(Reading time: 22 - 44 minutes)

இந்தருக்கு அக்கா, தங்கை முறை உறவு பெண்கள், பூஜா சேலையை  மாற்றி அணிந்ததும், அவளை மேடைக்கு அழைத்து வந்தனர்.

கீழே நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த இந்தர் சொக்கித்தான் போனான். இரண்டு நாட்களுக்கு முன் அம்மா, சித்தியுடன்  கடைக்கு சென்று  புடவையை தேர்ந்தெடுத்தது அவன் தான். இருப்பினும் இன்று அதை பூஜா உடுத்தி பார்க்கும் பொழுது, செடியிலிருந்து ரோஜா பூவே இறங்கி வந்தது போல் இருந்தது,  இந்தருக்கு.

முதலில் வீட்டு பெரியவர் லீலாவதி வந்து,  ரோஜா இதழ்களால் செய்த  ஒரு பூ ஆரத்தை எடுத்து பூஜாவின் தலையில் வைத்தார். அடுத்து வைர நெக்லசை எடுத்து அவளது கழுத்தில் மாட்டினார். சம்யுக்தா வந்து மாலை அணிவித்தார்.

முன்பானால் அணைத்து பெண்களும் வந்து பூ சரத்தை மண பெண்ணின் தலையில் வைப்பர். இன்றைய காலத்தில் பியூட்டி பார்லர் லேடி வந்து தலை அலங்காரம் செய்து விடுவதால், அது கலைந்து விட கூடாது என்று உதிரி பூக்களை வைத்து விடுகின்றனர்.

அடுத்து, இந்தரை அழைத்து பூஜாவின் அருகில் நிற்க வைத்து, அவனுக்கும் ஒரு மாலை அணிவித்தனர். ஒவ்வொரு குடும்பமாக வந்து பூவை தூவி விட்டு இருவருக்கும் ஆசிர்வாதம் செய்துவிட்டு உடன் நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.

அதன் பின் கலை நிகழ்ச்சி ஆரம்பமாக இருவரையும் கிழே இருந்த சேரில் அமர வைத்தனர். விருந்தும் ஆரம்பமானது.

“சேலை கலர் உனக்கு பிடிச்சு இருக்காடா?” என இந்தர் கேட்டதற்கு வியப்புடன் பார்த்தாள் பூஜா,

“நீங்களா தேர்ந்தெடுத்தீங்க? சூப்பர் ஜித்து, எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.”

“ம்....... அம்மாவும், சித்தியும் , உன்னோட நிறத்துக்கு டார்க் கலர் தான் நல்லா இருக்கும்ன்னு சொல்லி, பார்த்துட்டு இருந்தாங்க. உன்னோட ஜித்து தான் களத்தில் இறங்கி அவங்களை ஓரம் கட்டி இதை செலக்ட் செய்தேன்.” என காலரை தூக்கி விட்டு கொண்டான்.

அதற்குள் இளையவர் பட்டாளம் அவர்களை சூழ்ந்து கொண்டது. பெரிய குடும்பம் என்பதால் அனைவரையும் அறிமுக படுத்தினான் இந்தர். அனைவரும் முக நூலில், நண்பர் வேண்டுகோள் விடுப்பதாக கூறி பூஜாவின் முக நூல், முகவரியை வாங்கி கொண்டனர்.

அனைவரும் ஆளாளுக்கு கிண்டல் செய்ய, அப்படியே இவர்களது காதல் கதையையும் கேட்டனர்.

“சரி, இப்போ கதை மட்டும் வேணுமா இல்ல, விஷுவலாவும் பார்க்கணுமா? என இந்தர் கேட்க,

“விஷுவல்” என அனைவரும் கோரஸ் பாடினர்.

ஈவன்ட் மானேஜ்மென்ட் ஆளிடம், இந்தர் தலை அசைக்க, அவரும், அங்கிருந்த மேடையில் ஸ்க்ரீனை தொங்க விட்டு ப்ரொஜெக்டரை ஆன் செய்தார்.

அதில் ஸ்லைடு ஷோவாக புகை படங்கள் தோன்ற ஆரம்பித்தது. இருவரும் முதல் நாள் Rehine Falls ல் இந்தர் எடுத்த செல்பியில் பின்னால் பூஜா இருந்ததில் ஆரம்பித்தது. அதன் பின் அவள் தனியாக கார் பார்க்கில் நின்றதும், பின் இருவரும் காரின் உள்ளே அமர்ந்து இருப்பது போன்ற செல்பியும், என இப்படியாக சென்றது புகைபடம். கடைசியாக சென்னையில் அவர்கள் வீட்டில் எடுத்தது வரை.

இதில் இந்தர், பூஜாவிடம் ப்ரபோஸ் செய்த புகைப்படம் தோன்றிய பொழுது விசில் பறந்தது கசின்ஸ் மத்தியில்.

அதை பார்த்து முடித்ததும், பூஜா முதற் கொண்டு பலருக்கு பதில் சொல்ல வேண்டி இருந்தது இந்தருக்கு. பூஜாவிர்க்கும் தான்.

“ஓஹோ .......... என கை தட்டி ஆர்பரித்தனர் இளையவர் பட்டாளம்.

முதலில் சித்தி வந்து இந்தரை கேட்க ஆரம்பித்தார். “ என்ன இந்தர் சுவிஸில் இவ்வளவு போட்டோ இருக்கு இரண்டு பேரும் சேர்ந்து........... என்னிடம் ஒண்ணுமே சொல்லல நீ “

“கூல் சித்தி, இந்த இடத்திற்கு எல்லாம் என்னோட பிரண்ட்ஸ்சோட போறேன்னு சொல்லிட்டு தான் போனேன். நியாபகம் இருக்கா?

“படவா, பிரண்ட்ஸ்சோட போறேன்னு சொல்லிட்டு,  பிரண்டோட போயிருக்க,  அப்போ ஒரு போட்டோ கூட என்னிடம் காட்டல. இரு நீ கல்யாணம் முடிந்து, தேன் நிலவுக்கு அங்க தான வருவ அப்போ பாத்துக்கறேன்.”

“என்னோட ஹனி மூன் டெஸ்டினேஷன் சுவிஸ் இல்லை சித்தி, அதனால நீங்க ரொம்ப பிளான் வைத்து கொள்ளாதீங்க என்னை வெறுப்பேற்ற “ என கூறி சித்தியையே வெறுபேற்றினான் இந்தர்........

அதன் பின் இனிதே விழா முடிந்து அனைவரும் அவரவர் வீடு திரும்பினர்.

பூஜா வீட்டிற்க்கு வந்து உடை மாற்றி தனது படுக்கையில் விழுந்த சில நிமிடங்களில் ஸ்ருதி அவளை வாட்சப்பில் அழைத்தாள்.

“என்ன பூர்வி, உனக்கு இன்று கல்யாண நிச்சயம்ன்னு ரெண்டு நாள் முன்பு சொன்ன சரி, ஏன் அது இந்தர் சார் கூடன்னு சொல்லல?  இப்போ முக நூலில் அவரோட போட்டோஸ் பார்த்து தான் தெரிஞ்சுது. இது என்ன அரேஞ்சுடு மேரேஜா, இல்ல லவ் மேரேஜா? எனக்கும் ஹெலனாவிர்க்கும் தலையே சுத்துது.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.