(Reading time: 35 - 69 minutes)

“அவளை கிண்டலடிப்பதை நிப்பாட்டிட்டு, ஆளுக்கொரு வேலையா பாருங்க. நாளைக்கு அவங்க வர்றப்ப வீடு அழகா இருக்கணும். என்று பீஷ்மர் கூறினார்.

எப்பொழுதுமே அவர்கள் வீட்டை சரோஜினி அழகாக தான் வைத்திருப்பார். ஜனனி ஏஞ்சலும் சமத்தாக இருப்பதால் வீடு வீடாகவே இருக்கும் எப்பொழுதும். அடுத்து என்ன ஸ்வீட் செய்யலாம் என்ற கலந்தாய்வு நடந்து முடிந்து அவரவர் வேலையே பார்க்க சென்றனர்.

பூர்வியும், அவளது அறைக்கு சென்று, படுக்கையில் விழுந்து யோசித்து கொண்டிருந்தாள். தான் என்ன மன நிலையில் இருக்கிறோம் என்று. சந்தோஷமா? டென்ஷனா? அல்லது இவை சேர்ந்த கலவையா? ஒன்றும் புரியவில்லை பூர்விக்கு. அந்நேரம் அவளது செல்போன் அலறியது. எடுத்து பார்த்த பொழுது தெரியாத எண்ணாக இருந்தது. எடுத்து “ஹலோ” என்றாள்.

“எல்லாம் சரியா இருக்கா பூஜா டார்லிங்” என்ற இந்தரின் குரல் கேட்டு, மனதிற்குள் பனி மழை பொழிந்தது.

“ரொம்ப வேலை தான் பார்த்து இருக்கீங்க, ஒத்துக்கறேன். இவ்வளவு பேரிடம் பேச முடிந்த உங்களால் ஒரு ரெண்டு நிமிஷம் ஒதுக்கி என்னிடம் சொல்ல முடியல்ல அப்படித் தானே?

“நான், என் மனசுக்குள்ள நினைத்தாலே உனக்கு தெரிஞ்சிரும்ன்னு நினைச்சுட்டேன் பேபி, உனக்கு அப்படி இல்லையா? என கூறி புன்னகைதான் இந்தர்.

“இந்த சினிமா வசனம் எல்லாம் வேண்டாம். நான் இங்க அப்பா, அம்மாவிடம் சமாளிக்க எவ்வளவு  கஷ்டபட்டேன் தெரியுமா?.

“உனக்கு ஒரு கஷ்டமும் வர கூடாதுன்னு, பார்த்து, பார்த்து அரேஞ் மாரேஜ் மாதிரி செய்யறேன். உனக்கு என்னமா கஷ்டம் இதில்.

“ம்....... மாப்பிள்ளையோட அம்மாக்கு பிடிச்சு இருக்காம், ஆனா மாப்பிள்ளைக்கு?, அப்படின்னு எங்க அப்பா யோசிக்கறார்.

“உன் ஜித்தூ, எப்படி ப்ரப்போஸ் செய்தேன்னு, சொல்ல வேண்டியது தான என் மாமாவிடம். போட்டோஸ் அனுப்பவா வாட்ஸ் அப்பில்.”

“போட்டோ வேற எடுத்திங்களா அன்னைக்கு?

“ம்ம்........ நம்ம பேரன்,பேத்திகளிடம் காட்ட வேண்டாமா, அதுக்கு தான்........ ஸ்வீட் மெமரிஸ்.......

“......................”

“உன்னோட ஸ்மைல் நல்லா இருக்குடா இப்போ, அங்க இருந்திருந்தா இதை கூட கிளிக் செய்திருப்பேன்.

“நான் இப்போ ஸ்மைல் செய்தேன்னு யார் சொன்னா உங்க கிட்ட?

“நான் சொன்னதை கேட்டு நீ ஒரு நிமிடம் பாஸ் விட்ட, அப்போ நீ கற்பனையில் நான் சொன்னதை நினைத்து பார்த்திருப்ப, சோ கண்டிப்பா ஸ்மைல் செய்திருப்ப, ரைட்டா?

“நான் கற்பனை செய்தேன், என்ற உங்க கற்பனை நல்லா இருக்கு. என சொல்லி கொண்டிருந்த பொழுதே “சித்தி” என்றபடி ப்ளே ஸ்கூலில் இருந்து வந்த ஜனனி, படுக்கையின் மேல் ஏறி  பூர்வியின் கழுத்தை கட்டி கொண்டாள்.

“ஜானுமா என்றபடி அவளை அணைத்து, போனில் சரி இந்தர், ஜனனி வந்துட்டா, நான்  அப்புறம் பேசறேன், என்று போனை அனைக்க போன பூர்வியிடம், ஒரு நிமிஷம் பூஜா, வீடியோ கால் ஆன் செய்து ஜானுக்கு ஒரு ஹை சொல்லிடறேன், என்றபடி வீடியோ கால் ஆன் செய்தான். “ஹாய் ஜானு என்றான்.”

ஜானு திரு திருவென விழித்து, “யார் சித்தி” என்றாள்.

“நான் உன் சித்தப்பாடா” என்று கொஞ்சியபடி இந்தர் சொன்னதில் புன்னகை மலர்ந்தது ஜனனி முகத்தில்.

“என்னை உனக்கு பிடிச்சு இருக்கா?

“ம்” என்றாள் ஜனனி.........

“குட், அப்போ நிறைய சாக்லேட் வாங்கிட்டு, நாளைக்கு உன்னை பார்க்க வரேன். ஒகே வா.?

“ஹை ஜாலி” என சிரித்தபடி கூறினாள் ஜானு.........

“ஓகேடா , ரெண்டு செல்லத்துக்கும் பை என கூறி போனை கட் செய்தான் இந்தர்...........

று நாள் அவர்கள் மூவரும் அங்கு நுழைந்தவுடன் , பெரிய வெள்ளி தாம்பாளத்தில், பூ, பழம், வெற்றிலை பாக்கு, இவற்றுடன், கல்யாண சேலை போல் முழுவதும் ஜரிகை வேய்ந்த காஞ்சிபுரம் சேலையுடன் அவர்கள் கார் டிரைவர் கொண்டு வந்து, டிபாயில் வைத்து சென்றார்.

பீஷ்மர் அவர்களை வரவேற்று அமர செய்தார். வீட்டிலிருந்த அனைவரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். செல்ல துரை டாக்டர் என்றதும், அர்ஜுன் அவருடன் நன்றாக பேச ஆரம்பித்து விட்டார்.  இரண்டு டாக்டர்கள் சேர்ந்தால் எப்படி பேசுவார்கள் என்று உங்களுக்கே தெரியும். சரோஜினியும், சியாமளாவும், சம்யுக்தாவுடன் பேச, பீஷ்மர் , இந்தருடன் பேசாமல் சிறிது நேரம் அவனையே பார்த்து கொண்டிருந்தார்.

“சொல்லுங்க மாமா” என்றான் பீஷ்மரை பார்த்து இந்தர்.........

“வாங்க, வெளியே தோட்டத்தில் போய் பேசலாம் மிஸ்டர்.இந்தர் ” என அவனை தனியே அழைத்து சென்றார்.

“தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து, அவனையும் அமர சொன்னார்.

“சொல்லுங்க, பூர்வியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?

“என்னை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ, அவ்வளவு பூஜாவையும் பிடிக்கும் மாமா”. என்றான் சிறு புன்னகையோடு. அவனது புன்னகை, அவரிடமும் ஒட்டி கொண்டது அவனது பதிலில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.