(Reading time: 11 - 22 minutes)

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி

பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்

சேர்த்து வைக்க காத்திருந்தோம்

நீ என்பதே நான் தானடி,

நான் என்பதே நாம் தானடி

நான்கே  வரிகள், பாடி முடித்ததும், “என்ன செஞ்சா உனக்கு பாதுகாப்பா இருக்கும் பூஜா?” என அவள் கண்ணுக்குள் கண் வைத்து கேட்டான்.

அந்த பாடலில் வரிகளின் அர்த்தம் புரிந்து மெதுவாக “சரி” என்று தலை அசைத்தாள் பூஜா..........

அவளை மெதுவாக அணைத்து அவளது நெற்றியில் உதடு பதித்து “ரொம்ப சந்தோசமா இருக்குடா “ என கூறி அவளை அனைவரும் இருந்த அறைக்கு அழைத்து வந்தான்.

அட்டால் தலைவரிடம் சென்று எதோ அவர்கள் மொழியில் பேசினான். அதன் பின் அனைவரும் மிகவும் மகிழச்சியாக வேகமாக வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

நடுத்தர  வயது பெண்கள் சிலர் பூஜாவை அழைத்து சென்று, அங்கிருந்த கடையை திறந்து, அவர்கள் நாட்டு பாரம்பரிய உடைகளை அளித்து மாற்ற செய்தனர். பூஜாவும் அவளது உடை நனைந்து இருந்ததால் மறுக்காமல் வாங்கி அணிந்து கொண்டாள். அவளது தலை முடியை காயவைத்து அதை கொண்டை போட்டு விட்டனர்.

அவள் ரெடியாகி அங்கிருந்த ஹாலுக்கு வந்த பொழுது, இந்தரும் அவர்களது பாரம்பரிய உடையான வெள்ளை சட்டையும் லுங்கியும் அணிந்து இருந்தான். அதை பார்த்து பூஜாவிற்கு சிரிப்பு தான் வந்தது. இந்தர் வீட்டில் கூட ஷார்ட்ஸ் அல்லது டிராக் சூட்டில் தான் இருப்பான். அதை பார்த்து வந்த இந்தர்........

“உன்னை சிரிக்க வைக்கணும்னா நான் லுங்கியில் உலாத்தனும் போல இருக்கே” என பூஜாவை கிண்டல் செய்தான்.

இருவரும் மகிழ்ச்சியுடனேயே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தீவிலிருந்த அனைவரும் கூடி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவரும் சேர்ந்து  உணவு சமைத்தனர். விருந்து அமர்க்களப்பட்டது. யாரோ முன் பின் தெரியாதவர் நம்முடன் சேர்ந்து சந்தோஷ படுவதை பார்க்கையில் இந்தருக்கும், பூஜாவிற்கும் மன நிறைவாக இருந்தது.

விருந்திற்கு பின் நடனமும் அரங்கேறியது. ஆண்கள் பொடுபேறு என்னும் மேள நடனமும், பெண்கள் குடத்தினை வைத்து ஒரு நடனமும் ஆடினர்.

NAU

NAU

அனைத்தும் இனிதே முடிந்து அனைவரும், அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்தருக்கும், பூஜாவிர்க்கும், அந்த அலுவலகத்தின் ஒரு சிறு அறையை ஒதுக்கி இரண்டு பெஞ்ச்களை இணைத்து அந்த கடையில் இருந்த புது தலைகாணி , படுக்கை விரிப்புகளுடன், சில பூக்களை போட்டு அலங்கரித்திருந்தனர்.

அறைக்குள் வந்த பூஜா, அந்த ஏற்பாடுகளை பார்த்து இந்தரிடம் “நீங்க எவ்வளவு பெரிய ரெசார்ட் ஒனர், இவ்வளவு வசதி குறைவான ரூமில் எப்படி தூங்குவீங்க?  என்னால் தான் எல்லாம்” என்று வருந்தினாள்.

“என்ன தான் நெருப்பு கோழின்னாலும், அது மட்டும் என்ன அவிச்ச முட்டையா போடும்?  எவ்வளவு பெரிய ரெசார்ட் ஒனர்னாலும், படுக்க ஒரு பெஞ்ச் போதாதா? எல்லாம் நாம நினைப்பதில் தான் இருக்கு. அதுவும் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் பெரிய வசதிகளை நம் மனம் தேடுவதில்லை.”

“என்ன சந்தோஷம் உங்களுக்கு இப்ப, எனக்கு தெரியாம?

“முதல் இரவுடா, நம்ம கல்யாணம் முடிஞ்சு”............

“ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாது. எனக்கே எப்படா விடியும்ன்னு இருக்கு, இதில் நீங்க வேற ஏதாவது கடுப்பேத்தாதிங்க, ஆமா சொல்லிட்டேன். நீங்க மேல படுங்க, நான் கீழே படுத்துக்கறேன்.......

“ரிலாக்ஸ் பூஜா, ஜஸ்ட் கிட்டிங். ரெண்டு பெஞ்ச்களை சேர்த்து தான் போட்டிருக்காங்க. தனியா பிரிச்சு போட்டா நாம இரண்டு பேரும்  மேலேயே படுத்துக்கலாம்.”

“ம்ம்...... பேசிகிட்டே இருக்காம அதை செய்ங்க முதலில். எனக்கு தரையில் படுத்தா தூக்கம் வராது.”

“பர்பெக்ட் wife ஆகிட்டடா , அதிகாரம் தூள் பறக்குது.”

ஒரு வழியாய் இருவரும் சமாதானமாகி படுத்த ஐந்து நிமிடத்திற்குள் இந்தர் உறங்கி போனான். பூஜாவிற்கு தான் தூக்கம் வரவில்லை.  அப்பா, அம்மாவிடம் சொன்னால் சொன்னால் ஒத்து கொள்வார்கள் தான். அவர்கள் காதல் கல்யாணத்திற்கு எதிர்கள் கிடையாது. ஆனால் இப்படி திருமணமே செய்து கொண்டு போய் சொன்னால் எதுவும் தவறாக நினைப்பார்களோ என்று பலவாறாக நினைத்து எப்பொழுது தூங்கினால் என்றே தெரியாமல் உறங்கி போனாள் பூஜா........

பூஜா விழித்ததும் நடக்க போவதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் தோழிகளே...........

இம்முறை சிறு அத்தியாயமாக  கொடுத்ததிற்கு மன்னிக்கவும். ஆபிஸ் போய் முப்பது நாளும் வேலை செய்வது கடினமாக இருக்கும், ஆனால் மாத கடைசியில் சம்பளம் வாங்கும் பொழுது எவ்வளவு சந்தோசமாக இருக்கும். முப்பது நாளும் சம்பள நாளாக இருக்க கூடாதா என்று மனம் எங்குமே அது போல், எனக்கு கதை எழுத கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் புதன் கிழமை அனைவரும் எழுதும் விமர்சனத்தை பார்த்து எல்லா நாளும் புதன் கிழமையாக இருக்க கூடாதா என்று மனம் ஏங்க தான் செய்கிறது.

அதிலும் சென்ற புதன் ஜான்சி, ஆதர்வ், வசு, தேவி, சித்ரா, ஹரித்தா, மதுமதி, தமிழ் தென்றல், நசீமா, தேன்மொழி  , சுபா , சாரு இவர்கள் அனைவரும் எழுதிய விமர்சனம் மிக மிக மகிழ்ச்சியை அளித்து. நன்றி நன்றி நன்றி...........

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 10

Episode 12

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.