(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 04 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

வள் கத்தியதில்  அலறி அடித்து கொண்டு எழுந்தான் கார்த்திக். அதே நேரம் அவள் அலறலில்  வினொத்தும் பயந்து விட்டான். புருசனும்  பொண்டாடிக்கும் வேலையே இல்லை. ஒரு மனுசனை நிம்மதியாக  தூங்க விடுராங்களா . அப்போது  அவன் அலறினான் . இப்ப இவள் முறை போல.

இப்ப என்ன என்று  கேக்க போகலாமா வேண்டாமா . இல்லை இத்தனை மணிக்கு அவர்கள் வீட்டுக்கு செல்ல கூடாது. அப்படியே போனாலும் ரெண்டு பெரும் எனக்கு தான் பல்ப் குடுப்பாங்க என்று நினைத்து கொண்டு படுத்து விட்டான் வினோத்

கீர்த்தி என்ன மா ஆயிற்று  ஏன் கத்தினாய்  என்று உருகி கொண்டிருந்தான் கார்த்திக். அவள் கத்தியதில் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டான். அவன் குரலில் இருந்த பாசத்தில் அவனையே இமைக்காமல் பார்த்தாள்  கீர்த்தி. அடுத்த நொடி பயந்தது ஞாபகம் வர அவனை முறைத்தாள். அவள் முறைத்த  பிறகு தான் அவனும் சகஜ நிலைக்கு வந்தான். எதுக்கு லூசு இப்படி அலறினாய்

நீங்க ஏன்  கட்டிலில் படுக்காமல்  தரையில் படுத்துறுக்கீங்க நான் பயந்து போய் விட்டேன். திடீர்னு ஒரு ஒருவம் காலடியில் கிடந்தா பயமா  இருக்காதா.

அதுக்கு இப்படி கத்துவியா மனிதனை நிம்மதியாக இருக்க விடாதே சின்ன பாப்பா என்று  நினைப்பா உனக்கு ஒரு மணி நேரம் முன்பு வினோத்திடம் மென்மையாக அவள் ஒரு பேபீ டா  என்று சொன்னது அவனுக்கே மறந்து விட்டது.

பாப்பா பார்த்துறுந்தா மயங்கி விழுந்துருக்கும் ஆனால்  நான் விழவில்லை. ஒழுங்கா காரணம் சொல்லுங்க  மாமா எதுக்கு கீழே படுத்தீங்க. நான் கட்டிலில் இருப்பீங்க என்று நினைத்து கொண்டு வந்தேன்

அவளை பார்த்து தலையில்  அடித்து கொண்ட கார்த்திக் காரணத்தை சொன்னான். நீ  எப்படியும் வருவ என்று  தெரியும். நீ  என்னைக்கு தனியா படுத்துருக்க. அது மட்டும் இல்லாம கூட படுத்திருப்பவர்கள் மேல கையை காலை போட்டு கொடுமை படுத்துவ என்றும் தெரியும். உன்கிட்ட மிதி  வாங்க நான் ஆள் இல்லை மா அதான் நான் கீழேயே  படுத்து விட்டேன்.

ரொம்பவே உசாறு தான் அத்தான் நீங்க

லூசு ஒண்ணு  மாமா என்று  சொல்லு  இல்லை  அத்தான் என்று  சொல்லு. இல்லை முன்னாடி மாதிரி கார்த்திக் என்று கூப்பிடு  மாற்றி  மாற்றி சொல்லேதே என்றான்

சரி மாமா  என்றே  கூப்பிடுறேன் உங்க பெயர் சொல்லி கூப்பிட்டு எங்க அம்மா என் முதுகில் டின்னு  கட்டவா

நீயெல்லாம்  அத்தைக்கு பயப்படுவ  உன்னை பார்த்து தான் ஊரே பயப்படனும். சரி நீ மேலே படுத்துக்கோ. நாளைக்கு ஹாஸ்டல்  காலி  பண்ண வரணுமா

அதெல்லாம் வேண்டாம் மாமா  நான் அபர்ணா கூட ஆட்டொ வில்  வந்துவிடுவேன்.

சரி காலையில் நீ சமையல் செய்து விடுவாய் தானே  மதியம்  நீ  காலேஜ் கண்டீன்ல சாப்பிட்டு விடு நாங்க வெளியில் சாப்பிட்டு கொள்வோம்.

என்னது  காலையில்  டிபன்  செய்யணுமா. எனக்கு காஃபீ  கூட ஒழுங்கா போட தெரியாது மாமா.

நினைத்தேன் டீ நீ மாமா கிட்ட இந்த சமையல் பொருள் எல்லாம் எதுக்கு என்று கேக்கும் போதே. அப்போது என்ன நினைத்தாய் இந்த கிறுக்கன்  செய்வான் என்று தானே

ஆமாம் என்று எப்படி சொல்லுவாள் அவள் அதை தான் நினைத்திருந்தாள்

எல்லாம் என் நேரம் நானே செஞ்சு தொலையுறேன் உன்னையும் நம்பி இத்தனை பொருள்களை வாங்கி போட்டு விட்டு போயிருக்காங்க  இதில்  என்னமோ வேலை வெட்டி முறிக்க போற மாதிரி அத்தை  மிக்ஸீ  கிரைன்டர் வாங்கி குமிச்சிட்டு  போய்ருக்காங்க. உன்னுடைய கொடுமையை தாங்குவது போதாது என்று உனக்கு சமைத்து வேற போட வேண்டும். ஒழுங்கா அம்மா கிட்ட கேட்டு சமையல் கற்றுகொள். இல்லா  விட்டால் பட்டினியாய்  தான் கிட்க்கணும்  புரிந்ததா. நீ தின்னும் அளவுக்கு பட்டினியாய் இருப்பது முடியாத காரியம்.சரி படு  நேரம் ஆகுது.

நீங்க வேண்டும் என்றால்  மேலே படுத்துக்குறீங்களா  மாமா.

வேற வினையே வேணாம் உன்கிட்ட மிதிவாங்க நான் ரெடீ இல்லை குட் நைட்

ல்ல உறக்கத்தில் இருந்தான் கார்த்திக். அப்போது ஏதோ கனமாக ஏதோ  மேலே விழுவது கண்டு கண் விழித்தான். அவளே தான் கையை தூக்கி அவன்  மேல் போட்டு கொண்டு அவன் அருகில் ஒண்டினாள்.

கை அருகில் இருந்த தன்  மொபைல் எடுத்து மணி பார்த்தான் அதிகாலை நான்கு மணி. எல்லாருடைய மனமும் அதிகாலை நேரத்தில் அமைதியாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அதே மனநிலையில் அவனும் இருந்தான் அவளை பார்த்தான்.

எத்தனை மணிக்கு இவள் என் பக்கத்தில் வந்தால் என்று தெரிய வில்லையே. எப்ப பார்த்தாலும் சேட்டை தான். சின்ன வயதில் இருந்தே இவள் பண்ணும் சேட்டைக்கு அளவு இல்லை.

அழகாக இருந்தாள் கீர்த்தி . அழகா தான் இருக்கிறாள் ஆனால் எனக்கு மட்டும் ஏன்  காதல் வரவே இல்லை. ஒரு வேலை சின்ன வயதில் இருந்தே என் கூடவே இருந்ததால்  வர வில்லையோ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.