(Reading time: 35 - 69 minutes)

“முதலில் இந்த கொஞ்சல் எல்லாம் நிறுத்துங்க, நான் இப்போ ஊரில் போய் என் அப்பா, அம்மா கிட்ட என்ன சொல்ல?

“போன இடத்தில் ஒரு தேவேந்திரனை பார்த்தேன், காதலில் விழுந்தேன். அப்படின்னு வசனம் பேச வேண்டியது தான...........

“தேவேந்திரனா? இந்திர்ஜின்னு வில்லன் பேர் வச்சுக்கிட்டு.........

“ஹேய் ........ இந்திரஜித் வில்லன் பேர் இல்லமா. அந்த இந்திரனையே ஜெய்தவன். அதனால் தான் இந்திர ஜித். “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” அப்படின்னு வாழ்ந்தவன்.

“ஒழுங்கா மனைவி சுலோச்சனா பேச்சை கேட்டிருந்தா நல்லவானா வாழ்ந்திருப்பான்..........

“இந்த இந்தரஜித் அவனோட மனைவி பூர்வஜா பேச்சை மட்டும் தான் கேட்பான் போதுமா..........

“ஹையோ, முதலில் நான் ஊருக்கு போய் என்னோட அப்பாவிடம் என்ன சொல்ல? அதை சொல்லுங்க முதலில்..........

“நான் என்ன சொன்னேனோ அதையே சொல்லு.........

“நீங்க என்ன சொன்னிங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?

ன்று காலை அவனது வீட்டில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான் இந்தர்...........

தீவிலிருந்து நேராக வீட்டிற்க்கு வந்த இந்தர், ஜிம்மில் அப்பொழுது தான் உடல் பயிற்சி முடித்து வந்து , ஹாலில்  அமர்ந்து காபி குடித்து கொண்டே அன்றைய நாளிதலான அங்குள்ள Afathis பேப்பரை படித்து கொண்டிருந்த அப்பா அர்ஜுனிடம் அமர்ந்தான். அம்மா சம்யுக்தாவும் உடன் இருந்தார். காலை வேளை இருவரும் சேர்ந்தே காபி குடிப்பது வழக்கம்.

இந்தர் அமர்ந்த சிறிது நேரத்திலேயே காபி அவன் கைக்கு வந்தது. அவன் யோசித்து கொண்டிருந்ததை பார்த்த சம்யுக்தா “சொல்லு இந்தர் கண்ணா, என்ன சொல்ல வந்த?

“எதோ சொல்ல வர்றேன்னு உங்களுக்கே தெரியுது, அப்ப அது என்னன்னும் யோசிச்சு இருப்பிங்களேம்மா?

“ஓரளவுக்கு இந்தர் கண்ணா ............ நேத்து உன்னோட எம்.டி நாசித் போன் செய்து சொன்னார், நீ ரொம்ப ரிஸ்க் எடுத்து உன்னோட ஒரு  ஊழியரை காப்பாற்ற போனேன்னு.

“அதுக்கு தான் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பூஜை அறையில் இருந்தியா சம்யு? என்னிடம் சொல்லி இருக்கலாம்ல” என அர்ஜுன், கேள்வி எழுப்பினார், சம்யுவைப் பார்த்து..........

“நீங்களே அப்போ தான் ஒரு பெரிய சர்ஜரி முடித்து வந்து களைப்பா படுத்தீங்க, உங்க கிட்ட சொன்னா நீங்க ரொம்ப டென்ஷன் ஆகிடுவீங்க, அதனால் காலையில் உங்களிடம் சொல்லி கொள்ளலாம்ன்னு விட்டுட்டேன். ஆனா கொஞ்ச நேரத்தில் எல்லாம் நாஷித் போன் செய்து இந்தர் பத்திரமாக இருப்பதாக சொல்லிட்டார்”. என்று சம்யுக்தா கூறினார்.

“இருந்தாலும் என்னிடம் சொல்லி இருந்தால் ஏதாவது செய்து இருப்பேன் “ என்று அர்ஜுன் கூறினார்.

“இவ்வளவு பெரிசா வளர்ந்துட்டான் , அவனுக்கு தெரியாதா, அவனை பார்த்து கொள்ள?

“அப்புறம் நீ ஏன் போய் பூஜை அறையில் உட்கார்ந்து இருந்த?

“அவனுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை அவனுக்கு கொடுக்கணும். ஆனா ஒரு அம்மாவா நான் ஏதாவது செய்யணும் இல்லையா”

“நானும் ஒரு அப்பாவா என் கடமையை செய்திருப்பேன் இல்லையா”

“உங்க கடமை, அவனோட சுதந்திரத்தை பாதிக்கும். என்னோடது அப்படி இல்லை........

அர்ஜுன் எப்பொழுதும் பிள்ளை பாசத்தில் கொஞ்சம் அதிகமாக இந்தருக்கு உதவ நினைப்பார். ஆனால் சம்யுக்தா எல்லாம் அவனாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்.........

“அதுவும் இல்லாம இவ்வளவு ரிஸ்க் எடுக்கறான் என்றால், எப்பவும் மூளையால் மட்டும் யோசிப்பவன், நேற்று வெறும் மனம் கூறியதை கேட்டு நடந்திருக்கிறான். அப்போ அவனது மனதுக்கு பிடித்தவர்களுக்கு உதவ நினைத்தது தான் காரணமாக இருந்திருக்கும்.  பின்னாளில் அவன் கொஞ்சம் பெருமையாக உணர ஒரு வாய்ப்பு. அதனால் தான் உங்களிடம் சொல்லவில்லை”. என கூறினார் சம்யுக்தா.........

இப்பொழுது இந்தர் நடுவில் புகுந்தான். “மா, எப்படி சொல்றீங்க, நான் மூளையால் யோசிக்கவில்லை என்று?

“நீ யோசிச்சு இருந்தா இப்படி, தனியாவா போய் இருப்ப, நல்ல வானிலை இருக்கும் போதே, பகல் நேரத்தில் கூட, படகில் தனியா போக கூடாதுன்னு உனக்கு தெரியாதா? அப்படி இருந்தும் நீ பதறி போய் கிளம்பி இருக்க, துணைக்கு ஆட்களை கூட்டி போக கூட நேரம் தாழ்த்த கூடாது என்று நினைத்து தானே உடனே கிளம்பி இருக்க, சரி தானே? எப்பவும் அம்மா பிள்ளையா இருக்கும் நீ, நேற்று அப்பா பிள்ளையா மாறி இருக்க .

“மா....... என்னோட  ஊழியர் யாரா இருந்தாலும், நான் அவங்களை காப்பாத்த எல்லா ரிஸ்க்கும் எடுப்பேன் என்று உங்களுக்கு தெரியாதா?

“நல்லா தெரியும் இந்தர் கண்ணா, ஆனா நேற்று சூழ்நிலையில், என்ன செய்திருப்ப? உன்னோட ஊழியர் பொடு பண்டோஸ்  போய்ட்டாங்கன்னு உனக்கு தெரிஞ்ச உடனே, நம்ம அட்டால் தலைவரை கூப்பிட்டு,  அந்த அட்டால் தலைவருடன் பேசி, ஆட்களை விட்டு தேட செய்து, கண்டு பிடித்தவுடன், நேற்று இரவு அவங்க பாதுகாப்பில் வைத்திருந்து, இன்று ஆரிபை விட்டு அழைத்து வந்திருப்ப, சரியா? இருந்த இடத்தில இருந்தே, இரண்டே போனில் பேசி முடித்திருப்ப. என்னோட கெஸ் சரியா?

“சம்யூ, சான்சே இல்ல. நீங்க பெரிய ஆள் தான்” வாட் அ கெஸ்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.