(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 03 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

ன்ன தான் டா  ஆயிற்று  இப்ப எதுக்கு கத்தினாய்.

இங்க பாரு இந்த லூசு நிற்க்கும்  கோலத்தை

என்ன டா  இது

இப்படி ராத்திரியில்  தலையில் இருந்து கால் வரைக்கும் சப்பாத்தி மாவை  கொட்டி வெள்ளை பேய் மாதிரி இருக்கா  டா  பார்த்த உடனே  பக்குனு  ஆயிற்று . பயத்தில் கத்தாமல் என்ன செய்ய சொல்லு. இன்னும் என்ன எல்லாம் இந்த பிசாசால்  அனுபவிக்கணுமோ தெரியலை. ஏய்  எதுக்கு டி இப்படி செஞ்ச

வினோத் க்கு சிரிப்பாக வந்தது அவளை பார்த்து.அவன் சிரித்தது கார்த்திக்கை  கூட கொஞ்சம் எரிச்சல் பட  வைக்க அவனையும் முறைத்தான். ஆனால் சிரிப்பை அடக்குவது வினோத்க்கு  பெரும் பாடாய்  போய் விட்டது.

சும்மா திட்டாதிங்க மாமா  எனக்கு பசித்தது  ஏதாவது இருக்குமா என்று பார்க்க வந்தேன். இந்த அம்மா மாவு டப்பாவை  ஒழுங்கா பூட்டி வைக்காமல்  போய்ருக்காங்க நான் என்ன செய்றது

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே சாப்பிட்ட அப்றம் அதற்குள் என்ன பசி.ஏற்கனவே என் நிம்மதி  போய் விட்டது. இன்னும் என்ன எல்லாம் செய்ய போகிறாயோ . உன்னை எல்லாம் எப்படி தான் சமாளிக்கவோ  என் தலையில வந்து கட்டி வச்சிருக்காங்க என்று புலம்பினான் கார்த்திக்.

அதில் கீர்த்தி முகம் வாடுவதைக்  கண்ட வினோத் கார்த்திக் வா வெளிய போய்ட்டு வரலாம் அவளுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிட்டு வரலாம் என்றான்

என்ன வேண்டும் என்று  இவளிடம்  கேட்டு தொலை நான் பர்ஸ் எடுத்துட்டு வறேன்

அவன் போன பின்பு பாசமா அவளை பார்த்து கீர்த்தி உனக்கு என்ன வாங்கிட்டு வரணும். அவன் சொன்னதுக்கு கவலை படாதே. அதுக்காக சாப்பிடாமல் எல்லாம் இருக்க கூடாது. உனக்கு பிடிச்சசத்தை சொல்லு நான் வாங்கிட்டு வருகிறேன்.

அவனை வேற்று கிரக வாசி போல் பார்த்தாள்.

அவள் பார்வை புரியாமல் என்ன மா என்று கேட்டான்.

இப்ப எதுக்கு உன் பாசத்தை பொழிகிறாய்  இதுக்கு எல்லாம் நான் சாப்பிடாமல் இருக்க மாட்டேன். இந்த கீர்த்தி பட்டினி  கிடந்தததா சரித்தரமே  கிடையாது. புரிஞ்சதா  சரி நான் சொல்றதை நோட்  பண்ணிக்கோ அப்றம் மறந்துவிட்டேன் என்று  சொன்னால்  திருப்பி அனுப்புவேன்.

அவள் சொன்ன விசயத்தை கேட்டவன் அதை அவள் சொல்லியதை பார்த்து சிரித்து விட்டான். கையை ஆட்டி  ஆட்டி  பேசும் போதும் அவள் பேச வாயை திறந்து  மூடும் போதும் மாவு அவளை சுற்றி பரந்து கொண்டு இருந்தது.

இப்ப எதுக்கு கெக்க  பிக்கணு சிரித்து கொண்டு இருக்க. இங்க என்ன காமெடீ யா  நடக்குது

ஆமாம் என்று சொன்னால்  அதுக்கும் ஏதாவது சொல்லுவாள்  என்று நினைத்து  அமைதியாகி விட்டான்.

சரி கீர்த்தி உனக்கு என்ன வாங்கிட்டு வரணும்

எனக்கு ஒரு தோசை

சரி மா வாங்கிட்டு வறோம்.  கார்த்திக் வந்தால்  கீழே  வர சொல்லு என்று அவன் திரும்பும் போது

நான் இன்னும் சொல்லியே முடிக்கவில்லை  அதுக்குள்ள   உனக்கு என்ன  அவசரம் சரியான அவசர குடுக்கை என்றாள் கீர்த்தி

புருசனும் பொண்டடியும் ஒரே டைலாக  சொல்றாங்க பாரு. இவங்க கிட்ட மாட்டிகிட்டு  முழிக்கிறேன்  நான்

ரெண்டு இட்லி ஒரு தோசை அப்றம் ஒரு பூரி செட் அப்றம் ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு வா போதும்

நானும் கார்த்திக்கும் சாப்பிட்டு விட்டோம் எதுக்கு எங்களுக்கும் சேர்த்து வாங்க சொல்கிறாய்

நான் சொன்னது  எனக்கு மட்டும் தான்.

என்ன டா  என்ன வேண்டும் என்று கேட்டு விட்டாயா

ம்ம்

சரி வா போகலாம். ஏய்  எருமை போய் இந்த மாவை கழுவு முதலில். சும்மாவே உன்னை பார்த்தால் பயமா இருக்கும் இதில் இப்படி நின்றால் பயந்து செத்தே விடுவோம்

மாமா  வரும் போது இஞ்சி மிட்டாய்   வாங்கிட்டு வாங்க.

பதில் சொல்லாமல்  சென்று விட்டவனை முறைத்து கொண்டு நின்றாள் கீர்த்தி. எப்படி போறார் பாரு சரி கீர்த்தினு சொன்னால் தான் என்னவாம் சரி போய் குளிப்போம் இல்லா விட்டால் மறுபடியும் திட்டு விழும்

இந்த கோலத்தில் அம்மா என்னை பார்த்து இருக்கணும். ஒரு சங்கீத கச்சேரியேநடந்திருக்கும். ஏன்  கீர்த்தி எல்லாரும் எப்படி  உன்னை  திட்டுவதிலெ  குறியா இருக்காங்க. நமக்கு ஒரு அடிமை சிக்கமாட்டுக்கே. ஏன்  சிக்கலை அதான் வினோத் இருக்கானே என்று மனசாட்சி பதில் சொல்ல தனக்குள்ளே  சிரித்து  கொண்டாள்

தன்  மேல் இருந்த மாவு போக குளித்து விட்டு அமர்ந்தாள் இன்னும் அவர்கள் வந்திருக்க வில்லை. நினைவுகள் கார்த்திகை சுற்றியது. என்ன  நினச்சிருப்பான் என்னை பற்றி . ஏற்கனவே என்னை  பாத்தாலே கடிச்சு குதருவான். இன்று  அவனை பிடித்து முத்தம் குடுத்தத்துக்கு கேவலமான பொன்னா  நினச்சிருப்பானோ. சும்மாவே என்ன திட்டுவான்  இன்னைக்கு   வினோத் இருந்ததால் தப்பித்தேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.