(Reading time: 35 - 69 minutes)

“இது எதோ பாசத்தில் கேட்பது போல் தெரியலையே. எல்லோருக்கும் சேர்த்து எதோ விஷயம் சொல்ல துடிப்பது போல் தெரியுதே” என அக்கா வாரினார் பூர்வியை..........

“யாருக்கு, யார் மேல் பாசமில்லை” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார் செல்ல துரை.

“பாருங்க செல்லா, வந்ததில் இருந்து வீட்டில் இல்லாத ஆட்களையே கேட்டு கொண்டு இருக்கிறாள்.” என தனது கணவரிடம் கூறினார் ஷியாமளா...........

“எல்லோரும் சாப்பிட வாங்க” என அழைத்தார் சரோஜினி.........

சாப்பிட்டு முடித்த பின் அனைவரும் ஹாலில் அமர்ந்த பொழுது, டெசர்ட்டாக பூர்விக்கு பிடித்த ஆப்பிள் கஸ்டர்ட் இருந்த பவுல்களை, அனைவருக்கும் கொடுத்து விட்டு பீஷ்மரின் அருகில் அமர்ந்தார் சரோஜினி.........

“இப்போ சொல்லு பூர்வி” என மகளுக்கு பேச வாய்பளித்தார்.

பூர்வி என்ன சொல்ல, எப்படி ஆரம்பிக்க என குழம்பி கொண்டு இருந்த பொழுது, பீஷ்மரே ஆரம்பித்தார். “நம்ம பூர்விக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. “ என கூறிய பொழுது பூர்விக்கு மூச்சே ஒரு நிமிடம் நின்று போனது. “அவளுக்கு பிடித்த வரன் தான்” என கூறி மேலும் குழப்பினார். “நம்ம பூர்வியோட ரெசார்ட் ஒனர் தான். நம்ம பிரகாசம் சொன்னான், மாப்பிள்ளையோட அம்மா, பூர்வியை பார்த்துட்டு பெண் கேட்டு இருக்காங்கன்னு. ஜாதகம் கூட அவங்களே பார்த்துட்டாங்களாம். ஜாதக பொருத்தம் அமோகமா இருக்குன்னு சொல்லி இருக்காங்க. அவங்க வீட்டுக்கு நம்ம பெண்ணை அனுப்பினால் ராணி மாதிரி பார்த்துப்பாங்க அப்படின்னு சொன்னான்.” நின்ற மூச்சு அப்பொழுது தான் சீராக வந்தது பூர்விக்கு. “ஏன் பூர்வி, உனக்கு ஓகேவா? நீ பார்த்திருக்கியா மாப்பிளையை? என கேட்டார் பீஷ்மர்.

“ஓஹோ, அதான் மேடம் BMWவில் வந்து இறங்கினிங்களா? என கலாய்க்க ஆரம்பித்தார் ஷியாமளா.........

“ம்...... பார்த்திருக்கேன்பா. அவங்க ஐந்து ரெசர்டில் ஒன்றில் தான் நான் வேலை பார்த்தேன். அதனால் அப்பப்போ வருவார்.”

“அவங்க அம்மா உன்னை எப்போ பார்த்தாங்க பூர்வி” என சரோஜினி கேட்டார்.

“அவங்க கல்யாண நாள் விருந்தில் பார்தேன்மா, அப்புறம் ஒருநாள் நைட்  போட் இல்லாததால், நான் , ஸ்ருதி, ஹெலனா மூன்று பேரும் அவங்க வீட்டில் தங்கினோம். அதை அன்றே உங்களிடம் சொன்னேன்.

“ஆமா, அவங்க வீடு கூட பத்து மாடி இருந்ததுன்னு சொன்னியே.” என ஆச்சரியமாக கேட்டார் சரோ........

“மேல இருக்கும் ஐந்து மாடியை தான் அவங்க உபயோகிகறாங்க. மீதியில் எல்லாம் அவங்க ரெசார்ட் ஆபிஸ் இருக்கு.

இதை கேட்டதும் சரோஜினி சிறிது வருத்ததுடன் யோசிக்க ஆரம்பித்தார். அதை பார்த்த பீஷ்மர், என்ன சரோ, ஒரே யோசனை.

“சியாமளா வீட்டு ஆளுங்க நமக்கு எத்த மாதிரி இருந்தாங்க. நாம சீர் செய்ய வசதியா இருந்துச்சு. இது நமக்கு மீறின இடமா தெரியுதே, அதான்” என்று இழுத்தார் சரோஜினி........

”இதுக்கெல்லாம் கவலை படாதிங்க அத்தை, ஷியமளாவுக்கு செய்த பொழுது, மாமா மட்டும் தான் இருந்தாங்க, இப்போ கூட பிறக்காத அண்ணனா, நானும் இருக்கேன் இரண்டு  சீரா செய்திடலாம்.” என கூறி குணத்தில் தான் குபேரன் என்று காட்டினார் செல்ல துரை.

அதை கேட்ட ஷியாமளாவிற்க்கு, தனது காதல் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது.

“அதெல்லாம் ஒன்றும் தேவை இல்லை. எப்படியும் கல்யாணம் முடிந்து அங்கு போகும் பொழுது எதையும் எடுத்து செல்ல முடியாது. அதனால் இந்த சீர், அது இதுன்னு எதுவும் வேண்டாம்” என பூர்வி தனது என்னத்தை கூறினாள்.

“சரி நாளை அவர்கள் வந்த பின் இதெல்லாம் பார்த்து கொள்ளலாம்.” என பீஷ்மர் கூற........

“என்ன நாளைக்கே வர்றாங்களா? என சரோஜினி ஆச்சரிய பட்டார்.......

“ஆமா சரோ, பிரகாசம் அப்படி தான் சொன்னான். பெண்ணை அவங்க ஏற்கனவே பார்த்துட்டதால, ஜஸ்ட் நம்மை பார்த்து பேச வர்றாங்க.”

“நாம மாப்பிள்ளையை பார்க்க வேண்டாமா?

“அவரும் நாளைக்கு அவர்களுடன் வருவாருன்னு பிரகாசம் சொன்னான்.

“என்னங்க , எதோ ரொம்ப அவசரமா நடக்கற மாதிரி இருக்கு. பூர்வி நீ சொல்லு மாப்பிள்ளை எப்படி? நம்ம பெரிய மாப்பிள்ளை போல் நம்ம வீட்டுக்கு ஏற்ப இருப்பாரா?

“அத்தான் அளவுக்கு சொல்ல முடியாது. ஓரளவுக்கு எதிர் பார்க்கலாம்.”

“வெறும் இந்த ஆறு மாதத்தில், உனக்கு என்ன பெரிசா தெரிஞ்சிருக்க போகுது.”

“மா....... அவரை எனக்கு சுவிஸ்ல் படிக்க போய் இருந்த போதே தெரியும். அவரும் எங்க யூனிவர்சிட்டில தான் MBA படிச்சார்.

“ஓஹோ கதை அப்படி போகுதா? என்கிட்ட கூட சொல்லவே இல்ல” என சியாமளா குறுக்கிட்டார்.

“சொல்லற அளவுக்கு எதுவும் நடக்கலைக்கா. அதனால் சொல்லலை. தெரியும் அவ்வளவு தான்.

 “சரி நம்பிட்டோம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.