(Reading time: 14 - 27 minutes)

“ஹய்யோ, ப்ளீஸ் எல்லாம் எதுக்கு பாஸ்? செய்யுன்னு சொன்னா உடனே செய்வேன் ஆன்டிக்காக” என கூறி கொண்டே வெளியேறினாள்......

“ஹெலனா, உங்க நீச்சல் பயிற்சியை இங்கே மேலே செய்யலாம். மாற்று உடை அங்கேயே இருக்கு” என கூறி ஹெலனாவையும் கிளப்பினான்.

“எஸ் பாஸ்” என்று ஹெலனாவும் கிளம்பினாள். அவளுடனேயே கிளம்ப நினைத்த பூர்வியை

“நீங்க இருங்க பூஜா” அவளை மட்டும் நிறுத்தினான்.

ஹெலனா சென்றதும் “ எப்படி இருக்க பூஜா?” என இந்தர் கேட்ட பொழுது..........

“உங்க ப்ரண்டா நல்லா இருக்கேன், என்ன இதனை நாள் கழிச்சு?

“உன்னிடம் தனியா பேச இப்ப தான் நேரம்  கிடைச்சுது”

“ப்ரண்ட நல்லா இருக்கியான்னு கேட்க, ஏன் தனியா நேரம் கிடைக்கணும்?

“என்னை ப்ரண்டா மட்டும் தான் நினைகிறியா பூஜா?

“நீங்க சொன்ன நாளில் இருந்து அப்படி தான் நினைக்கிறன்.”

அதை கேட்டு இந்தரின் முகத்தில் புன்னகை பூத்தது. “நல்லா பேச கத்துகிட்ட பூஜா”............

“பேச மட்டும் இல்லை, யாரிடம் எப்படி பழகணும்ன்னு கூட கத்துகிட்டேன். நீங்க சொன்னது போல், அப்போ எனக்கு வயசு கம்மி, அதனால் தான் என்ன பேசன்னு தெரியாம பேசிட்டேன். ஆனா இப்போ அப்படி இல்லை, வயசு கூடிதனால், உலக அறிவும் கூடியிருக்கு. அதனால் எல்லோரிடமும் அளவா தான் பேசறேன் Mr.இந்தர்” என கூறி முடித்தாள் பூஜா.......

“ஜித்தூ ல இருந்து, இப்போ Mr.இந்தராகிட்டேனா?

அதை கேட்டு பூஜாவிற்கு ஷாக் ஆனது. இது வரை தனது மனதிற்குள் மட்டும் தான் அப்படி அவள் கூறியதாக அவளுக்கு நியாபகம். நாம மனதிற்குள் நினைத்து இவனுக்கு எப்படி தெரிந்தது? என குழம்பினாள் பூஜா. இருந்தாலும் கெத்தை விடாது,

“அப்படி எல்லாம் நான் உங்களை சொன்னது கிடையாது.” என மறுத்தாள்.

“உன் மனசுக்குள்ள அப்படி தான நினைக்கிற?

“என் மனசுக்குள்ள நினைப்பது உங்களுக்கு எப்படி தெரியம்?

“நான் தான் உன் மனசுக்குள்ள இருக்கேனே” என கூறி குறும்பாக புன்னகைதான் இந்தர்.........

“அதெல்லாம் ஒன்னும் கிடையாது. என் மனசுக்குள்ள நீங்க இல்லை”

“உன் மனசில் நான் இல்லாமலா, என்னை கல்யணம் செய்து கொள்ள கேட்ட?

“அது சூழ்நிலையால் கேட்ட கேள்வி, அதுக்கு எந்த அர்த்தமும் இல்லை” அதுவும் இல்லாம நீங்க தான் அதை எனக்கு புரியவைத்து, நாம வெறும் பிரண்ட்ஸ் தான்னு சொல்லி என் அறிவை வளர்த்தீங்க? என்று நக்கலாக கேட்டாள்...........

அவளது நக்கலை ரசித்து கொண்டே “உன்னை மூன்று வருஷம் கழித்து திருமணம் பற்றி கூட யோசிக்க சொன்னதா எனக்கு நியாபகம்” அதற்கும் சிரித்து கொண்டே பதில் கூறினான்.......

“என்னோட கல்யாணத்தை பற்றி யோசிக்க எனக்கு தெரியும்”

“உன்னோட கல்யாணமா?”

“அப்படி தான் நீங்க சொன்னிங்க”

“அப்படியா சொன்னேன்? நம்ம கல்யாணம்ன்னு சொன்னதா நினைச்சேனே”

“நீங்க எப்படி நினைச்சாலும், இப்போ நான் உங்களை ப்ரண்டா மட்டும் தான் நினைக்கிறன்”.

“அப்போ ப்ரண்டா நினைக்கிற!!!!!!!!

“இல்ல, இல்ல , உங்களை வெறும் பாஸா தான் நினைக்கிறன்”...........

“அதென்ன பாஸ்? நான் என்ன கொள்ளை கூட்ட தலைவனா?

“சரி அப்போ இனிமேல் சிஇஒ  ன்னே கூப்பிடறேன்..........

இருவரும் தர்க்கம் செய்து கொண்டிருந்த பொழுதே இண்டர்காம் அழைத்தது, இந்தர் அதை எடுத்து

“ஹலோ “ என்ற பொழுது

“நீ அங்க என்ன பண்ற இந்தர் கண்ணா? என்ற சம்யுக்தாவின் குரல் ஒலித்தது............

சம்யுக்தா எப்பொழுதும் இந்தருடன் சேர்த்து கண்ணா என்று அழைப்பது வழக்கம். அவர் மாதமாக இருந்த பொழுது ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு கண்ணன் என்று பெயர் வைக்க நினைத்திருந்தார். ஆனால் மாமியாரின் பேச்சை மீற முடியாமல் இந்தரஜித் என்று வைத்தார்.

இத்தனைக்கும் இராமாயணத்தில் வரும் இராமரை மிகவும் பிடித்தாலும், அந்த அவதாரத்தில் இராமர் அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து, அவதார புருசனாக திகழ்ந்தாலும், இராமாவதாரத்தை விட கிருஷ்ணாவதாரதிலேயே அவர் சந்தோசமாக வாழ்ந்தார் என்பதால் தனது குழந்தைக்கு கிருஷ்ணன் என பெயர் சூட்டவே விரும்பினார்.

ஆனால் அது முடியாமல் போனதால் இந்தருடன் சேர்த்து, இந்தர் கண்ணா என்றே அழைப்பார்.

“ஒரு கிளையன்ட் விஷயமா பூஜாவிடம் டிஸ்கஸ் பண்ண வந்தேன் மா.....

“சரி ரெண்டு பேரும் சாப்பிட வாங்க” என கூறி தொடர்பை துண்டித்தார்......

இருவரும் கிளம்பி ஏழாவது மாடியை அடைந்தனர். இருவரும் வரும் முன்பே அனைவரும் அமர்ந்திருந்தனர்.

இருவரும் ஒன்றாக நடந்து வரும் அழகை சம்யுக்தா ரசித்து கொண்டிருந்தார்...........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.