"அவ என்னை ஏற்றுக்கணும்னு நான் ஆசைப்படுறேன்னு நான் உன்கிட்ட சொன்னேனா?"
"அப்போ எதுக்காக இந்த பாசம்னு நான் தெரிந்துக்கலாமா?"
"அந்த காரணத்தை அவசியம் நான் சொல்லணுமா?"
"சொன்னா நல்லா இருக்கும்னு தோணுது!"-சங்கரன் தனது கைத்துப்பாக்கியை எடுத்தார்.
"உனக்கு தெரியவே வேணாம்!"-என்று மிக அமைதியாக அவனது நெஞ்சில் சுட்டார்.இதை எதிர்நோக்காதவனுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி!!அவன் குரோதத்தோடு அவரை பார்த்தான்.
"உன் பாவத்துல இருந்து உனக்கு முக்தி தரேன்!எனக்கான தண்டனையை என் நிர்பயா தருவா!நான் இல்லாம நீ இருந்தது இல்லை...ஜாக்கிரதையா போ!"-என்றவர் மீண்டும் அவன் நெஞ்சில் சுட்டார்.
"இனிமே அவளுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாது.அதுக்கு தான் இது!!கவலைப்படாதே,உன் அம்மாவுக்கும்,தங்கச்சிக்கும் எதுவும் ஆகாது!நான் வாக்கு தரேன்!"-அவன் கூறி கொண்டிருக்கையில் அவன் மண்ணில் சரிந்தான்.சில நொடிகளில் அவனது சரீரம் விட்டு பிராணன் பிரிந்தது.
அவனது சரீரத்தை அவனது காரில் கிடத்தியவர்,அதை உயிர்பித்து பள்ளத்தாக்கை நோக்கி தன்னிச்சையாக செல்லும்படி செய்தார்.அது சரியாக சரியும் சமயம்,அதன் பெட்ரோல் தேக்கியில் சுட, அது வெடித்து சிதறியப்படி மலை சரிவில் உருண்டது.
சங்கரன் பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
வலக்கரம் முறிந்தது போன்ற ஒரு உணர்வு!!இனி,எந்த துன்பமும் அவளுகில்லை என்ற ஆத்ம திருப்தி இதயத்தை வியாபித்தது.
ஏழு ஆண்டுகளுக்கு பின்...
"ஆண்டுகளும் ஓடிவிட்டன...ஒன்றல்ல,இரண்டல்ல!முழுதாக ஏழு ஆண்டுகள்!!
மனம் திருப்தி பதிந்துள்ளது.நான் ஆற்றிய பாவங்களுக்கான தண்டனை என்னை அடைந்ததால்,என் ஆன்மா புனிதமான திருப்தி!!நான் சங்கர்!சங்கர் ராஜசேகர்!!ஆணவத்தால்,அகங்காரத்தால் மதியிழந்து ஈன்ற புதல்வியை அவமதித்தவன்.பெண்மை என்னும் தெய்வீகத்தை பொம்மை என பழித்தவன்.இன்று,அனைத்தையும் துறந்து கதியின்றி தவிக்கின்றவன்.இந்த உலகம் உள்ளவரை என் பாவங்களில் இருந்து எனக்கு முக்தி கிட்டப்போவதில்லை!!என்றேனும் ஒருநாள் நான் ஏற்ற இந்த சிறைவாசம் முற்றுப்பெறும்!!என் மனம் அமைதிக் கொள்ளும்!!அன்றாவது,நான் பெற்ற தெய்வீகத்திடமிருந்து எனக்கு மன்னிப்பு என்ற வரம் கிட்டும்!"-என்று அந்த நாட்குறிப்பை மூடி வைத்தார்.
ஒரு காலத்தில் ராஜபோக வாழ்வை வாழ்ந்தவர் இன்று,சிறைவாசத்தில் புழுங்கின்றனர்.தான் ஆற்றிய பாவங்களுக்கான தண்டனையை தானே சுயமாய் முன் வந்து ஏற்றார்.விளைவு...ஏழு ஆண்டுகள் வாழ்வின் மகத்துவத்தை அவர் அறிய இறைவன் கொடுத்த தனிமை!!
காத்துக் கொண்டிருக்கிறார்..
என்றேனும் ஓர் நாள் அவர் ஈன்ற தெய்வீகம்,மன்னிப்பு என்ற வரத்தினை அவருக்கு நல்கும் என்ற நம்பிக்கையில் தனது பயணத்தை தொடர்ந்தப்படி இருக்கிறார்!!
முற்றும்
Next episode will be published as soon as the writer shares her next episode
{kunena_discuss:1030}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.