(Reading time: 18 - 35 minutes)

பத்தாம்  வகுப்பு படிக்கும் போதே பக்கத்துல உள்ள பையனை பார்த்து கண்ணடிக்கிறாய் அதுவும்  நான் கூட வரும் போதே.சுவர் மேல ஏறி உட்காந்து  பக்கத்து வீட்டு  சின்ன பிள்ளைங்க கூட கடலை. அது மட்டும் இல்லாம எங்க அப்பாவை டேய்  ராஜூ வாடா போடா என்று வேற சொல்ற , பொம்பள பிள்ளை மாதிரியா நடந்துக்கிற. இன்னும் பேசிட்டே இருந்தாங்க மாமா  அப்றம் எங்க அப்பா தான் சமாதான படுத்தி கூட்டிட்டு போனாரு. இப்ப சொலுங்க அவரோட கொடுமை எவ்வளவு  பெரிய விசயம்

இதை எல்லாம் விட கொடுமை எது தெரியுமா மாமா  நான் சொன்னேன் ஏம்மா அப்பா தான் அடிச்சாறு என்று. அதுக்கு அவங்க சொன்னாங்க பாரு ஒரு பதில். யாரு உங்க அப்பாவா  அடிப்பாரு அவர் சரியான பிள்ளை பூச்சி ஆனா நீ  அப்படியா உலகத்தையே விற்று விடுவாய். இதுல அவர் மேல பழி பொடுராயா என்று  வேற கேட்டாங்க.

கீர்த்தி உன்கிட்ட ஒண்ணு கேக்கணும் சீரியசான  குரலில் கேட்டான்.

என்ன மாமா கேக்கணும் சொல்லுங்க 

உன்னை பெத்தாங்களா  இல்லை அளவு எடுத்து செய்தங்களா 

இருங்க ஒரு நிமிசம் என்றவள் அவன் போனை பிடுங்கி  அவள் வீட்டுக்கு அழைத்தாள்.

எப்பா 

கீர்த்தி குட்டி எப்படி டா  இருக்க என்றார் பவித்ரன்.

எப்பா  ஓவரா  பாசத்தை புளியாதே  எனக்கு சளி  பிடிச்சிக்க போகுது உன் வண்டவாளத்தை  தான் தண்டவாளம் ஏற்றிகொண்டு  இருக்கேன்   மாமா கிட்ட.அவருக்கு ஒரு பெரிய டௌட் வந்துருக்கு அதான்  உனக்கு போன்  போட்டேன்.

பார்த்தாயா  உனக்கு இப்பவாது  தெரியுதா இந்த அப்பாவோட பெருமை. எனக்கு எவ்வளவு  மூளை இருக்கிறது என்று தெரிந்து தான்  கார்த்திக் என்கிட்ட கேட்கிறான். என்னை லூசு லூசு என்று சொல்வாய் தானே இப்பவாவது புரிந்துகொள் 

எப்பா 

என்னடா குட்டி

நீ மட்டும் என் கையில் சிக்கினால் ....

சரி சரி நோ கோவம் மீ  பாவம் என்ன டௌட் கேளு நான் சொல்றேன் என்று சொன்ன அவர் குரலில் அறிவாலியான தன்னிடம் கேள்வி கேட்கிறார்கள்  என்று பெருமிதம் வழிந்தது.

ஓவரா  பெருமை படாத நான் மாமா கேட்ட கேள்வியை கேட்டு விடுகிறேன் அதன் பிறகு  இன்னும் பெருமை பட்டுக்கொள் . நீ தானே  என் அப்பா அதனால தான் உன்கிட்ட கேக்கிறேன் என்ன நீ பெத்தீயா இல்லை செஞ்சியா. இது தான் மாமாக்கு வந்த டௌட் அவர் கிட்ட குடுக்கிறேன்  உன்

அறிவாளி தனத்தை புத்திசாலிதனத்தை இந்த கேள்விக்கு பதில் சொல்லி நிரூபித்துகொள் அப்பா   இரு மாமா கிட்ட குடுக்கிறேன்  என்று கார்த்திக்கிடம் குடுத்தாள் 

அவள் கேள்வியில் அவர் பட்டு  கொண்டிருந்த பெருமை மண்ணோடு மண்ணா   போகி விட்டது. கார்த்திகிடம்  அசடு வழிந்த படி  பேசி  கொண்டிருந்தார் பவித்ரன். அவனும் இப்படி மாட்டி  விடுவாள் என்று தெரியாமல்  திரு திரு என விழித்து கொண்டிருந்தான்

கார்த்திக் அது ஒரு லூசு. அவளை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாத

அது லூசு என்று  எனக்கும் தெரியும் மாமா. ஆனாலும் தம் அடித்து விட்டு அவளை மாட்டிவிட்டது கொஞ்சம் அதிகம் மாமா.

உன்னிடமும் உளறி விட்டாளா கார்த்திக்.எனக்கு அவ ஒரு பொம்மை மாதிரி கார்த்திக். பொம்மையை  வச்சு நாமவிளையாடுவோம் தானே அது மாதிரி தான் அவளை வைத்து அப்ப அப்ப விளையாடுவேன். ஆனால் என்ன நடந்தாலும் அதை பெரிதாக என்ன மாட்டாள். அவளை நன்றாக பார்த்து கொள்வாய் தானே எங்கள் உயிரே அவள் தான். 

கண்டிப்பா மாமா கவலை  படாதீங்க ஆனால் கொஞ்சம் மனசாட்சியை திறந்து வைத்து விட்டு பேசுங்கள் நான் அவளை நன்றாக பார்த்து கொண்டாலும் அவள் என்னை அலற வைப்பாள் தானே 

அதுவும் சரி தான் அவளிடம் இருந்து உன்னை நன்றாக பார்த்து கொள் கார்த்திக் பொல்லாத பெண்.

சரி மாமா நான் அப்றம் பேசுறேன்  என்று சொல்லி வைத்து விட்டு அவளை தேடினான். அவள் அறையில்  இருந்தவளை பார்த்து கொண்டே சென்று விட்டான் 

ரு வழியாக அவன் செய்து வைத்த உப்மாவை கீர்த்தியும் வினொத்தும் உண்டு விட்டு அவர்கள் வேலைக்கும் இவள் கல்லூரிக்கும் சென்றார்கள்

கல்லூரிக்கு போன உடனே அபர்ணா பிடித்து கொண்டாள். சாரி டீ நேற்று நான் உன் அந்தரங்க விசயத்தை பற்றி கேட்டிருக்க கூடாது அண்னாக்கு கோபம் வந்து விட்டததுல . நல்லதா போச்சு பெரிய சண்டை வரலை. எனக்கு உங்களுக்குள்ள எந்த சண்டையும் வரலை என்பதை கேட்ட பிறகு தான் நேற்று தூக்கமே வந்தது தெரியுமா என்று வாய் விட்டாள் அபர்ணா

கீர்த்தியின் முக பாவனையிலே தான் உளறி விட்டதை உணர்ந்தாள் ஐஐயோ இப்ப காரணம் சொல்லா விட்டால் விட மாட்டாள் .

எனக்கு கவலையா இருந்தது கீர்த்தி அதான்  உங்க வீட்டில இருக்கானே ஒருத்தன் அவன் கிட்ட நம்பர்  குடுத்து சொல்ல  சொன்னேன் அவன் தான் நைட் எந்த சண்டையும் இல்லை என்று சொன்னான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.