"ஐ ஆம் ஸாரி!"-சங்கரனின் இதழில் இருந்து முதன்முறையாக மனப்பூர்வமாக மலர்ந்த அவ்வார்த்தைகள் அவரை மேலும் பலமாக வீழ்த்தின.
"என்னை மன்னித்து ஏத்துப்பியா?"-ஏக்கத்தோடு அவர் விடுத்த வினாவில் மொத்தமாய் பலவீனப்பட்டார் பல்லவி.சிறு தயக்கத்துடன் தன் கணவனை வளைத்தன பல்லவியின் கரங்கள்!!நிகழ்பவை கனவல்ல என்று அப்போது தான் நம்ப தொடங்கியது அவரது மனம்!!தன்னிச்சையாக அவரது விழிகள் கலங்கின.
இளமை காலத்தில் எழும் காதலை காட்டிலும்,முதிர்ந்த பின் கிட்டும் காதலானது,சுவைமிக்கது,ஆழமானது,அழகானது!!இளமை காலத்தில் இதயம் பார்த்து எழும் காதல்,முதுமையில் இதயத்தோடு ஒன்றாக கலக்கிறது.அக்காதலானது,வாழ்வின் இறுதி வரையில்,ஒரு ஆன்மாவோடு துணை நிற்கிறது!!சுவாசிக்க காற்று எவ்வாறு அவசியமோ,அதுபோல,முதுமை காலத்தில் காதல் என்பதும் மனிதனுக்கு அவசியமாகிறது!!மண்ணிற்கு மழையின் மீது காதல்!மரத்திற்கு மண்ணின் மீது காதல்!மனித மனதிற்கு ஆஸ்தியின் மீது காதல்!மனித வாழ்விற்கு மரணத்தின் மீது காதல்!ஆன்மாவிற்கோ முக்தியின் மீது காதல்!துறவிகளுக்கோ இறைவனின் மீது காதல்!வாழ்வின் அங்கங்கள் எங்கிலும்,நானின்றி யாதும் அமையாது என்று இந்தக் காதலானது,சவால் விடுகிறது!!அச்சவாலில் வெல்ல இறைவனாலும் இன்றியளவும் இயலவில்லை.காரணம்,அவனுக்கும் தன்னை சார்ந்திருப்பவரின் பக்தியின் மீது காதல் அல்லவா???
ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் ஜோசப்!!நிர்பயாவிடம் மனம் விட்டு பேசியுள்ளாரா சங்கரன்??அன்று என்னிடமும் அவள் குறித்து மிகுந்த அக்கறையோடு விசாரித்தார்??எதற்காக??ஒருவேளை...உண்மையில் மனம் மாறினாரா அவர்??நிர்பயா அவரை ஸ்வீகரிப்பாளா??மனம் குழம்பி போனது அவனுக்கு!
ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தவனின் மேல் தலையணை ஒன்று வந்து விழ,திடுக்கிட்டு நிமிர்ந்தான்.கரத்தில் மற்றொரு தலையணையை ஏந்தியப்படி,அவன் மீது வீசி எறிய சமயம் பார்த்து கொண்டிருந்தாள் நிர்பயா.
"என்ன இது?"
"சும்மா!"-என்று சமாளித்தாள் அவள்.
"உன்னை..!"-என்று அவசரமாக எழுந்து கண் இமைப்பதற்குள் அவளை வளைத்துப் பிடித்தான் ஜோசப்.
"ஆ..விடுங்க!"
"உனக்கு திமிர் அதிகமாகிவிட்டது!இரு குறைக்கிறேன்!"-என்றவனின் உடும்பு பிடி மேலும் இறுகியது.
"ஐயோ!விடுங்க!நான் என்ன தப்பா பண்ணிட்டேன்?டி.வி.யை சத்தமா வைத்துவிட்டு,சுவரை பார்த்து அப்படி என்ன யோசிக்கிறீங்க?நான் டி.வி.யை ஆப் பண்ணது கூட உங்களுக்கு தெரியலை!"
"ப்ச்...ஏதோ ஒரு யோசனை!"
"என்ன யோசனை?"
"உங்கப்பாவை பற்றி!"-அவளது முகம் சட்டென இறுகியது.
"எனக்கு அவர் மாறிட்டார்னு தோணுது அம்மூ!"
"யாரு அவரா??அது சாத்தியமில்லாத ஒன்று!"
"ஏன் அவரும் மனிதன் தானே!"
"இல்லைங்க!அவர் மனித ரூபத்துல இருக்கிற ராட்சஷன்!"
"ஏ..அடி வாங்கப்போறீயா நீ?என்ன பேச்சு இதெல்லாம்?"
"உங்களுக்கு தெரியாது!அவர் எப்படிப்பட்ட மிருகம்னு உங்களுக்கு தெரியாது!நான் உணர்ந்திருக்கேன்!
எவ்வளவு வேதனைகள் எனக்கு அவர் கொடுத்தாரு தெரியுமா?ஒருவேளை,நான் உங்களை சந்திக்காம இருந்திருந்தா,இந்நேரம் நிச்சயம் நான் உயிரை விட்டு இருப்பேன்!"
"ஏ..பைத்தியம்!அறிவில்லை உனக்கு?இன்னொருமுறை இப்படி பேசுனா,நானே உன்னை கொன்னுடுவேன் ஜாக்கிரதை!"
"..............."
"இப்போ எதுக்கு கண் கலங்குது?"
"ஒண்ணுமில்லை!"
"சரி பழைய விஷயம் வேணாம்!புது விஷயத்தை ஆரம்பிக்கலாம்!"-என்றவன் அவளது இதழை நோக்கி குனிந்தான்.
"எனக்கு டைம் ஆயிடுச்சு!"
"காலையில போ!"
"எது?உங்களுக்கு எப்போதும் விளையாட்டு தானா?ஏற்கனவே,தாத்தா உங்க கூட தனியா எங்கேயும் இருக்க கூடாதுன்னு சொல்றார்!"
"ஐயயோ! ஏன்டி செல்லம்?"
"ம்...உங்களைப் பற்றி தெரிந்துவிட்டதோ என்னமோ!"