(Reading time: 11 - 21 minutes)

"என்னன்னு?"

"சரியான ஃப்ராடு,420,திருடன்னு!"-ஜோசப் அவளை முறைத்தான்.

"வர வர என் மேலே பயமே இல்லை உனக்கு!"

"காதல் இருக்கிற இடத்துல பயத்துக்கு என்ன வேலை?"

"ஏ....ஸாரிடி!"

"எதுக்கு?"

"உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்! பேச கூடாதது எல்லாம் பேசிட்டேன்."-நிர்பயா அவனது வாயை பொத்தி,அவனது பேச்சை தடை செய்தாள்.

"உண்மையிலே என்னை விட,அந்த நேரத்துல அதிக வேதனையை அனுபவித்தது நீங்க தான்!"

"............."-அவனிடம் கனத்த மௌனம்.இதற்காக தானே தவம் கிடந்தான்!தனது வலிகளையும்,வேதனைகளையும், உணர்வுகளையும் தெளிவாக உணர்ந்து தனக்காக வாழும் இக்கன்னிகையின் காதலுக்காக தானே தவம் கிடந்தான்!!!

அவன் சிலையாய் நின்றிருக்க,மெல்ல எக்கி,அவனது கன்னத்தில் தனது இதழை ஒருமுறை ஒற்றி எடுத்தாள் நிர்பயா.அவனது குழப்பங்கள்,இறுக்கங்கள் யாவும் தொலைந்துப் போயின.

"என்ன?"-அவனது மௌனத்திற்கான விடை தேடினாள் அவள்.

"ம்ஹூம்!"-அதன் காரணம் அவளுக்கு மட்டும் புரிந்திருக்கலாம்,அவனது சட்டை காலரை சீர் செய்தப்படி,

"நான் கிளம்புறேன்!"என்றாள்.ஜோசப்பின் கரம் நகர்ந்த அவளை வலுக்கட்டாயமாக தன் பிடியுள் கொணர்ந்தது.

இது அவள் எதிர்நோக்காதது!!அவளது விழிகளில் ஒரு வித தயக்கம் குடிக்கொண்டது.நீண்ட நேரமாக அவளது கண்களை உற்று நோக்கியவன்,என்ன நினைத்தானோ!அவனது பிடியை தளர்த்தினான்.

"கொஞ்ச நேரம் இருந்துட்டு போ!"

"தாத்தா தேடுவாரு!"

"ஓ காட்! உன் தாத்தாவை சமாளிக்க ஒரே வழி தான் இருக்கு!"

"என்ன வழி?"

"சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்!அப்போ உங்க தாத்தா என்ன பண்றார்னு நானும் பார்க்கிறேன்!"

"ம்...அதான் நடந்துடுச்சே!"

"என்னடி சொல்ற?"

"இதோ!"-என்று தன் கணையாழியை சுட்டினாள்.

"ஏ...அது ஜெஸ்ட் பிரசண்ட்!"

"அது உங்களுக்கு!எனக்கில்லை!"

"அப்படி பார்த்தாக் கூட, பாதி கல்யாணம் தான் ஆகி இருக்கு!"

"ம்..அப்படி தோணலையே!"-என்று தனது கரத்தில் இருந்து மற்றொரு கணையாழியை கழற்றி,அவன் கரத்தில் அணிவித்தாள் நிர்பயா.

"உன்னை என்னன்னு சொல்றது லூசு?"-என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

ன்று நிர்பயாவிற்கு விபத்து நடந்த இடத்தில்,தனது காரின் மீது அமர்ந்திருந்தார் சங்கரன்.

நீண்ட நேரமாக அந்த மலை.உச்சியை ஏளனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். சில மணித்துளிகள் கரைந்திருக்கும்..!

"மாமா!"-என்ற குரல் அவரை கலைத்தது.

"முன்னாடி வா!"-அவரின் எதிரில் கம்பீரமாய் வந்து நின்றான் கார்த்திக்.

"எதுக்கு வர சொன்னீங்க?"

"சந்தோஷமான விஷயம் சொல்ல தான்!"

"என்ன?"

"சொத்து நமக்கே கிடைத்துவிட்டது!"-அதை கேட்டவனது முகத்தில் கொள்ளை ஆனந்தம்!!

"எப்படி?"

"அது அவசியமில்லாதது!"

"..........."-அவன் புன்னகை பூத்தான்.

"கார்த்திக்!இந்த இடம் ஞாபகமிருக்கா?"

"அந்த நிர்பயாவை அன்னிக்கு இங்கே தான் மாமா கொல்ல முயற்சி பண்ணேன்!முடியலை!"

"என்கிட்ட சொல்லாம நீ ஏன் அந்தக் காரியத்தை செய்த?"

"என்ன பேசுறீங்க மாமா?அவ நம்ம பிரதாப்பை கேவலப்படுத்தி கொன்னுருக்கா!"

"ம்...ஸோ!அதனால என் பொண்ணை நீ கொல்ல பார்த்த!"-அவன் முகம் இறுகியது.

"அவளுக்கு தாய்மை அடைய முடியாதுன்னு சொல்லி,நம்ப வைத்தியாமே?கேள்விப்பட்டேன்!"

"................"

"என்னடா அமைதியா இருக்க?"

"பொண்ணு மேலே பாசம் வந்துடுச்சா?"

"வரக்கூடாதுன்னு சொல்றீயா?"-அவன் பலமாக சிரித்தான்.

"நீங்க செய்த பாவத்தை எல்லாம் மன்னித்து அவ ஏற்றுக்கொள்வாள்னு நினைக்கிறீங்களா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.