(Reading time: 11 - 21 minutes)

26. நிர்பயா - சகி

Nirbhaya

"ல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் சார்!நீங்க மட்டும் தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்!!நீங்க அப்பாங்கிற ஸ்தானத்துல இருந்து தவறிட்டீங்க!நீங்க பண்ண தப்புக்கு தண்டனையை என் நிர்பயா அனுபவித்தாள்!உங்களுக்கு என்ன சார் தெரியும் அவளைப் பற்றி??அவளுக்கு என்னப் பிடிக்கும்னு தெரியுமா??அவளுக்கு பிடித்தது எல்லாம் நீங்க மட்டும் சார் அது தெரியுமா உங்களுக்கு??உங்களைப் பற்றி சொல்லி அவ அழும் போதெல்லாம்,அவளை சமாதானம் செய்ய வழி தெரியாமல் தவித்திருக்கேன்!நீங்க மட்டும் அவளுக்கு சரியான அப்பாவா இருந்திருந்தா,அவ எந்தக் கஷ்டத்தையும் அனுபவித்திருக்க மாட்டா!நடந்த எல்லாத்துக்கும் முழு பொறுப்பு நீங்க தான் சார்!"-அன்று அந்த இருள் சூழ்ந்த சமயத்தில்,ஜோசப் கொட்டி தீர்த்தது யாவும் நினைவில் நிழலாடின!!

"எனக்கு என் அப்பாவை ரொம்ப பிடிக்கும்!அவருக்கு தான் என்னை பிடிக்காது!"-அன்று நிர்பயா கூறியதும் நினைவில் எட்டியது.

பெருமூச்சொன்றை விட்டார் சங்கரன்.

அவள் குழந்தையாக இருந்த சமயம் அவள் பேசிய முதல் வார்த்தை,"அப்பா!"என்பதே!!ஆனால்,அவர் அதை கொண்டாடவில்லை.

அவளது நிழலை கூட அவர் அதிகமாக ஸ்பரிசித்ததில்லை.

"சங்கர்!"-விசாலாட்சியின் குரல் அவரை கலைத்தது.

".............."

"உன்கிட்ட பேசணும்!"

".............."

"இன்னும் எத்தனை நாள் நீ இப்படியே இருக்கப் போறேன்னு தெரியலை!அதுதான் நிரந்தரமான்னு புரியலை!நான் சோர்ந்து போயிட்டேன்பா!இந்த உலகத்துல ஒரு குழந்தை கெட்டவனா வளர்ந்தா,அதுக்கு அந்த தாய் தான் முழு பொறுப்பு!!உன்னை சரியா வளர்க்கலையோன்னு யோசிக்கிறேன்!நான் பெற்ற இரண்டு பேரும் சரியில்லை."

".............."

"நிர்பயா மேலே உனக்கு என்ன பகைன்னு புரியலை!அந்தக் குழந்தை சின்ன வயசுல இருந்து உன் அன்பை பெற எவ்வளவோ பாடுப்பட்டா,ஆனா,நீ அவ கண்ணீருக்கு அங்கீகாரமே கொடுக்கலை!"

"................."

"அவ உயிருக்கு போராடின சமயம் கூட,நீ அவளை பார்க்க போகலை!அந்த அளவுக்கா உனக்கு இரக்கம் இல்லாம போச்சு?"

"..............."

"இன்னிக்கு அவ என்னை கோவிலுக்கு வர சொன்னா!"

"எதுக்கு?"-மனம் பதைத்தது அவருக்கு!!விசாலாட்சி சில பத்திரங்களை அவரிடம் தந்தார்.

"அவ பெயரில் நான் எழுதின ஆஸ்தியை!உன் பெயருக்கு மொத்தமா எழுதி கொடுத்திருக்கா!"-சங்கரன் ஆடிப்போனார்.

"விசித்ரமா இல்லை?ஒரு பொண்ணு தன் அப்பா பெயருக்கு ஆஸ்தியை மாற்றி எழுதுறது?உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்ல சொன்னா!"

"எ..என்ன?"

"கார்த்திக்,ஸ்வேதா,லட்சுமி மூணு பேருக்கும் சேர வேண்டியதை சரி சமமா பிரித்து தர சொல்லி இருக்கா!"-இதை கேட்டவரது கண்கள் கலங்கின.

"இனிமேலாவது,பல்லவியை ஒரு மனிதப்பிறவியா பார்க்க சொன்னா!"-அவருக்கு நெஞ்சில் சுருக்கென்று ஏதோ தைத்தது.

"உன் பொண்ணு உன்னை ஜெயித்துட்டா!நீ அவக்கிட்ட தோற்றுவிட்ட!"-என்றவர்,மௌனமாக அங்கிருந்து கிளம்பினர்.சங்கரனின் உடல் எல்லாம் நடுங்கியது.அந்த பத்திரங்கள் எல்லாம் கரம் நழுவி,நிலம் விழுந்தன.

ன்றிரவு...

சிலையென தனதறைக்கு வந்தார் சங்கரன்.அந்த அறையின் அலமாரியை தூய்மைப் படுத்திக் கொண்டிருந்தார் அவரது அர்த்தாங்கினி!!

மனதில் ஒரு வித அச்சம் பரவி,உயிரையே குடித்தது.

நீண்ட நேரமாக தன்னை யாரோ உற்று நோக்குவதாய் உணர்ந்தவர் திரும்பினார்.தனது பதியின் முகத்தை தரிசித்ததும்,அவரிடம் பெருத்த மௌனம்!!மௌனமாக தனது பணியை மீண்டும் தொடங்கினார்.

சில நிமிடங்கள் கரைந்திருக்கும்,திடீரென,தன்னை சற்றி உறுதியான கரம் இரண்டு வளைத்து அணைக்க,திடுக்கிட்டார் அவர்.உயிரே உறைந்துப் போனது!!இது நிஜம் தானா என்ற எண்ணம் இதயத்தை வியாபித்தது.

அதிர்ச்சியாக விலகினார் அவர்.தனது பதியின் கண்களில் பிரதிபலித்த வலி!!இத்தனை வருடத்தில் ஒருமுறையும் அந்த வலியை அவர் கண்டதில்லை.பெருமூச்சுகள் வாங்கின அவருக்கு!!சங்கரன் ஏதும் பேசவில்லை.எதையும் சிந்திக்காமல் தனது சதியை இறுக அணைத்துக் கொண்டார்.அவரால்,தன் பதியை எதிர்த்து ஒரு வார்த்தையும் உதிர்க்க இயலவில்லை.உதிர்க்கவும் மனம் விழையவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.