(Reading time: 18 - 35 minutes)

வினோத் அண்ணா வா சொன்னாங்க

ஆமா

ஹ்ம் சரி

கீர்த்தியின் மனம் முழுவதும் நேற்று வினோத் முகத்தில் தோன்றிய சந்தோசமே தோன்றியது அதற்கு காரணம் அபர்ணாவா இருக்குமோ. அப்படி இருந்தால் அது சரி கிடையாதே 

அப்பு இனி வினோத் கால் செய்தால் பேசாத சரியா

ஏன் டீ

என்னிடம் காரணம் கேட்காதே அதை என்னால் சொல்ல முடியாது ஆனால் பேசாதே சரியா.

கெட்ட  பையனா

சே அப்படி இல்லை அவனை மாதிரி ஒரு நல்லவன் கிடையாது ஆனால் அவங்க கூட பேசாதே

இப்படி சொன்னால் எப்படி கீர்த்தி ஒரு விசயத்தை செய்யாதே என்று சொன்னால் தான் செய்ய தோணும். ப்லீஸ் காரணம் சொல்லி வீடு கண்டிப்பா பேசலை.

அவங்க ஒரு பொண்ணை விரும்புனாங்க போல. அந்த பொண்ணு ஏமாத்திருக்கு அதனால் ரொம்ப கஸ்ட பட்டாங்க

அதற்க்கும் நான் பேசாமலிருப்பதர்க்கும் என்ன சம்பந்தம்

அது அது வந்து. சரி சொல்லி விடுகிறேன் ஆனால் எனக்கும் நிச்சயமாக எனக்கு தெரியாது ஒரு யூகம் தான் நீ தப்பா எடுத்து கொள்ளாதே

ஏன்டீ இப்படி புதிர் போடுற சொல்லி தொலையேன்

அவங்க உன் மேல விருப்பம்  காட்டுவது போல இருக்கிறது அப்பு. நேற்று உன்பேச்சு வரும் போது அவங்க முகம் சந்தோசமாக மலர்ந்தது அப்பவே எனக்கு சந்தேகம் தான்.

என்னடி குண்டை தூக்கி போடுற . ஒரு தடவை தானே பார்த்தேன் அது மட்டும் இல்லாமல் அவன் என்ன சொன்னான் தெரியுமா என் கூட கடலை போட அவன் ஆள் இல்லை என்று. நீ நினைப்பது போல இருக்காது கீர்த்தி வாய் அப்படி சொன்னாலும் அபர்ணாவின் மனது கதவை திறந்தஉடன் அவன் தன்னை பார்த்த பார்வை ஞாபகம் வந்தது ஒரு வேலை கீர்த்தி சொல்வது போல இருக்குமோ

அப்படி இருந்தால் சந்தோசம் தான் என்றாள் கீர்த்தி 

ஏன் டீ  உங்க அண்ணன் என்னை லவ் செய்தால் தப்பா நான் மோசமாவா இருக்கேன். சொன்ன பிறகு தான் சொன்ன வார்த்தையே புரிந்தது

அப்பு நீ என்ன டீ சொல்ற. உனக்கு வினோத்தை பிடித்திருக்கா

நான் அப்படி சொல்லவில்லை கீர்த்தி நீ அப்படி சொன்ன உடனே எனக்கு என் நான் சரி கிடையாது என்று தோனியது அதனால் தான் கேட்டேன்

அவங்க கதை எனக்கு முழுவதும் தெரியாது கீர்த்தி. ஒரு ஐந்து வருடம் முன்பு தான் அவங்களை எனக்கு தெரியும். அதுவும் கார்த்திக் எங்க அத்தை யிடம்  நான் வீட்டுக்கு ஒரு நண்பனை அழைத்து கொண்டு வருகிறேன் என்று. அத்தை  யாரு என்று கேட்டதுக்கு வினோத் பற்றி சொன்னாங்க. வீட்டுக்கு ஒரே பையன். அவங்க காதல் தோல்வியில் தற்கொலை வர சென்று விட்டான்  என்று. கார்த்திக் மாமா தான் அவங்களை கொஞ்சம் மாற்றி இந்த அளவுக்கு சிரிக்க வச்சிருக்காங்க. நானும் அதற்காக தான் அவங்களை வம்பு செய்வதர்க்காக  வாடா  போடா  என்று பேசுவேன் அவங்களை  பார்த்ததில் இருந்தே எனக்கு அண்ணன் இல்லை என்று கவலை பட்டதே இல்லை.

உன்னை வேண்டாம் என்று சொன்னதுக்கு நீ  காரணம் இல்லை. அவங்க இன்னொரு முறை காதலில் விழுந்து அந்த காதலும் நிறை வேறாமல்  போனால் அடுத்து வினோத் அண்ணா  இருக்கவே மாட்டாங்க. அதனால் தான் சொன்னேன்.கதை பேசியே இன்னைக்கு நாள் முடிந்து  விட்டது சரி விடு  வா ஹாஸ்டல்  போய் திங்க்ஸ்  எடுத்துட்டு  வீட்டுக்கு போவோம்

சரி என்று வாய் சொன்னாலும் அபர்ணா மனம் முழுவதும் வினோத் நினைவுககளே ஆட்கொண்டது. அவன் காதலித்தால்  எனக்கென்ன  நான் ஏன்  அவனை பற்றி நினைக்கிறேன் இனி அவனிடம் பேசவே கூடாது. பிறகு என்னிடம் வந்து காதல் என்று   சொன்னால்  நான் என்ன செய்ய முடியும். வேண்டாம் காதலே வேண்டாம் என்று முடிவு எடுத்தாள் இந்த முடிவு கடைசி வரை மாறாமல் இருக்குமா?

அதே நேரம் வழக்கம் போல் தங்கள் வேலையில்  மூழ்கி இருந்தனர் வினொத்தும் கார்த்திக்கும் . சுமார் பனிரெண்டு மணி அளவில் கார்த்திக்கின் போன்  அலறியது. யாரு என்று எடுத்து பார்த்தால் கீர்த்தனா  என்றது. இவள் ஏன்  இந்த நேரத்தில் அழைக்கிறாள். என்ன வில்லங்கத்தை  இழுத்து வைத்திருகிறாளோ  தெரியலையே என்று அவன் மனமும் அலறியது உண்மையில் அதே நேரம் அவள் அங்கு வில்லங்கத்தை உருவாகி விட்டு தான் அவனை அழைத்தாள் கீர்த்தனா

சுவடுகள் பதியும்....

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.