(Reading time: 35 - 69 minutes)

“ஐ அம் இம்ப்ரெஸ்ட். வானம் அளவு பிடிக்கும், கடல் அளவு பிடிக்கும்ன்னு சொல்லாம இப்படி சொன்னது மனதுக்கு திருப்தியா இருக்கு மாப்பிள்ளை”.

மாப்பிளளை என்ற ஒற்றை வார்த்தையில்  அவரது பரிபூரண சம்மதத்தை தெரிவித்தார் பீஷ்மர்.

அதன் பின் அவனது தொழில் தொடர்பான சில கேள்விகள், அவனை பற்றி சில கேள்விகள், பின் பூர்வியை பற்றி என நேரம் போனது தெரியாமல் இருவரும் பேசி கொண்டிருந்தனர், ஜனனி வந்து அழைக்கும் வரை.

 “தாத்தா, சித்தப்பா, உங்களை சரோமா உள்ள கூப்பிடறாங்க  என்ற படி இருவரையும் அழைத்தாள்  ஜனனி.........

“என்ன சித்தப்பா? என்னை பார்க்க வரேன்னு சொல்லிட்டு, இங்க உட்கார்ந்து இருக்கீங்க” என்று இந்தரை கேட்டாள் ஜனனி.........

“உன்னை பார்க்க தான்டா வந்தேன், அதுக்கு உன் தாத்தாவிடம் சம்மதம் கேட்கணும் இல்ல அதான்.

“சரி, எங்க என் சாக்லேட்” என ஒரு அடிமை சிக்கிய தெம்பில், அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள் ஜானுமா.........

“இதோடா, கொண்டு வர சொல்றேன்” என கூறி அவர்கள் டிரைவரை போனில் அழைத்து அந்த சாக்லேட் அடங்கிய கிப்ட் ஹம்பரை எடுத்து வர சொன்னான். அவர் கொண்டு வந்த கூடையை பார்த்தவுடன் ஜனனியின் கண்கள் விரிந்தன.

NAU

இதுவரை அவளுக்கு இப்படி யாரும் சாக்லேட் வாங்கி வந்ததில்லை. வீட்டிற்கு ஒரே குழந்தை என்றாலும் சற்று கண்டிப்புடனேயே அனைவரும் நடந்து கொள்வார்கள். அதிகம் வாங்கி கொடுப்பது பூர்வியாகத்தான் இருக்கும்.

“ஐ லவ் யூ சித்தப்பா “ அவனை அணைத்து கொண்டாள் ஜானு.......

அவளால் அதை தூக்க முடியாது என்று, இந்தரே அதை தூக்கி வந்தான் உள்ளே. அதை பார்த்து சியாமளா “ ஹையோ,  என்ன இது இவ்வளவு “ என்று பதறி போனாள்.

“இது ஜானுக்கு மட்டும் இல்லை, அதை அவ பிரண்ட்ஸ்சோட ஷேர் பண்ணிப்பா, அப்படித் தானே ஜானுமா” என்று அவளிடம் கேட்டு உறுதி படுத்தி கொண்டான்.

அனைவரும் டிபன் சாப்பிட்டு முடித்தவுடன், கிளம்பும் பொழுது சம்யுக்தா அவர்களிடம் “இன்று இரவு விருந்திற்கு எங்க வீட்டுக்கு வாங்க, எங்க வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும், மேலும் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பேச வசதியா இருக்கும்.” என கூறி அவர்களை அழைத்தார்.

“கல்யாணத்துக்கு முன் எப்படி பூர்வியை எப்படி உங்க வீட்டுக்கு அழைத்து வருவது” என்று சரோஜினி சந்தேகமாக கேட்டார்.

“நாங்க ஓரளவு பார்மாலிடிஸ் பார்ப்பதில்லை. அதனால் கண்டிப்பாக உடன் அழைத்து வாங்க. அவ தானே இனிமே அங்கே அதிகமா தங்குவா. இப்பவே பார்த்து கொண்டால், ஏதாவது அவளுக்கு அங்கே மாற்ற வேண்டும் என்று விரும்பினால், அதை செய்யலாம் அதற்கு தான்.” என சம்யுக்தா கூறினார்.

அவரது பதில் சரோஜினிக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. கல்யாணத்திற்கு முன்பே, தனது மகளுக்கு இவ்வளவு முக்கித்துவம் அளிக்கின்றனர், என்று பெருமையாகவும் இருந்தது.

அன்று இரவு அவர்கள் வீட்டிற்கு சென்று, வீட்டை வெளியே இருந்து பார்த்த பொழுது அசந்து தான் போயினர். இந்த வீட்டிலா தேவை பட்டால் மாற்றி கொள்ளலாம் என கூறினார். உள்ளே சென்று பார்த்த பொழுது, ஒவ்வொரு பொருளிலும் செல்வ செழிப்பு தெரிந்தது.

“ஹய்யா ஜாலி என்ற ஜானுவை தவிர மற்ற அனைவரும் வாயடைத்து போயிருந்தனர். அவர்கள் வீடும் ரெசார்ட் போல் இருந்தது.

NAU

ஹாய் பிரண்ட்ஸ், நான் எப்பொழுதும் கதை படிக்கும் பொழுது, மிகவும் மனம் மகிழ்ந்து, ரசிக்கும் இடம் வந்தால், சிறிது நேரம் படிப்பதை நிறுத்தி விட்டு அந்த சந்தோஷ மன நிலையில் இருக்க விரும்புவேன். இது கொஞ்சம் அரிதாக நிகழும் நிகழ்வு. அது போல் யாருக்காவது என்றாவது எனது கதை படிக்கும் பொழுது தோன்றினால், என்னுடன் பகிர்ந்து கொள்ளவும். (கொஞ்சம் பேராசை தான்). நமது சில்சியில், வத்சலா மாம் கதை படிக்கும் பொழுது எனக்கு அப்படி இருக்கும்.

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 11

Episode 13

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.