(Reading time: 9 - 17 minutes)

"அப்போதாவது,நீங்க பிரிவீங்கன்னு நினைத்தேன்!ப்ச்..அது நடக்கலை!ஆனா,அவ ரொம்ப துடித்து போனால்ல!"-ஆர்வமாக கேட்டான் கார்த்திக்.

"உனக்கு என்ன வேணும்?ஏன் அவளை இப்படி துடிக்க வைக்கிற?

"ஒண்ணு நிர்பயா சாகணும்!இல்லை அவ எனக்கு கிடைக்கணும்!அதுக்கு,நீ அவளைவிட்டு நிரந்தரமா போகணும்!இல்லைன்னா,ஜென்மத்துக்கும் அவளுக்கு நிம்மதி கிடைக்காது!ஜஸ்ட் இமேஜின்!ஏற்கனவே,மனசு நொந்து போயிருக்கா!திடீர்னு அவ அம்மா இறந்துட்டாங்கங்கிற விஷயத்தை அவளால சகித்துக் கொள்ள முடியுமா?"-அவன் அதிர்ந்துப் போனான்.

"நொறுங்கிட மாட்டா!அவ பலவீனமா இருக்கும் போது,அவளை வேதனைப்படுத்துறது எனக்கு ரொம்ப சுலபம்!!!"

"வேணாம்!நிர்பயாவுக்கோ,அவ சம்பந்தப்பட்ட யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது!"

"அதுக்கு நீ அவக்கூட இருக்கக் கூடாது!"

"நான் என்ன செய்யணும்?"

"சொல்றேன்!"(இது தான் நிகழ்ந்தது!)

நிகழ்ந்தவை அனைத்தையும் கூறி முடித்தான் ஜோசப்.

அவள் ஸ்தம்பித்து போய் நின்றாள்.

"உனக்கு கஷ்டமும் வர விட மாட்டேன்னு வாக்கு கொடுத்தேன்!அதான்!எனக்கு வேற வழி தெரியலை!"

"என் காதலைப் பற்றி நீங்க யோசிக்கலை?"

".................."

"அது செத்துடும்னு நினைத்தீங்களா?"

"..................."

"நான் உயிரோட இருக்கிற வரை அது நடக்காது!"-என்றவள்,அவன் அணிவித்து இவள் தூக்கி எறிந்த மோதிரத்தை அவனிடம் தந்தாள்.

"போட்டு விடுங்க!"

"அம்மூ?"

"போட்டு விடுங்கன்னு சொல்றேன்ல!"-சற்றே கடுமையாக உரைத்தாள் அவள்.அவன் எந்த தயக்கமுமின்றி அதை வாங்கி அவள் கையில் அணிவித்தான்.

வேறு எந்த சிந்தனையுமின்றி,மீண்டும் 

அவனை அணைத்துக் கொண்டாள் நிர்பயா.

காதலின் இலக்கணம் எங்கு தொடங்குகிறது??அன்பிலா??அரவணைப்பிலா??இல்லை..நாணத்திலா??காதலின் இலக்கணம் தியாகத்தில் தொடங்குகிறது!!இரத்தப் பந்தம் கொண்ட உறவே நமக்காக சிந்திக்க தயங்கும் இந்த யுகத்தில்,எந்த ஒரு தொடர்புமின்றி,எதிர் பாலருடன் விளையும் பந்தமானது,சாமானிய பந்தம் அல்ல!!அது தனது இணைக்காக எந்த வேதனைகளையும் பொறுத்து அருளும்!!தன் கடமை அல்லாத ஏனைய எந்த தியாகங்களையும் ஆற்ற துணியும்!!காதல் என்ற பந்தம் உணர்வுகளில் வசிக்கக்கூடியது!!தாய்மையின் தாய்பாலுக்கும்,நண்பனின் தோளுக்கும் இணையான புனிதம் கொண்டது!!காதலின் உண்மையான மகத்துவத்தை அறியாதவரே அதனை பழிப்பர்,துறப்பர்,துவேஷிப்பர்!எங்கு இரு மனங்களுக்கு இடையே உதிக்கும் பந்தமானது,தன் இணையின் உணர்வுகளை மதித்து சிந்திக்க தொடங்குகிறதோ,அங்கு தியாகமானது உதிக்கிறது!!அந்தத் தியாகம் ஒன்று போதும் புது சகாப்தத்தை எழுத!!மீண்டும் கூறுகிறேன்!!தாய்மை,நட்பு,காதல் மூன்றும் தனித்தனி சகாப்தங்கள்!அவற்றை ஒன்றோடு ஒன்று இணையாக்கி எடை போடுதல் அறியாமையே ஆகும்!!

தாங்கள் இருந்த நிலையில் இருந்து இருவரும் விலகவில்லை.பிரபஞ்சமே நேரடியாக வந்து அழைத்தாலும்,'இன்று போய் நாளை வா!'என்று கூறும் அளவிற்கு தன்னிலை துறந்திருந்தனர் இருவரும்!!நடந்தவற்றை சற்று தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் எட்வர்ட்!!

ஜோசப்பின் பார்வை எதேர்ச்சையாக அவனை அடைந்தது!!

அவன் தன் கரத்தில் வைத்திருந்த ஏதோ பத்திரத்தை இரண்டாக கிழித்து தூர எறிந்தான்.தன் இரு கரங்களாலும்,தன் செவிகளை பிடித்து மன்னிப்பை வேண்டினான்.

ஜோசப்பிடமிருந்து வெளிவந்த புன்னகை அவன் மன்னிப்பை ஏற்றதற்கு சான்றானது!!!

தொடரும்

Episode # 24

Episode # 26

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.