(Reading time: 9 - 17 minutes)

இதயம் உச்சமாய் துடிக்க,செய்வதறியாது திகைத்தான் அவன்.அவன் கண்ட காட்சி மாயை இல்லை என்பதை,எதைக்குறித்தும் சிந்திக்காமல் ஓடி வந்து அணைத்த அவளது அணைத்து உறுதிப்படுத்தியது!!

உச்சமாய் துடித்த அவனது இதயம்!சில நொடிகள் துடிக்க மறந்துப் போயின.

அசையாமல் சிலையாக நின்றான் அவன்.அங்கு நிலவிய மௌனத்தை கலைக்கும் துணிவு இருவருக்கும் எழவில்லை.நிர்பயாவின் மனதோடு,விழிகளும் கரைந்துக் கொண்டிருந்தது.சில நிமிடங்கள் சென்றிருக்கலாம்,காலத்தை உணர்ந்தவள்,அவனை விலகினாள்.

அவனது பார்வையில் அதீத வலி தென்பட்டது.அவனது முகத்தை தன்னிரு கரங்களால் ஏந்தினாள் நிர்பயா.

"ஏன் இப்படி பண்றீங்க?என்ன ஆச்சு உங்களுக்கு?எதுக்காக எனக்கு இந்தத் தண்டனை?"

"..............."

"நீங்க இல்லாம என்னால எப்படி வாழ முடியும்?சொல்லுங்க...ஏன் எனக்கு இந்தத் தண்டனை?"-அவனால் பதில் கூற இயலவில்லை.குரல் அடைத்தது!!

"சொல்லுங்க!"

"எ..என்னை மன்னித்துவிடு!"

"எதுக்காக நம்ம இரண்டுப் பேருக்கும் இடையில,இடைவெளியை உருவாக்குனீங்க?"

"அம்மூ...நான்!"

"நீங்க இன்னிக்கு என் கேள்விக்கு பதில் சொல்லி தான ஆகணும்!பதில் சொல்லுங்க!"-(அதை நான் கூறுகிறேன்)

ன்று...!!

நிர்பயாவிற்கு விபத்து நேர்ந்த அதே இடத்தில் நின்றிருந்தான் ஜோசப்.

இது சாதாரண விபத்து தான் என்று அவன் மனம் நம்ப மறுத்தது.

"இது விபத்து மாதிரி இல்லை!அட்டம்ண்ட் டூ மர்டர் மாதிரி இருக்கு!"-மருத்துவரின் வாக்கு தொடர்ந்து அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

"என்ன ப்ரோ?என்ன யோசனை?"-கர்வமாக ஒலித்த குரலில் சிந்தனை நீங்கியவன்,நிமிர்ந்துப் பார்த்தான்.

"யார் நீங்க?"

"என்னை தெரியலையா?உனக்கு வில்லன் ப்ரோ!"

"என்ன?"

"நான் கார்த்திக்!நிர்பயா சொல்லி இருப்பாளே!"-அவனுக்கு விவரம் புரிந்தது.

"என்ன வேணும் உனக்கு?"

"அவசியம் தெரியணுமா?"

".............."

"நிர்பயா!"

"வாட்?"-ஜோசப் அவனது சட்டையை இறுகப் பற்றினான்.

"ஏ..கூல்!ஏன் டென்ஷன் ஆகுற?"

"என்னடா கேட்ட?என் நிர்பயா வேணுமா உனக்கு?"

"உன் நிர்பயாவா?அவ என்னோட பொருள்!"-ஜோசப்பின் குருதி கொதித்தது.

அவன் கார்த்திக்கை பிடித்து தள்ளினான்.

"ஏ...!ரத்தம் கொதிக்குதா?என் முன்னாடி நீங்க இரண்டுப் பேரும் குதூகலமா இருக்கும் போது எனக்கு எப்படி இருந்திருக்கும்?அதான்...அவளை கொல்ல நினைத்தேன்!"

"என்ன?"

"அவளுக்கு நடந்த ஆக்ஸிடண்ட் நான் செய்தது தான்!"

"உனக்கு என்ன தைரியம்டா!"

"ஏ...!நிறுத்து!என்ன மனசுல ஹீரோன்னு நினைப்பா?நிர்பயாவோட உயிர் என் கையில ஞாபகமிருக்கட்டும்!"

"என்னை மீறி உன்னால அவ நிழலைக்கூட நெருங்க முடியாது!"

"முடியும்!அவ சுவாசிக்கிற மூச்சுக்காற்றுல கூட அவளுக்கு ஆபத்திருக்கு!ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணவளோட இதயம் ,எப்படி திடீர்னு நின்றதுன்னு யோசித்து பார்த்தியா நீ?"

"................"

"இல்லையா??நிற்க வைத்தேன்!ஆனா,அவ எப்படி பிழைத்தான்னு தான் புரியலை!உனக்கு தெரியாது!உன்னால,யோசிக்க கூட முடியாத அளவுக்கு நுட்பமான முறையில அவ உயிருக்கு ஆபத்தை உருவாக்கி இருக்கேன்!ஆபிஸ்ல,வீட்டுக்கு போற வழியில,உன் கூட இருக்கிற சமயத்துல,எல்லாம் பகை!!நான் ஒரு சொடுக்கு போட்டா உன் மகாராணி க்ளோஸ்!"

".............."

"உன் மகாராணிக்கு அம்மா ஒருத்தவங்க இருக்காங்க தானே!அங்கே அடித்தால்,இவளுக்கு நல்லா வலிக்கும்ல!உன்னால எப்படி காப்பற்ற முடியும்??முடியாது!!நிர்பயாவை என்கிட்ட இருந்து உன்னால காப்பாற்ற முடியாது!அவ தாய்மை அடையுற தகுதியை இழந்துட்டால்ல!ம்...அது பொய்!!"-ஜோசப் அதிர்ந்துப் போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.