுந்த இந்தர், அட்டால் தலைமை அலுவலகரிடம், இவள் தான் அந்த பெண் என கூறி நன்றி உரைத்தான். எல்லோருமே சந்தோசப்பட்டனர். அனைவரும் கிளம்பி அட்டால் அலுவலகத்தை அடைந்தனர்.

அனைவருக்கும் சூடாக கருப்பு தேனீர் வரவழைக்க பட்டது. குளிருக்கு மிகவும் அருமையாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.