(Reading time: 14 - 28 minutes)

"இல்லை..பிடிக்காது!"

"ஓ..கம் ஆன் டியர்!யு ஷூட் டிரிங் சம்திங்!எனக்காக ப்ளீஸ்.."-அவளுக்கு தலை சூடானது.

"ஜூஸ்!ஜூஸ்வது குடிப்பியா?"-வேறு உபாயமின்றி தலையசைத்தாள்.

"கிரேட்!ஸ்டீவ் ஃபெட்ச் சம் ஜூஸ் டூ ஹர்!"

"யா மாம்!"-ஒரு தீர்க்கமான பார்வையை மாயாவின் மேல் உதிர்த்தப்படி விலகினான் அவன்.

"இதுக்காக தான் அர்ஜூனை கூப்பிட்டேன்!சர்வேஷ்வரா!இவங்கக்கிட்ட இருந்து என்னை சீக்கிரமா வந்து காப்பாற்றுங்களேன்!"-மனதுள் வேண்டினாள் அவள்.

"மாயா!"-பழத்தின் சுவை மிகுந்த சாற்றை கொணர்ந்து அவளருகே வைத்தான் அவ்வாலிபன்.

"தேங்க்ஸ்!"-அவளை தவிர அங்கிருந்தோர் வேறு பானங்களை அருந்த,ஒரு அருவருப்போடு பழச்சாற்றை அருந்தினாள் மாயா.

அவ்வாலிபனின் அருவருப்பூட்டும் பார்வை அவளை மொய்ப்பதை மாயா உணராமலுமில்லை.அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று அவள் எண்ணிய சமயம்,அவளது புத்தி மரத்துப் போக ஆரம்பித்தது.மந்தமாய் உணர்ந்தவள்,ஒரு வித மயக்கநிலைக்கு தள்ளப்பட்டாள்.

"மாயா!வாட் ஹேப்பண்ட்?"

"மயக்கமா இருக்கு!"

"வெயிட்!ஸ்டீவ் மாயாவை வீட்டில டிராப் பண்ணிடு!"

"இல்லை..பரவாயில்லை!"

"கம் ஆன் பேபி!ஸ்டீவ் உன்னை டிராப் பண்ணுவான்!"-அவரை எதிர்க்க இயலாத மயக்கநிலைக்கு தள்ளப்பட்டாள் மாயா.

நடப்பவற்றை எல்லாம் சற்று தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு அனைத்தும் விளங்கியது.

"எக்ஸ்யூஸ்மீ ஜென்டில்மேன்!ஐ ஹேவ் டூ கோ நௌ!ஐ ஆம் ஸாரி!"-பரபரப்பான விரைந்தான் ருத்ரா.அவ்வாலிபன் மாயாவை தனது காரில் ஏற்றும் சமயம் சரியாக அங்கு வந்தான் அவன்.

"ஹே ஸ்டிவ்!"

-அனைத்தும் கைக்கூடும் வேலையில் தடுக்கும் குரலின் முகவரி அறிய திரும்பினான் அவன்.

"ருத்ரா?"

"ம்கூம்...!என்னாச்சு மாயாக்கு?"

"நத்திங்!கொஞ்சம் ஓவரா குடித்துட்டாங்க!"

"குடிச்சாளா?"-உண்மையை அறிந்தவன் சந்தேகமாய் கேட்டான்.

"ம்...யா!"

"ஓகே!நோ ப்ராப்ளம்!நான் அவளை டிராப் பண்ணிக்கிறேன்!"

"ஏன்?"-அவனிடமிருந்து மாயாவை வலுக்கட்டாயமாக இழுத்தான் ருத்ரா.மயக்கத்தில் தள்ளாடியவள்,அவனது தோள் மீது சாய்ந்தாள்.

"பிகாஸ் ஷி இஸ் மைன்!மை பியான்ஸி!"-கடுமையாக அவன் கூற,ஒரு நொடி ஆடிப்போனான் அவன்.

"ஸா..ஸாரி ருத்ரா!"-தப்பித்தால் போதுமென்று வேகமாக ஓட்டம் பிடித்தான் அவன்.தனிமையில் நின்றிருந்தவனின் தோளில் மலர் மாலையாய் சாய்ந்திருந்தாள் மாயா.

"மாயா!"

"..........."

"ஏ..மாயா!"-இதமாக அவள் செவியோரம் கிசுகிசுத்தான் அவன்.

"............"-ஆழ்ந்த மயக்கம் அவளை ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தவன் கைக்குழந்தையை தூக்குவதுப் போல இரு கைகளாலும் அவளை தூக்கி சென்று தன் காரில் கிடத்தினான்.

"இந்த அர்ஜூன் கழுதை எதுக்காக இவளை தனியா அனுப்பினான்?இடியட்!"-மனதுள் கறுவியவன்,தனது காரை உயிர்ப்பித்தான்.பயணம் நீண்டு கொண்டே போனது!!!இரவு நேர மின் விளக்குகள் மட்டும் அவர்களுக்கு துணையாய் உடன் வந்தன.

"ம்.."-மெல்லிய முனகல் சத்தம் அவளிடமிருந்து வெளியானதை உணர்ந்தவன் காரை நிறுத்தினான்.அவளது மயக்கம் மெல்ல கலைய,கண்விழித்து திருதிருவென விழித்தாள் மாயா.

"ம..மாயா!"-சற்றே அச்சத்தோடு வெளியானது அவன் குரல்.அவன் முகத்தை ஒரு நிமிடம் உற்று பார்த்தவள்,"யார் நீ?"என்றாள் சிறு குழந்தையாய்!"

"யாரா?என்னை உனக்கு தெரியலை?"

"ம்ஹூம்!"-என்று மீண்டும் சில நொடிகள் சிந்தித்தாள்.

"ஓ..நீதான் புதுசா ஜாயின் பண்ண டிரைவரா?"-ஒரு கேள்வியில் அவன் மானத்தை காற்றில் பறக்கவிட்டாள் மாயா.விழிகளை கடுப்போடு மூடி திறந்தவன்,

"இன்னும்!அதான் நடக்கலை!"என்றான்.

"சரி..சீக்கிரமா போ!எனக்கு தூக்கம் வருது!"-என்று அவனது புஜங்களை இறுகப் பற்றியப்படி அவன் மீது சாய்ந்து உறங்கிப் போனாள் மாயா.

எதுக்குறித்தும் சிந்திக்காமல் அவள் காட்டிய நெருக்கம்,காலச்சக்கரத்தை அப்படியே உறைய வைத்தது அவனுக்கு!!மெல்ல புன்னகைத்தவன்,அவளை மெல்ல இருக்கையில் சாய்த்தான்.மீண்டும் பயணம் ஆரம்பித்தது.இம்முறை அது நெடுந்நேரம் எடுக்கவில்லை.சில நிமிடங்களிலே முடிந்தது.வாயிலில் கார் சப்தம் கேட்டதும் கதவை திறந்தார் காவலாளி.ஓட்டுநர் இருக்கையில் ருத்ராவை கண்டதும் குழம்பிப் போனார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.