(Reading time: 22 - 44 minutes)

“சாரி ஸ்ருதி, உன்னிடம் சொல்ல கூடாதுன்னு இல்ல, அதை நேரில் தான் சொல்லனும்ன்னு இருந்தேன். நீ இப்போ கேட்கிற கேள்விக்கும், இன்னும் என்னவெல்லாம் கேட்கணும்ன்னு நினைக்கிறியோ, எல்லாவற்றிற்கும் சேர்த்து, நேரில் நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்திற்கு வரும் பொழுது சொல்றேன். கோவிசுக்காதிங்க, ப்ளீஸ்”...........

“ஒகே, ஓகே. மன்னிச்சுட்டேன், அதுக்காக நீ இப்படி எனக்கு மாரியாதை எல்லாம் கொடுக்க வேண்டாம்.”

“அட, அது உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து சொன்னது. உனக்கு ஒரு மரியாதையும் இல்லை.

இவர்கள் இப்படி அரட்டை அடித்து கொண்டிருந்த பொழுதே “பூஜா“ என்றபடி அக்கா ஷியாமளா, ஜனனியை தூங்க வைத்து விட்டு வந்தார். 

“ஓகே கைஸ் , நான் அப்புறம் பேசறேன். என்றபடி போனை அணைத்து விட்டு “என்ன அக்கா” என்றாள்.

“சொல்லு பூஜா” என்றாள் சியாமளா .........

“என்ன சொல்லணும்?

“உனக்கு நெஜமாவே இந்தரை பிடிச்சு இருக்கா?”

“அக்கா.......... ஏன் இப்போ, இப்படி ஒரு கேள்வி?

“இந்தர் காட்டிய போட்டோஸ் படி பார்த்தால், நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா லவ் செய்திருக்கணும், அப்படி இருந்திருந்தா, நீ என்னிடம் மறைத்து இருக்க மாட்ட. இந்தரையும் என்னால் சந்தேகபட முடியலை. என்ன தான் ஆச்சு, கொஞ்சம் விளக்கமா சொல்லேன்.”

“ஒன்னும் பெருசா இல்லக்கா, சுவிஸில் நாங்க லவ் பண்ண பொழுது உனக்கு, உன் வீட்டில் பிரச்சனை. அதனால் சொல்லல. அப்புறம் அங்கிருந்து கிளம்பும் பொழுது, இந்தர் பிசினஸில் சாதித்து விட்டு தான் திருமணம். அது வரை வீட்டிற்க்கு சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டார். அதனால் தான். நீ பயப்படும் படி ஒன்னும் இல்லக்கா, ரிலாக்ஸ்” என்று பாதி உண்மையின் பக்கத்தை மட்டும் கூறினாள்.

ஷ்யாமளா அடுத்த கேள்வி கேட்கும் முன், பூஜாவின் கைபேசி இசைத்தது. அதில் ஜித்து என்ற பெயர் தெரியவும் சியாமளா கிளம்பினாள் அறையை விட்டு.........

அப்பாடா என்றிருந்தது பூஜாவிற்கு. போனை எடுத்து ஹலோ என்றாள்.

“என்னடா தூங்கிட்டியா? போனை எடுக்க இவ்வளவு நேரம்”. இந்தரின் குரல் தாலாட்டியது.

“அக்கா அறையை விட்டு போகும் வரை காத்திருந்தேன், அதனால் தான். சொல்லுங்க என்ன விஷயம்?

“என்ன விஷயமா? எனக்கு தூக்கமே வரலை, அதானால உன்னோடு கொஞ்ச நேரம் பேசி கொண்டிருக்கலாம்ன்னு தான் கூப்பிட்டேன். உங்க அக்கா என்ன சொல்லிட்டு போறாங்க? இந்த ஜித்துவோட விழா ஏற்ப்பாடெல்லாம் அருமைன்னு சொல்லி இருப்பாங்களே?

“போதும் உங்க பெருமை எல்லாம். என் அக்காவிற்கு ஒரே சந்தேகம், நிஜமாவே எனக்கு, உங்களை பிடிச்சு இருக்கா அப்படின்னு.”

“ஹேய்....... ஏண்டா அப்படி திடீர்ன்னு.........

“ம்........ நீங்க அங்க ஒட்டின படம், கொஞ்சம் ஓவர் அக்ட் ஆகிருச்சு அதான். இப்படி எல்லாம் இருந்தா நீ முதலிலேயே சொல்லி இருப்பியே அப்படின்னு. அப்புறம் எப்படியோ சொல்லி சமாளிச்சேன். இதுல நான் தூங்கிடேனான்னு வேற கேட்கறிங்க . நான் தூங்காம, இன்னைக்கு நீங்க தூங்க போக முடியாது தெரிஞ்சிகோங்க.

“நோ வொரிஸ் பேபி, இந்த ஜித்து நினச்சா உன்னை உடனே தூங்க வைச்சுடுவான்.”

“எப்படி? ரொம்ப அசதியா இருக்கு ஜித்து, ஆனா தூக்கம் தான் வரலை.”

“ஓகே டா நீ இப்போ போய் நைட் டிரஸ் மாத்திட்டு வா “

“அதெல்லாம் அப்பவே ஆச்சு. டிரஸ் மாத்தினா தூக்கம் வருமா என்ன?

“ஓகே இப்போ லைட் அணைத்து விட்டு வந்து படு”

“ஆச்சு, அப்புறம்?”

“ஒரு பில்லோ, தலைக்கும், ஒரு பில்லோ கைக்குள்ளும் வச்சுக்கோ”

“ம்.....ஆச்சு, அடுத்து”

“போனை பக்கத்தில் வைத்து விட்டு கண்களை மூடு”

“ம்......... ஓகே.”

இப்பொழுது இந்தர் மெதுவாக பாட ஆரம்பித்தான்.

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

காலையில் நான் ஓர் கனவு கண்டேன்

அதை கண்களில் இங்கே  எடுத்து வந்தேன்

எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்

கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ… கண்களிலே … கண்களிலே…

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க

இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி

தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…

தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

இந்தர் பாடி முடித்த பொழுது பூஜா தூங்கி இருந்தாள்.

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 12

Episode 14

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.