(Reading time: 9 - 17 minutes)

50. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

சிவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!….”

பிரம்மரிஷியே சில கணம் அதிர்ந்து போய்விட, மற்றவர்கள் நிலையை கேட்டிடவா வேண்டும்!!!?..

அவள் தன் உயிர் என்று சொன்னவன், பெற்றவரிடத்திலேயே அவள் என்னுடையவள் என உரிமை கோரியவன் இன்று இப்படி ஒர் வார்த்தையை கூறினால் யார் தான் சிலையாகி போக மாட்டார்கள்…???...

அதிர்விலிருந்து முதலில் மீண்டது இஷான் தான்…

“என்னடா சொல்லுற?...”

ஆதங்கம் தாங்காமல் இஷான் பட்டென்று கேட்டுவிட,

“இல்ல இஷான் நான் தெளிவா யோசிச்சு தான் சொல்லுறேன்…” என்றான் ஜெய் நிதானமாக…

“எதுடா தெளிவான முடிவு?... சதியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுறது தான் உன் தெளிவான முடிவா?...”

ஆத்திரமும், ஆதங்கமும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு இஷானை கேள்வி கேட்க வைக்க,

“அதான் அவனே வேண்டாம்னு சொல்லிட்டான்ல… இன்னும் என்னடா உன் பிரச்சினை?....”

தட்சேஷ்வர் மகனைப் பார்த்து சினத்துடன் வினவ,

“அவன் வேண்டாம்னு சொன்னாலும் அவனை யாரும் விடப்போறதில்லை…”

தயங்காமல் வெளிவந்தது இஷானின் வார்த்தைகள்…

தட்சேஷ்வர் மகனை உக்கிரத்துடன் பார்த்திட, இஷானும் அதனை தயங்காமல் எதிர்கொள்ள,

பிரம்மரிஷி கையமர்த்தி மேற்கொண்டு யாரும் பேசவிடாமல் தடுத்தார்…

“சிவா… நீ கூறிய வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று உனக்கு தெரியுமா?... தெரிந்து தான் அப்படி ஓர் வார்த்தையை நீ……?...”

பிரம்மரிஷி வார்த்தைகளை முற்றுபெற விடாமல் கேள்வியோடு நிறுத்திட,

“தெரிந்து தான் தாத்தா சொன்னேன்…” என்றான் ஜெய்யும் உடனேயே…

அவர் புருவத்தை உயர்த்தி அவனை விநோதமாக பார்த்திட, அவன் தொடர்ந்தான்…

“நீங்க எல்லாரும் நினைக்குற மாதிரி சதி இப்போ என் காதலி இல்ல தாத்தா… என் மனைவி…..”

ஜெய்யின் வார்த்தைகள் வெளிவந்த நொடியே அனைவரின் முகமும் பூவாய் மலர்ந்திட தட்சேஷ்வரின் முகமோ சட்டென இருண்டது…

“சதிக்கும் எனக்கும் எந்த ஜென்மத்துல எப்போ கல்யாணம் ஆச்சுன்னு எனக்கு சொல்லத்தெரியலை… ஆனா இதோ என் கையில இருக்குற தாலியை அவளுக்கு நான் பஞ்ச பூதங்கள் சாட்சியா கட்டியிருக்குறேன்… அந்த பந்தம் தான் இந்த ஜென்மத்துலயும் தொடருது… தொடர்ந்துட்டிருக்குற பந்த்தத்தை புதுப்பிக்க வேணா செய்யலாமே தவிர, அதை அழிக்க முடியாது, மறைக்கவும் முடியாது…”

ஜெய் நிமிர்வுடன் கூற, தட்சேஷ்வர் வெளிப்படையாகவே அவனைப் பார்த்து முறைத்தார்…

“சதி என்னவள்… என் மனைவி… அது முடிஞ்சி போன ஜென்மத்துல மட்டுமில்ல… இந்த ஜென்மத்திலேயும் தான்… அதைப் புதுப்பிக்க தாத்தாவும் மத்தவங்களும் முயற்சி பண்ணுறது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை அதை நீங்க அழிக்கப் பார்க்குறது… என்னை சதிகிட்ட இருந்து பிரிச்சிட்டா என் நினைவுகள் அவகிட்ட இருந்து மறைஞ்சி போயிடும்னு தப்பு கணக்குப் போடுறீங்க… உங்க எண்ணம் ஒருநாளும் நிறைவேறாது…”

ஜெய் கண்களில் தீவிரத்துடன் கூறிவிட்டு,

“எங்கிட்ட இருந்து அவளையோ, அவகிட்ட இருந்து என்னையோ முடிஞ்சா பிரிக்க முயற்சி பண்ணுங்க…” என்றான் சவாலாக…

“பிரிச்சிக் காட்டுறேண்டா… பிரிச்சி காட்டுறேன்…”

தட்சேஷ்வரின் குரலில் ஒரு வெறி தெரிய

“அது என் உயிர் இருக்குற வரைக்கும் அது நடக்காது….” என்றான் ஜெய் உறுதியுடன்…

“நடந்துட்டா என்னடா செய்வ?...”

“அப்படி ஒரு சம்பவம் நடக்கவிருக்குறது உண்மைனா, இந்த சதி நெருப்புக்கு இரையாகுறதும் உண்மை….”

தீர்க்கமாக வெளிவந்தது சதியின் குரல் யாருமே எதிர்பாராத வண்ணம்…

“சதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!....”

பிரம்மரிஷி குரல் உயர்த்த, ஜெய்யோ அவளை விழிகளால் உறுத்துப்பார்த்தான் ரத்தமென சிவந்திருந்த விழிகளுடன்…

முன் ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகள் நொடிப்பொழுதில், பிரம்மரிஷியின் விழிகளுக்குள்ளும், தட்சேஷ்வரின் விழிகளுக்குள்ளும் வந்து செல்ல, இருவருமே துடித்துப்போயினர்…

பிரம்மரிஷி தனது விழிகளை இறுக மூடிக்கொள்ள, தட்சேஷ்வரோ அந்த நிகழ்வினை தாங்க முடியாது கற்சிலையென நின்று கொண்டிருந்தார்…

“என்ன பேச்சு சதி இது?...”

இஷான் கோபமாக அவளைக் கடிந்து கொள்ள, வேகமாக சதியின் அருகே வந்தான் ஜெய்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.