(Reading time: 35 - 69 minutes)

“எப்போ?”

“காலையில் தான். ஆரிப்பை  அங்கு அனுப்ப சொன்ன போதே, உங்களை ரிலீவ் செய்ய சொல்லிட்டார்”. என அதற்கு மேல் பேச அனுமதிக்காமல், “ஆரிப் உங்களை விமான நிலையத்தில் பத்திரமாக வழியனுப்புவான்.” என கூறி தனது உரை முடிந்தது என வேறு வேலையில் கவனத்தை திருப்பினார்..........

குழம்பியபடி, தான் இப்போது தனது தோழிகளிடம் நேற்று நடந்ததை சொல்ல வேண்டுமா? இல்லை சுவிஸில் நடந்தவற்றை மறைத்தது போல் இதையும் மறைக்க வேண்டுமா? என ஒன்றும் புரியாமல் தனது அறைக்கு வந்து துணிகளை பாக் செய்ய ஆரம்பித்தாள்.

திடீரென அறையினுள் நுழைந்த ஸ்ருதியும் , ஹெலனாவும் “என்ன பூர்வி  ஊருக்கு போறியா? இப்போ தான் ஆரிப் வந்து சொன்னான். என்ன ஆச்சு?“  என கேட்டனர்.

“...................”

“ஹேய் ஏதாவது சொல்லு. நீ பேசாம இருக்கறதா பார்த்தா, ஏதாவது குட் நியூஸா பூர்வி? அம்மா உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா? அதுக்கு தான் உடனே உன்னை கிளம்பி வர சொன்னாங்களா? என கேள்வி மேல் கேள்வியாக அடுக்கி கொண்டே சென்றாள் ஸ்ருதி.........

என்ன சொல்வாள் பூஜா? இந்தரே இங்கிருந்து அனுப்ப சொல்லி விட்டான் என தெரிந்த பின் பூஜாவால் ஒன்றும் பேச கூட முடியவில்லை. எதையும் சொல்லி அழுது ரசாபாசம் ஆகாமல் இருக்க தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

“இதுக்கா இவ்வளவு கவலையா இருக்க? என்னை எல்லாம் இப்போ கல்யாணம் பண்ண சொன்னா உடனே புருஷ்க்கு கழுத்தை நீட்டிடுவேன். நீ என்னடா என்றால் எதோ அசோகா வன சீதை போல் இருக்க........ கிளம்பு, கிளம்பு சந்தோசமா கிளம்பு. திருமண தேதி முடிவானதும் எங்களுக்கு சொல்லு, நாங்களும் லீவுக்கு அப்பளை செய்யணும்” என பெரிய ப்ளான் தயாரித்தாள் ஸ்ருதி, பூஜாவின் நிலைமை தெரியாமல்.

ஸ்ருதி எப்பொழுதும் எதையும் பாசிடிவாகவே பார்ப்பவள். இதையும் அப்படியே பார்த்தாள்.

ஹெலனாவிற்க்கு தான் சிறிது சந்தேகம் வந்தது. ஆனால் ஸ்ருதி சொன்னதற்கு பூர்வி ஒன்றும் சொல்லாமல் தலை ஆட்டியது, அவளது கேள்விகளை தடுத்து. பூர்வி தற்பொழுது திருமணம் வேண்டாம் என்று சொல்லி கொண்டு இருந்தது தெரியுமாதலால், தற்பொழுது அதனால் தான் வருத்தமாக இருக்கிறாள் என நினைத்தாள்.

“பூர்வி, ப்ளீஸ் கொஞ்சம் ஹாப்பியா இரு, கிளம்பும் பொழுது இப்படி இருந்தால், எங்களுக்கு கஷ்டமாக இருக்கும். உனக்கு மாப்பிள்ளையை பிடிக்லைன்னா, கண்டிப்பா அம்மா உன்னை கட்டாய படுத்த மாட்டாங்க. சோ, பீ கூல். என்று பூஜாவை தேற்றுவதாக நினைத்து கொண்டு, அறிவுரை வழங்கி கொண்டு இருந்தாள்.........

பூஜாவிற்கு தர்ம சங்கடமாக இருந்தது. இங்காவது இவர்கள் எதோ கற்பனை செய்து கொண்டு, கேள்வி கேட்காமல் இருக்கிறார்கள், ஆனால் வீட்டில் அப்படியா? போய் சேர்ந்ததும் எவ்வளவு கேள்விகளை சந்திக்க நேரிடும் என எண்ணி மனம் வெம்பினாள்.

ரு வழியாய் இருவரிடமும் விடை பெற்று ஆரிபுடன் கிளம்பி போட்டில் பயணம் செய்து விமான நிலையத்தை அடைந்தாள்.

NAU

ஆரிப்பிடம் விடை பெறும் பொழுது “சீ யூ சூன் மாம்” என்று விடை பெற்றான்.

இனி இந்த மண்ணில் கால் வைப்பேனோ என்னவோ என்று எண்ணியவாறு அவனிடம் விடை பெற்று, விமான நிலையத்தில் நுழைந்து, முதலில் ஸ்கேனரில் பெட்டியை போட்டு பின் மறுபுறம் சென்று எடுத்து, டிராலியை தள்ளி சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல், பிசினஸ் கிளாஸ் என்ற கவுன்டரில் சென்று பாஸ்போர்ட் டிக்கெட்டை கொடுத்தாள்.

இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை, வேலையை விட்டு டெர்மினேட் செய்து விட்டு, அழும் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல், பிசினஸ் கிளாஸ் டிக்கெட் என்று பொருமி தள்ளினால் பூஜா.........

லக்கேஜை அங்கு டாக் போட்டு அனுப்பி  விட்டு, கையில் இருந்த ஹான்ட் பேக்குடன், அடுத்து எக்ஸ்ப்ரெஸ் கார்ட் இருந்ததால் இமிக்ரேஷனிலும், வரிசையில் நிற்காமல் தனியாக இருந்த கவுண்டரில் சென்று அந்த பார்மாலிடிஸ் முடித்து, அடுத்து செக்யூரிட்டி செக்கும் முடித்து வந்த பொழுது தான், அங்கிருந்த duty-free கடைகளை பார்த்த பின் தான் அக்கா சியமளாவின் குட்டி தேவதை ஜனனி நியாபகம் வந்தது.   

NAU

அவளுக்கு சாக்லேட்டாவது வாங்கி செல்ல நினைத்து உள்ளே நுழைத்து பார்த்த பொழுது விலை எல்லாம் டாலரில் இருந்தது. கடந்த சில மாதங்களாக வாங்கிய சம்பளம் அனைத்தும், வங்கி மூலமாகவே ஊருக்கு அனுப்ப பட்டதால், அவளிடம் டாலர்கள் இருக்கவில்லை.  ரெசார்டிலும், செலவு செய்ய வழி இல்லாததால், பணமாக இருக்கவில்லை...........

சே....... என்று இருந்தது பூஜாவிற்கு, ஒரு சாக்லேட் வாங்க கூட வழி இல்லையே என்று நினைத்து வந்த சோகத்தை நினைத்து பூஜாவிற்கே கோபமாக வந்தது. எவ்வளவு பெரிய நிகழ்வு நேற்று நடந்து, இன்று தனது வாழ்கையே கேள்வி குறியாய் நிற்கும் பொழுது, இந்த சாக்லேட் ஒன்று தானா என்று நினைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.