(Reading time: 10 - 19 minutes)

நீங்களும்  தான் உங்க ப்ரெண்ட்  கிட்ட சொல்லி இருக்கீங்க .நீங்க சொல்லலாம் நான் சொல்ல கூடாதோ என்ன ஞாயமோ.

நான் ஒண்ணும் சொல்லலை

நீங்க  சொல்லாமல்  தான் அவன் ஈ என்று  இளிக்கிறானா.டேய்  போடா  உன் வீட்டுக்கு அதான் சாப்பாடு டெலிவரீ பண்ணிவிட்டாய் அல்லவா  ஓடு ஓடு. போகும் போது இந்த லூசு மாமாவையும்  கூட்டிட்டு போ எனக்கு பசிக்குது நான் சாப்பிட  போறேன். அப்றம் கண்ணு வைக்காதீங்க வயிறு  வலிக்கும்

ஏன்  டா  கார்த்தி இவளை பெத்தாங்களா   இல்லை  செஞ்சாங்களா  அட்டகாசம் தாங்க முடியலை. கல்லை  எடுத்து அடிக்குரததுக்குள்ள நான் போறேன் பா நீ வருகிறாயா கீழே

இல்லை  டா  நீ  போய் தூங்கு எனக்கு தூக்கம் வருது . முழிசிருந்தா  இந்த பிசாசு ஞாபகம் தான் வரும் நாளைக்கு காலைல பார்ப்போம் என்றான் கார்த்திக்

சரி கார்த்திக்  குட் நைட். அப்றம் கீர்த்தி அதில்  ஒரு ஆம்ப்லேட்  இருக்கு மறக்காம சாப்பிட்டுவிடு

எல்லாம் எங்களுக்கு தெரியும். நீ  இன்னும்  இடத்தை காலி பண்ண வில்லையா.

எனக்கு தேவை தான். நான் ஒரு லூசு

தெரிந்தால் சரி

சரி கீர்த்தி நான் உனக்கு அண்ணன் தானே  மரியாதையா அண்ணா என்று சொல்ல  கூடாதா. உங்க அம்மா அப்பா என்னை  பையனா தான் நினைக்காங்க. எங்கள் வீட்டிலும்  என்ன விட நீ தான் முக்கியம் உன்னுடைய உடன் பிறவா சகோதரன் நான் கொஞ்சமே கொஞ்சம் மரியாதை தர கூடாதா

ஓ உனக்கு இந்த ஆசை எல்லாம் இருக்கா. அண்ணனுக்கு மரியாதை  குடுத்தால்  நல்லா  இருக்காது  வாடா  போடா என்று  சொல்றதுக்குள்ள  ஓடி விடு சொல்லி விட்டேன்

தின்னு தொலை திண்ணி பண்டாரம் உன்னை கட்டி கொண்டவன் பாடு ரொம்ப திண்டாட்டம் தான்.

அது எங்க மாமா கவலை போடா வேலையை பார்த்துட்டு. இரு டா  நீ வேணா  பாரு என்னை கிண்டல் பண்றதுக்கு உன்னை  உன் பொண்டாட்டி கிட்ட பூரி கட்டையாள அடி வாங்க வைக்க வில்லை என்னோட பேரு கீர்த்தனா   இல்லை

பொண்டாட்டி என்ற வார்த்தையில் மனம் அபர்ணாவை  நினைத்து கொண்டது வினோத்க்கு

அவனையே பார்த்து கொண்டிருந்த கீர்த்திக்கு அவன் முகம் ஒரு நொடியில் மலர்ந்து போனது சந்தேகத்தை கிளப்பியது. இப்ப எதுக்கு உன் முகத்துல பல்ப் எறியுது

ஹீ  ஹீ  ஒண்ணும் இல்லையே.

டேய்  அண்ணா  ஒழுங்கா சொல்லிரு அப்றம் நானா  கண்டு பிடித்தேன்  என்றால் தண்டனை பலமாக  இருக்கும்

ஏய்  கீர்த்தி அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை நீ  சாப்பிடு  நான் போறேன்.

நம்பும் படி  பொய்  சொல்லு போ போ நானே கண்டு பிடித்துகொள்கிறேன்

அவன் சென்ற உடன் வயிறு  முட்ட  தின்று விட்டு அமர்ந்திருந்தவள் உடனே போய் படுத்தால்  அவள் எப்படி கீர்த்தி ஆவாள். அடுத்த நொடி கார்த்திக் அறை  கதவை தட்டினாள்.

என்ன ஆச்சு  இந்த மாமா தூங்கிட்டாங்களா  சத்தமே காணும். கதவு திறந்து தான் இருந்தது. இருட்டீனுள் மெல்ல அடி எடுத்து வைத்தாள். ஓரளவு   இருட்டு கண்களுக்கு பழகிய  பிறகு அவன் கட்டிலில் படுத்திருப்பான்  என்று நினைத்து அவனை எழுப்ப அருகில் சென்றவள் அடுத்த நொடி வீல்  என்று அலறினாள் ......

சுவடுகள் பதியும்....

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.