(Reading time: 35 - 69 minutes)

12. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

ரவு முழுவதும் ஏதேதோ யோசனையில் மூழ்கி தூக்கம் வராமல் புரண்டு படுத்து, ஒரு வழியாய் தூங்கி, காலையில் விழித்த பொழுது, இந்தர் அங்கு இருக்கவில்லை.

நேற்று நடந்தது எல்லாம் கனவா என்று இருந்தது பூஜாவிற்கு.........  நம் ஊராக இருந்திருந்தால் கழுத்தில் தாலியாவது இருந்திருக்கும்.  இவர்கள் முறைப்படி திருமணம் ஆனதால் வெறும் ரெஜிஸ்ட்ரேஷன் மட்டும் ஆனதால் கையெழுத்து மட்டும் போட்டது நினைவு வந்தது.

“குட் மார்னிங் டா” என்றபடி வந்த இந்தரை பார்த்து........

“குட் மார்னிங் எல்லாம் இருக்கட்டும், என்னை தனியா விட்டுட்டு எங்கே போனிங்க?”

“அப்படியே ஓர் வாக் போய், பிரஷ், பேஸ்ட், டவல் வாங்கி வந்தேன். சரி நீ பிரஷ் செய்துட்டு கிளம்பு, இப்போ ஆரிப் வந்துடுவான். அவன் கூட நீ ரெசார்ட் போய்டு. எனக்கு மெயின் ஆபிசில் வேலை இருக்கு.”

“இன்னைக்கு கூட வேலை முக்கியமா?

“ஏன் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?

“...................”

“ரொம்ப தாங்க்ஸ் பூஜா, நேத்து என் உயிரை காபற்றியதற்க்கு” என கூறி கடுப்பேற்றினான் பூஜாவை.........

“நீங்க தான் என் உயிரை காப்பதினிங்க” என்று சொல்லும் போதே பூஜாவின் குரல் உள்ளே சென்றது. என்ன சொல்லுகிறான், இவன் உயிரை காப்பாற்ற தான் நான் இவனை கல்யாணம் செய்து கொண்டேன் என்றா....... பூஜாவிற்கு தலை வலிப்பது போல் இருந்தது.

“குட் மார்னிங் சார், சாரி மேடம்” என்றபடி உள்ளே நுழைந்தான் ஆரிப்.......

“குட் மார்னிங் ஆரிப், இப்போ எதுக்கு மேடம்க்கு சாரி” என்று இந்தர் அவனிடம் வினவினான்.

ஆரிப் இந்தரிடம் பதில் சொல்லாமல் பூஜாவிடம் திரும்பி, “மேடம் நேற்று உங்களை வேனும்ன்னு விட்டுட்டு போகலை. கெஸ்ட் எல்லாம் இருந்தாங்க, புயல் வேறு ஆரம்பமாகி விட்டது, உங்களை வேறு காணோமா, அதனால் தான்”. என தன்  நிலை விளக்கம் அளித்து கொண்டிருந்தான்.

“நான் தான் உனக்கு சாரி சொல்லணும், நீ எதோ விளக்கம் சொன்னதை கேட்காம போனதுக்கு. என பூஜா அவனுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தாள்.

“ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாரி சொன்னது போதும். அடுத்த புயல் வருமுன் கிளம்புங்கள்.” என இந்தர் அவர்களை கிளப்பினான்.

ஆரிப்புடன் கிளம்ப மனம் இல்லாமல் தான் கிளம்பினாள் பூஜா. இந்தர் முகத்தில் இருந்து, அவன் என்ன நினைக்கிறான் என்று ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை பூஜாவால்.

அவர்கள் இருவரும் கிளம்பியதும், அவர்களது கல்யாண பதிவு சான்றிதழை வாங்கிக் கொண்டே கிளம்பினான் இந்தர்.........

ரெசார்டை வந்து அடைந்ததும், ஸ்ருதியும், ஹெலனாவும் அவளை அணைத்து, “என்ன பூர்வி இப்படி செய்துட்ட,  போனை கையில் எடுத்துட்டு போகனுன்னு கூட தெரியாதா? நாங்க எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா? நல்ல வேலை இந்தர் சார் இங்க இருந்ததால் , உன்னை காப்பாற்ற வர முடிந்தது. இரவும் எங்களுக்கு போன் செய்து, நீ பத்திரமா இருப்பதாக கூறினார், அதற்கு பின் தான் எங்களால் தூங்கவே முடிந்தது” என ஸ்ருதி புலம்பி தீர்த்து விட்டாள்.

“சரி நான் போய் குளித்து கிளம்பி வர்றேன், நீங்க ரெண்டு பேரும் உங்க வேலையை பார்க்க போங்க” என கூறி அனுப்பி விட்டு தனது அறைக்கு சென்றாள்.

அறைக்கு சென்று குளித்து கிளம்பிய பின் யோசனையாகவே இருந்தது பூஜாவிற்கு.......... அப்பா அம்மாவிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது, எப்பொழுது சொல்வது என்று யோசித்து யோசித்து தலை வலிப்பது போல் இருந்தது.

கிளம்பி ஆபிஸ் நோக்கி சென்றாள். அவள் சென்று அமர்ந்த சில நிமிடங்களில் எல்லாம், எம்.டி. இன்டர்காமில் அழைத்தார்.

அவரது அறைக்கு சென்ற பொழுது, “உட்காருங்க பூர்வஜா” என மரியாதையாக கூறினார். அவர் கொடுத்த மரியாதை சற்று அதிகமாக தெரிந்தது. தங்கள் திருமணத்தை பற்றி ஏதும் இந்தர் இவரிடம் கூறி இருப்பானோ? அதனால் வந்த மரியாதையா அல்லது என யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே...........

“மிஸ்.பூர்வஜா, நீங்க கொடுத்த ராஜினாமாவை நான் ஏற்று கொள்கிறேன். நீங்க இன்றைய   விமானத்திலேயே புறப்படலாம். அதற்கும் ஏற்ப்பாடு செய்தாகி விட்டது. உங்களுக்கு மகிழ்ச்சி தானே?” என்று கேட்ட பொழுது பூஜாவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது........

“சார் அது வந்து....... என பூஜா இழுத்த பொழுது........

“எனக்கு புரியுது மிஸ்.பூர்வஜா நீங்க ஹோம் சிக் ஆகிட்டிங்க. அதனால் தான் நேற்று கூட ஆரிப் சொன்ன விஷயங்கள், உங்கள் கவனத்திற்கு வராமல் இப்படி ஆபத்தில் சிக்கி கொண்டீர்கள்.  யாரையும் கட்டாயபடுத்தி வேலை வாங்குவது வாங்குவது எனக்கு பிடிக்காது. அன்று CEO சொன்னதிற்காக தான் உங்ககளை என்னால் ரிலீவ் செய்ய முடியலை. இப்போ என்னால் முடியும். ஹாப்பியா போயிட்டு வாங்க” என நிலைமை புரியாமல் அளந்து கொண்டிருந்தார்........

“சார் எதுக்கும், இந்தர் சார் கிட்ட ஒரு தடவை கேட்டுக்கோங்க.’

“நீங்க ஒன்னும் பயப்படாதிங்க பூர்வஜா, சார் தான் உங்களை ரிலீவ் பண்ண சொன்னார்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.