(Reading time: 35 - 69 minutes)

“சரி உங்க லவ் ஸ்டோரி எல்லாம் பூஜா இங்க வந்த பின் அவளிடமே கேட்டுக்கறேன். உனக்கு விமானத்திற்கு நேரம் ஆகுது , நீ கிளம்பு. நான் அங்க நம்ம வீட்டில் சிங்காரத்திடம் சொல்லி திறந்து வைக்க சொல்றேன். அப்படியே நாளைக்கு அவங்க வீட்டிற்கு போக கொஞ்சம் சாமான் வாங்க சொல்லணும். நீ கிளம்பு கண்ணா.........  ஆமா நாளைக்கு நாம மட்டும் போகிறோமா இல்லை அத்தை மாமாக்கெல்லாம் சொல்லவா?

“மா முதலில் நாம மூணு பேர் மட்டும் போகலாம். அதன் பின் பூ வைக்கும் விழாவிற்கு அனைவரையும் அழைக்கலாம்.

“அதுவும் சரி தான். ஊரிலிருந்து உன் தாத்தா , பாட்டி எல்லாம் வரணும். உன் சித்தி வேற சுவிஸ்ல இருந்து வரணும். அவளுக்கு நான் இப்பவே சொல்லிடறேன். இல்லன்னா பிலுபிலுன்னு பிடிச்சுப்பா. நீ கிளம்பு கண்ணா.

ஒரு வழியாய் அவர்களிடம் விடை பெற்று இங்கு வர சிறிது தாமதமாகி விட்டது. என பூஜாவிடம் கூறி முடித்தான் இந்தர்.

ரில் இருக்கும் எல்லாருக்கும் இந்நேரம் உங்கம்மா சொல்லி இருப்பாங்க. கல்யாண பொண்ணு எனக்கே இப்போ தான் தெரியுது. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லணும் என்று உங்களுக்கு தோணவே இல்லையா? என கோபமாக கேட்டாள் பூஜா...........

“ப்ளீஸ் டார்லிங், முதலில் இருந்து ஆரம்பிக்காத. நேற்று நடந்த நம்ம கல்யாணத்துக்கு  நான் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறேன்னு, வெறும் வார்த்தையா சொன்னா உன்னால புரிஞ்சிக்க முடியாதுன்னு தான் இந்த அதிரடி ஏற்ப்பாடு. ப்ளீஸ் புரிஞ்சிகோடா......

அவன் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் புரிந்து பூஜாவும் கொஞ்சம் இறங்கி வந்தாள்.

“சரி , நான் இப்போ வீட்டுக்கு போய் என்ன சொல்ல? அந்த வசனத்தையும் நீங்களே சொல்லிடுங்க.......

“நேற்று கல்யாணம் நம் இருவருக்கானது. அதனால் உன்னோட அப்பா, அம்மாவிடம், நாம சுவிஸ்ல் பார்த்திருக்கிறோம், இங்கு இருந்த இந்த ஆறு மாதத்தில் லவ் பன்னோம்ன்னு சொல்லு.

ம்....... என்று அவனை முறைத்தாள் பூஜா.......

“ஓகே, ஓகே, நெற்றி கண்ணை திறக்காதே, எல்லாத்துக்கும் சேர்த்து கல்யாணத்துக்கு பின் உன்னை காதலிசுட்டே இருக்கேன் போதுமா........

“அதெல்லாம் சரி தான். நான் அப்பா கிட்ட போய் உங்களை விரும்பறேன்னு சொன்னாலும், அப்பா உங்களை பற்றி விசாரிக்கணும் என்று சொல்லுவார். நீங்க பாட்டுக்கு நாளைக்கே உங்க அப்பா, அம்மாவை வர சொல்லிட்டிங்க?

“டோன்ட் வொரி டா........ உன் அப்பாவோட நண்பர் பிரகாசம் அங்கிள் கிட்ட சொல்லி எல்லா ஏற்பாடும் செய்து வச்சிருக்கேன். அவர் இந்த ஆறு மாதத்தில், உன் அப்பாவிடம், என்னோட குடும்பத்தை பற்றி நல்ல விதமா சொல்லி இருப்பார். சோ நீ போய் சொல்லும் பொழுது உன் அப்பா ஓகேன்னு சொல்லுவார்ன்னு தான் நினைகிறேன்.

 “உங்களுக்கு எப்படி பிரகாசம் அங்கிளை தெரியும்?”

“போன ஒரு வருஷமா, உன்னை பற்றி ஆராய்ச்சி செய்த பொழுது, உன்னோட அப்பாவின் நண்பர் பிரகாசம் அங்கிள், என்னோட தாத்தாவிடம் பிசினஸ் செய்வது தெரிஞ்சுது. தாத்தாவிடம் சொல்லி கொஞ்சம் அதிகம் பிசினஸ் கொடுக்க சொல்லி பேச ஆரம்பித்தேன்.

“அவர் தான் எங்களுக்கு, உங்க ரெசார்டில் வேலை இருக்குன்னும் சொன்னார். அவர் எதோ ஏலக்காய் ஏற்றுமதி மால்டிவ்ஸ்க்கு செய்வதாகவும், அந்த நாட்டை பற்றி நன்கு தெரியும்ன்னு சொன்னதால் தான் என் அப்பா அங்க அனுப்பவே சம்மதிசார்.  அப்ப எல்லாம் உங்க வேலையா?

“ஆமா, உனக்கு மட்டும் வேலை கொடுக்கலாம்ன்னு பார்த்தா, உன் தோழிகளுக்கும் சேர்த்து கொடுத்தால் தான், உன் அப்பாவிடம் பேசவே முடியும்ன்னு சொல்லிட்டார். அது வேற தண்ட செலவு” என அலுத்து கொண்டான் இந்தர்.

“என் தோழிகளை போல், இவ்வளவு நல்ல ஊழியர்கள் உங்களுக்கு கிடைப்பாங்களா என்ன?

“அது, அவங்க  வந்த பின்பு தானே தெரியும்.”

“சோ, என்னால் உங்களுக்கு லாபம் தான்.”

“இல்லையா பின்ன?

“இதுக்கு எதுக்கு தலையை சுற்றி மூக்கை தொடனும்? முதலிலேயே பிரகாசம் அங்கிளிடம் சொல்லி வரன் பேசி இருக்கலாமே?

“மேடம் என்ன மூடில் இருக்கீங்கன்னு தெரியாமல், முதலில் யோசிக்க தான் செய்தேன். இருந்தாலும் கல்யாணத்திற்கு பின் உனக்கு விளக்கமா சொல்லலாம்ன்னு நினைத்து, அவரிடம் பேச சொன்னேன். அவரும் உன் அப்பாவிடம் பேசினார். ஆனால் நீ கல்யாணத்திற்கு இப்பொழுது சம்மதிக்கவில்லை என்றும் ஒரு வருடம் வேலை பார்த்த பின் தான் கல்யாணம் என்றும் சொல்லிட்டார்.”

“அந்நேரம், அப்பா சொன்ன அலையன்ஸ் நீங்க தானா? தெரிஞ்சு இருந்தா அப்பவே கல்யாணம் செய்து, இந்த ஆறு மாதம் நல்லா டார்ச்சர் செய்திருப்பேன் உங்களை, மிஸ் ஆயிடுச்சே........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.