(Reading time: 22 - 44 minutes)

13. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

ரெசார்ட் போன்ற அவர்களது வீட்டை பார்த்து வியந்த அனைவரையும் அழைத்து சென்ற சம்யுக்தா, வீட்டை முழுவதுமாக சுற்றி காண்பித்தார்.

அனைவருடன் கிளம்பிய பூஜாவை, இந்தர் தடுத்து நிறுத்தி, “உனக்கு, முதலில் தோட்டத்தை காண்பிக்கிறேன்” என கூறி அவளை தனியாக தோட்டம் பார்க்க அழைத்து சென்றான்.

தோட்டம் சம்யுக்தாவின் மேற்பார்வையில் மிகவும் அழகாக இருந்தது.  “அம்மாவிற்கு, வீடு, தோட்ட பராமரிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். பேஸ் புக்கில் கூட farmville தான் எப்போதும் விளையாடுவார்கள். அதனால் தான் மால்டிவ்ஸ் லும், ஒரு தனி தீவை லீசுக்கு எடுத்து, அங்கு ஒரு பெரிய பண்ணை நடத்துகிறார்கள். ஒரு நாள் நாம் அதற்கும் சென்று வரலாம்” என கூறி தோட்டத்தை சுற்றி காட்டினான்.

தோட்டம் மிக நேர்த்தியாக அழகாக அதிக மரங்கள் நிறைந்தும் காணப்பட்டது. பூஜா வீட்டிலும் தோட்டம் இருக்கும் தான், அக்கா சியாமளாவிற்கு அதில் ஆர்வம் அதிகம் தான், இருப்பினும் இந்த தோட்டத்துடன் ஒப்பிடும் பொழுது, அது பூசணிக்காய் அருகில் வைத்த சுண்டக்காயாக தெரிந்தது பூஜாவிற்கு.

அதிலும் அந்த ஊஞ்சல், பச்சை கம்பளம் விரித்தாற் போல் இருந்த புல்லின் மேல் அழகாக வீற்றிருந்தது. அதை பார்த்து மகிழ்ந்து, அதில் சென்று, அமர்ந்து கொண்டாள் பூஜா........... இந்தரும் அவள் அருகில் அமர்ந்ததும் அவனிடம்..........

“அப்பாவிடம் என்ன சொல்லி சம்மதிக்க வச்சிங்க? நீங்க எல்லாம் கிளம்பி சென்றதும், ஒரே உங்க புராணம் தான். எங்க எல்லார் காதிலும் இரத்தம் வர்ற அளவுக்கு. இருந்தாலும் ரொம்ப நன்றி இந்தர், அப்பாவை இப்படி சந்தோசமா, சம்மதிக்க வைத்ததற்கு”. என கூறி அவனை நன்றியுடன் பார்த்தாள்.

“எனி திங் பார் யூ பேபி, இந்த நன்றியை, இன்னும் கொஞ்சம் என் பக்கத்தில் உட்கார்ந்து சொன்னால் ரொம்ப நல்லா இருக்கும்.”

“அதுக்கு, நீங்க ஊஞ்சலை சின்னதா வாங்கி போட்டு இருக்கணும். இவ்வளவு பெருசா இருந்தா, இப்படித் தான்”.

“சோ, அது என் தப்புன்னு சொல்ற? ம்........ என் தப்பை எப்படி சரி செய்யலாம்!!!!!  என்று கேட்டபடி எழுந்து அவள் அருகில் வந்து அமர்ந்தான். “சரி உன் நன்றியை நான் சொன்னது போல், உன் அருகில் நான் தான் வந்து அமர்ந்தேன், அதனால் உன் நன்றியோட ரேஞ் அதிகமா ஆகிவிட்டது. சோ இன்னும் கொஞ்சம் வெயிட்டா கவனியேன், உன் ஜித்துவை.” என்ற படி அவனது கன்னத்தை காண்பித்தான் பூஜாவிடம்.........

அவன் கன்னத்தை காண்பித்தும் இவளது கன்னம் சிவந்தது நாணத்தால். பேச்சை திசை திருப்ப எண்ணி, “ஆமா நான் மனசுக்குள் மட்டும் தான் இதுவரை உங்களை, ஜித்தூன்னு கூப்பிட்டு இருக்கேன், உங்களுக்கு எப்படி தெரியும் அது? என கேட்டாள் பூஜா.........

அவளது பேச்சு திசை மாற்றலை ரசித்த படி, அவள் அவனை முதல் முறை ஜித்தூ என்று அழைத்ததை எண்ணி பார்த்து, “நம்ம கிராஜுவேஷன் டே, அன்று, உன்னை அந்த பார்டி முடிந்ததும் வீட்டிற்க்கு அழைத்து சென்று, படுக்க வைத்து கிளம்பலாம் என நினைத்த பொழுது, நீ உன் கைகளை மாலையாக்கி, என் கழுத்தில் இட்டு, ஜித்தூ எனக்கு பயமா இருக்கு, என்னை தனியா விட்டுட்டு போகாதிங்கன்னு சொன்ன, அதை கேட்டதற்கு பின் என்னால் எப்படி உன்னை தனியே விட்டு போயிருந்திருக்க முடியும். முதல் முறை நீ சொன்னதை கேட்ட பொழுது எப்படி இருந்தது தெரியுமா? அப்படியே ஒரு கூடை பூவை என் தலை மேல் கொட்டியது போல் இருந்தது.” என ரசித்து கூறினான் இந்தர்...........

“ஹே........ நீங்க ரெண்டு பேரும், இங்க இருக்கிங்களா? என்றபடி அங்கு வந்தாள் சியாமளா......... அங்கு வந்தபின்பே அந்த தோட்டத்தின் அழகை கண்டு வியந்து போனாள். “விளக்கு வெளிச்சத்திலேயே இவ்வளவு அழகா இருக்கே, இன்னும் பகலில் பார்த்தால் இவ்வளவு அழகா இருக்கும்.” என மகிழ்ச்சியுடன் கூறினாள்.

“நீங்க வேணா, இங்கு தங்கி நாளைக்கு காலையில் பாருங்களேன் அண்ணி” என உரிமையுடன் கூறினான் இந்தர்.

“பூஜாவை, இங்க இருக்க சொல்ல, என்னையும் துணைக்கு சேர்த்துகறிங்களா?

“அவளை, இங்கு தங்க சொல்ல, துணைக்கு நீங்க வேண்டுமா என்ன?

“இல்லன்னா எங்க அம்மா ஒதுக்கமாட்டங்களே”..........

“நான் ஒத்துகொள்ள வச்சுட்டா, என்ன பெட்? என ஆர்வமுடன் ஷியமளாவிடம், இந்தர் வினவ..........

“அக்கா, நீ சும்மா இரு. அவர் எதாவது பேசி, அம்மாவையே சம்மதிக்க வச்சுடுவார். அப்புறம் உனக்கு தான் நஷ்டம்.” என பூஜா அவர்கள் பேச்சின் உள்ளே நுழைந்தாள்.

“நீயா பூஜா பயப்படற? என்னால் நம்ம முடியவில்லை, இல்லை, இல்லை” என எக்கோ குரலுடன் பூஜாவை கேலி செய்தாள், சியாமளா........

“உனக்கு அவரை பத்தி தெரியாது, அவ்வளவு தான் சொல்லிட்டேன்.” என பூஜா தன் அக்காவை காப்பாற்ற பார்த்தாள்.

“அவ அப்படித்தான், ஓவரா பில்டப் பண்ணுவா, அவ பியான்சியை பத்தி, நீங்க சொல்லுங்க அண்ணி, என்ன பெட் வச்சுக்கலாம்? என மறுபடி வம்புக்கிழுத்தான், ஷியமளாவை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.