(Reading time: 35 - 69 minutes)

அந்த வருத்ததுடன், விமானத்தின் காத்திருப்பு பகுதிக்கு வந்த பொழுது கூட்டமாக இருந்தது. கையில் பிசினஸ் கிளாஸ் வெய்டிங் லவுன்ச் கார்டு இருந்ததால் அங்கு சென்று அமர்ந்தாள். அவளது சோக மன நிலைக்கு சற்று ஆறுதலாக இருந்தது அங்கிருந்த தனிமை. வெகு சிலரே அங்கிருந்தனர். அவர்களும் ப்ரீ wifi ஏரியா என்பதால், டாப், போனில் மூழ்கி இருந்தனர்.

NAU

பூஜா எதையும் பார்க்கும் மன நிலையில் இல்லாததால் அங்கிருந்த புத்தகம் ஒன்றை எடுத்து புரட்டி கொண்டிருந்தாள். அப்பொழுது தான், இன்னும் வீட்டிற்க்கு தான் வருவதை அறிவிக்கவில்லை என்பதை உணர்ந்து, போனை எடுத்து வாட்ஸ் அப்பில் அக்காவை அழைத்தாள். போனை எடுத்த ஷியாமளா.......

“ஹை பூர்வி, இப்போ தான் உன்னை பார்க்கணும் போல இருக்குன்னு நினைத்தேன். உடனே நீ கூபிட்டே. வீடியோ கால் ஆன் பண்ணு , உன்னை பார்க்கனும்.” என கூறினார்.

இப்போ இருக்கும் தனது முகத்தை அக்கா பார்த்தால் அதற்கு வேறு பல விளக்கங்கள் கொடுக்க வேண்டி இருக்கும், என எண்ணி,”நான் இந்தியா வர்றேன், நேரில் பார்க்கலாம் அக்கா” என பூர்வி கூறினாள்.

“வாவ் எப்போ”

“இப்போ, ஏர்போர்டில் தான் இருக்கேன். இன்னும் நான்கு மணிநேரத்தில் நம்ம வீட்டில் இருப்பேன்.”

“எனி ப்ராப்ளம் பூர்வி? என்ன திடீர்ன்னு?

“அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. உங்களை எல்லாம் பார்க்கணும் போல் இருந்தது, அது தான்.”

சியாமளாவிற்கு எதோ சரி இல்லை என புரிந்தாலும், தற்பொழுது அதை கேட்கும் நேரம் இல்லை என்பதால், “சரிடா சேப் ஜர்னி” என கூறி போனை வைத்தார்.

பூர்விக்கு  என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்பொழுது அக்கா கேட்கும் ஒரு கேள்விக்கே தன்னால் பதில் அளிக்க முடியவில்லை. ஊருக்கு சென்றால், அம்மா, அப்பா கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு எப்படிபதில்  சொல்வது என்வென்று சொல்வது, என்று ஒன்றும் புரியாமல், பொது இடம் என்பதால் அழ கூட முடியாமல் கண்களை மூடி இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

கண்களை மூடி அமர்ந்திருந்த பூர்வி, சிறிது நேரத்தில் தனது பக்கத்துக்கு இருக்கையில் யாரோ வந்து அமரும் அதிர்வை உணர்ந்தாள். இவ்வளவு இடம் காலியாக இருக்கும் பொழுது யார் வந்து இங்கு அமர்வது என எண்ணி கண்களை திறக்கலாமா என யோசித்த பொழுது.........

“ஹாய் பெண்டாட்டி” என்ற ஹஸ்கி வாய்ஸ் கேட்டது.

கண்களை திறக்காமலே தெரிந்தது அது இந்தரின் குரல் என்று........... கண்களை திறந்த பொழுதோ, இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் எதோ அணை திறந்தது போல் பாய்ந்து வந்தது அவனை பார்த்ததும்..........

அவளது கண்ணீரை பார்த்ததும் பதறி போனான் இந்தர். “ பூஜா என்னடா? என்னை பார்த்ததும் எதோ ஆனந்த கண்ணீர் வடிப்பன்னு பார்த்தா, இப்படி வயலின் இல்லாமலே சோக கீதம் பாடற” என்று கேட்டான்.

அவன் கூறியதை கேட்டு , வந்த கோபத்தில் கண்ணீரெல்லாம் வற்றியே போனது.“இது மட்டும் பொது இடமா இல்லாமல் இருந்திருந்தா, எனக்கு வர்ற கோபத்திற்கு பளார்ன்னு அறைஞ்சுட்டு தான் பேசியே  இருப்பேன். என கோபமாக கூறினாள் பூஜா.......

“சில் பேபி, பாத்தியா, நான் சொன்னவுடன் உன்னோட கண்ணீர் எல்லாம் ஆவியா மாறி போச்சு”  என குறும்புடன் கூறினான் இந்தர்.

“உங்களால நானே ஆவியா மாறிடுவேன் போல இருக்கு”........

“கல்யாணம் ஆனா முதல் நாள் பேசற பேச்சா இது?

“கல்யாணம் ஆச்சா? யாருக்கு? என தன் பங்கிற்கு வெறுபேற்றினாள் பூஜா...........

“சாரி , சாரி , உன்னிடம் சொல்ல நேரம் இல்லைடா, பாரு இவ்வளவு கம்மி நேரத்தில் எவ்வளவு வேலை பார்த்திருக்கேன் உன்னோட டார்லிங்.......

“ஆமா, என்னை வேலையில் இருந்து, டெர்மினேட் செய்தது போல் நிறைய வேலை இருந்திருக்கும்” என அப்பொழுதும் கோபமாகவே கூறினாள் பூஜா........

“இது அபாண்டம் பேபி, நான் எங்கடா உன்னை டெர்மினேட் செய்தேன்? உன்னோட ராஜினாமாவை ஏற்று கொண்டேன்.” என்று சொல்லிய படி குறும்பாக சிரித்த பொழுது அவனது வலது கன்னத்தில் சிறு குழி விழுந்தது. அந்த நேரத்திலும் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை பூஜாவால். அதை அவன் கவனித்து விட கூடாது என்று முகத்தை திருப்பி கொண்டாள்...........

“சரி இப்போ ஏன் என்னோட ராஜினாமாவை ஏத்துகிட்டீங்க ?

“முதலாளியம்மா எப்படி அங்க வேலை பார்க்க முடியும் அதனால் தான்.”

“இதை எல்லாம் என்கிட்ட சொல்லிட்டு செய்யலாம் இல்ல.........

“உனக்கு ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்ன்னு தான் பேபி........

“ம்ம்ம்ம்........ அது என்ன ப்ரைசு ?

“ஜோக்கா, ஓகே டா நீ சொன்னன்னு சிரிச்சுட்டேன்..........

“அது என்ன புதுசா பேபி? எதோ குழந்தையை கொஞ்சற மாதிரி.........

“நமக்கு பேபி வர்ற வரைக்கும்,  நீ எனக்கு பேபி தான்டா.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.