(Reading time: 35 - 69 minutes)

“எதோ இந்த ஆறு மாதம் என்னை டார்ச்சரே செய்யாத மாதிரி?  சரி உன்னை வேறு இடத்தில் வேலை பார்க்க அனுப்பினால் “நானும் அங்கே உன்னோடு” இருக்க முடியாதுன்னு தான், நான் இருக்கும் இடத்துக்கு வரவழைத்தேன் “. நீ பக்கத்தில் இருந்தால் ஈசியா பேச முடியுன்னு நினைத்தேன். நீ என்னடான்னா என்னை எதோ வில்லன் ரேஞ்சுக்கு பார்க்க ஆரம்பிச்சுட்ட.”

“எதையாவது ஒழுங்கா சொன்ன தானே புரியும்”. என பூஜாவும் அலுத்து கொண்டாள்.

“எப்படி ஒழுங்கா? அன்னைக்கு ஈவினிங், ப்ரபோஸ் செய்தேனே, அதற்கு மேல என்ன வேணும்? எதோ கல்யாணத்து முன் ஆறு மாதம் ஜாலியா காதலிக்கலாம்ன்னு நினைச்சா, உன்னை தாஜா செய்யவே ஆறு மாசம் ஆச்சு...... பதிலுக்கு இந்தரும் அலுத்து கொண்டான்.

“சாரி இந்தர், நான் கேட்டப்ப, நீங்க முடியாதுன்னு சொன்னது, நியாபகத்திலேயே  இருந்தது. அதனால் டிட் பார் டாட். அதனால் எப்பவும் நியாபகத்தில் வச்சுகோங்க, நீங்க என்ன செய்தாலும் நான் திருப்பி உங்களுக்கு செய்வேன்.

“பெண்டாட்டின்னு நியபகபடுத்திகிட்டே இருக்க. எப்பவும் மிரட்டல் தான், ரௌடி மாதிரி.” என தனது தலையை சாய்த்து, அவளது தலயில் முட்டினான்.

அதற்குள் விமான போர்டிங் நேரமானதால் விமானத்தில் ஏற அழைப்பு வந்தது. இருவரும் விமானத்தில் ஏறினர். இரண்டரை மணி நேரம் போனதே தெரியாமல் பேசிய படி சென்னை வந்து சேர்ந்தனர். இறங்கிய பின்

“இங்கு எங்க தங்குவிங்க இந்தர்?

“நமக்கு ஈசிர் ல் கடல் ஓரமா ஒரு பங்களா இருக்குடா. சென்னை வந்தா எல்லோரும் அங்கு தான் தங்குவோம்.

“சரி நாளைக்கு எப்போ வருவீங்க?

“நீ போய் முதலில் உன்னோட அப்பா, அம்மாவிடம் பேசு. அதற்குள் எல்லாம் செட் செய்துட்டு உன்னை வாட்ஸ் அப்பில் கூப்பிடறேன் ஒகேவா. சரி வா உன்னை வீட்டில் விட்டுடு, நான் கிளம்பறேன்.”

அவனுக்காக காத்திருந்த டிரைவர் கம் அவர்கள் வீட்டு காவலாளி சிங்காரத்திடம், கார் சாவியை வாங்கி கொண்டு அவரிடம் ரூபா கொடுத்து டாக்சியில் வர சொல்லி விட்டு, காரில் பூஜாவுடன் கிளம்பினான். அவள் வழி சொல்லாமலே சரியாக, அசோக் நகரிலிருந்த அவளது வீட்டு வாசலில் காரை நிறுத்தினான்.

“உங்களுக்கு என் வீடு முன்பே தெரிமா? சரியாக நான் வழி சொல்லாமல் வந்துடீங்க?

“ஒரு வருசத்துக்கு முன்னாடியே உன்னை பற்றி எல்லாம் விசாரிச்சு தெரிந்த பின், இரண்டு, மூன்று முறை வந்துருக்கேன், உன்னை பார்க்க முடியுமான்னு..........

“சோ ஸ்வீட் இந்தர் நீங்க, சரி நாளைக்கு எப்போன்னு வாட்ஸ் அப்பில் கூப்பிடுங்க, பை “ என கை அசைத்து கார்லிருந்து  இறங்கினாள் பூஜா.........

“இதை மறந்துட்டேனே , ஒரு நிமிஷம் பூஜா” என கூறி பின் இருக்கையிலிந்த அவனது பாகிலிருந்து, இரண்டு சாக்லேட் பாக்சை எடுத்து அவளிடம் கொடுத்தான். எல்லாம் அவள் டியூட்டி ப்ரீ ஷாப்பில் எடுத்து பார்த்து பின் டாலர் இல்லாததால் வைத்தவை. “ஜனனி ஏஞ்சலுக்கு கொடுத்துடு.” என கூறி கொடுத்தான்.

“நீங்க நாளைக்கு வரும் போது, நீங்களே வந்து கொடுங்களேன்.”

“அது வேற நான் வாங்கிட்டு வர்றேன். இது நீ கொடுத்ததா இருக்கட்டும்.” என கூறி புன்னகைதான்.

தனக்காக இவ்வளவு யோசிக்கிறான், என எண்ணிய பொழுது கொஞ்சம் பெருமையாக இருந்தது பூஜாவிற்கு. பை என கூறி, கிளம்பியும் சென்று விட்டான்.

சிறிது நேரம் அவன் சென்ற திசையை பார்த்து கொண்டு நின்று கொண்டுருந்தாள் பூஜா, ம்க்கும் ......... என்று அக்கா சத்தம் கொடுக்கும் வரை...........

“என்ன பூர்வி எதோ எங்களை பார்க்கணும் போல இருக்குன்னு சொல்லிட்டு இப்போ BMW வில் வந்து இறங்குற, என்ன தான் நடக்குது.” ஏன ஆர்வமுடன் கேட்டார் சியாமளா..........

“உள்ள வாங்க அக்கா சொல்றேன்.”

“அப்போ என்னவோ இருக்கு”.......

அதற்குள் அம்மா சரோஜினியும் வெளியே வந்து விட அனைவரும் பேசி கொண்டே உள்ளே நுழைந்தனர்.

“அப்பா, ஜனனி , எப்போம்மா வருவாங்க?

“இன்னைக்கு எதோ கிளயண்டை பார்த்துட்டு இப்போ லஞ்ச்க்கு வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க. ஜனனி ப்ளே ஸ்கூல் போறால்ல, கொஞ்ச நேரம் ஆகும் அவ வர. ஏன் பூர்வி கண் முன்னால் இருக்கும் எங்களை விட்டுட்டு அப்பாவை கேட்கற? எங்களை பார்த்தா மனுஷங்களா தெரியலையா?

“நீங்க அதுக்கும் மேல மா....... இருந்தாலும் அப்பா ஸ்பெஷல்..........

“அப்படி சொல்லுடா மை ஸ்வீட் ஏஞ்சல்“ என்ற படி உள்ளே நுழைந்தார் பீஷ்மர்......

அவரது குரல் கேட்டதும், அப்பா என்ற படி அவரிடம் ஓடி சென்று, அவரது தோளில் தலை சாய்த்து கொண்டாள் பூர்வி.........

“பாருங்க வந்து எவ்வளவு நேரம் ஆச்சு, என்னிடம் எப்படி இருக்கீங்கன்னு ஒரு வார்த்தை கேட்கலை, உங்க கிட்ட இந்த கொஞ்சல்ஸ்”.........  என அலுத்து கொள்வது போல் சரோஜினி, கூறினாலும் அந்த குரலில் பெருமையே தலை தூக்கி நின்றது.

இப்பொழுது அக்காவிடம் திரும்பி “அத்தான் எப்போ அக்கா வருவார்? என கேட்டாள் பூர்வி.......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.