என்ன வார்த்தை மாமா என்று ஆசையோடு கேட்டாள் கீர்த்தனா .
அதுவா நீ சொன்னாயெ வெக்கமா வருது என்று. எங்கயாவது ரவ்டி ரங்கமாவுக்கு வெக்கம் வருமா. நீ ஒரு சேலை கட்டிய பேட்டை ரவ்டீ தான். நீ வெக்கமாக வருது என்று சொன்னால் அதை ஆராய தோணுமா தோனாதா. அதனால் தான் நின்றேன். அந்த பிள்ளை என்ன பற்றி என்ன நினைத்திருக்கும் . உன்னை போய் என் தலையில் கட்டி வைத்துவிட்டார்களே நான் என்ன என்ன பாடு பட போறேனோ தெரியலையே.
சும்மா பொய் சொல்லாதீங்க.
எது நீ ரவ்டி என்று சொன்னது பொய்யா எங்க உன் மனசாட்சியை தொட்டு சொல்லு.
சேலை கட்டிய ரவ்டி என்று சொன்னது பொய். நான் எங்க சேலையா கட்டிஇருக்கேன். சுடிதார் தான் போட்டு கொண்டு இருக்கேன்
அதான பாத்தேன் ஒரு நிமிசத்துல நீ கூட திருந்திடியோ என்று நினைத்தேன் உன்னை பற்றி தெரிஞ்சும் நினைக்கிறேன் பாரு. நீ சரியான கேடி டீ. அன்று உங்க அப்பாவை லூசாப்பா நீ என்று கேட்டாயே அப்ப ஒரு பார்வை பார்த்தாரு பாரு எனக்கு மாமாவை பார்த்து பாவமா இருந்தது.
நீங்க அவருக்கு எல்லாம் பாவம் பாக்காதீங்க. நிஜமா எங்க அப்பா சரியான லூசு தான். என்னை என்ன பாடு படுத்துவாங்க தெரியுமா.
பெத்த அப்பாவை போய் என்ன வார்த்தை சொல்ற உனக்கு ரொம்ப செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்காங்க
நிஜமா தான் மாமா. அவர் கூட நீங்க சனி ஞாயிறு தான் இருப்பீங்க ஆனால் வாரம் முழுவதும் அவருடன் இருந்து நான் என்ன கஸ்ட பட்டிருக்கேன் தெரியுமா
அப்படி என்ன உன்னை கொடுமை செஞ்சாங்க.சொல்லு கேட்போம் உன் பொன்னான வாழ்க்கை வரலாறு பற்றி. அவங்களை நீ படுத்தாமல் இருந்தால் போதாது. சொல்லு என்ன செஞ்சாங்க.
என்கிட்ட வம்பு செஞ்சுடே இருப்பாங்க. நான் ஆசையோட சாப்பிட உக்காந்தா என்கிட்ட பிடுங்கி சாப்பிடுவது தான் அவருக்கு வேலை. ஃப்ரிட்ஜெல ஏதாவது இருந்தால் அதை தின்னு காலி செஞ்சிட்டு எங்க அம்மா கிட்ட என்னை மாட்டி விடுவாங்க. அது என்னமோ நான் தான் காலி செஞ்ச மாதிரி திட்டும்.
உடனே நீ ரோசபபட்டு ஒண்ணும் சாப்பிடாம பட்டினியாக இருந்துருப்பியே.
பட்டினியா நானா இந்த கீர்த்தனாவா நெவர் நான் பட்டினி கிடந்தததா சரித்திரமே இல்லை. ரெண்டு மூணு தடவை பார்த்தேன் அவர் இப்படியே தான் செஞ்சாரு. எங்க அம்மா என்னையே தீட்டும். யோசிச்சு பார்த்ததில் ஒரே ஒரு முடிவு தான் சரியா தோணுச்சு.
என்ன
எங்க அப்பாக்கு முன்னாடி அதை எல்லாம் நான் காலி பண்றது தான். எப்படியும் திட்டு கிடைக்கும் அதை சாப்பிட்டுவிட்டு வாங்கி கொள்ளலாம் ல அதான். அப்பா எங்க அப்பா முகம் போகுமே அதை பார்க்க ஜாலியாக இருக்கும்
நல்ல அப்பா நல்ல பொண்ணு என்று தலையில் அடித்தான் கார்த்திக்
அவர் அது மட்டுமா செஞ்சாரு. அதை விட ஒரு நாள் மொட்டை மாடியில் நின்று திருட்டு தம் அடிச்சிட்டு இருந்தாரு. அவர் சிகெரெட் அடிப்பாங்க என்று அன்று தான் தெரியும். சாப்பிட கூப்பிட போனேன் இதை பார்த்து அவரை நான் திட்டி கிட்டு இருக்கும் போதே எங்க அப்பா நல்லவர் மாதிரி போஸ் குடுத்துட்டு கீர்த்தி செல்லம் பொண்ணுங்க தம் எல்லாம் அடிக்க கூடாது மா அது தப்பு. ஏதோ ஜாலிக்கு என்றாலும் இனிமே செய்ய கூடாது என்று சொன்னாரு. நான் என்ன இப்படி சொல்கிறார் என்று யோசிக்கும் போதே எங்க அம்மா முதுகில் வந்து ஒரு அடி சப்புனு வச்சாங்க. அப்ப தான் தெரிந்தது அவர் ப்லேட்ட மாற்றி போட்டது. அப்றம் என்ன எங்க அம்மா சும்மாவே சாமியாடும் வேப்பிலை கிடைச்சா சும்மா விடுமா. என்னை கழுவி கழுவி ஊத்துச்சு
கார்த்திக்கு சிரிப்பை அடக்கவே முடிய வில்லை. அப்போது அவள் முகம் எப்படி இருந்துருக்கும். அது போக அந்த வாரமே அத்தை வந்து அம்மாவிடம் இந்த கீர்த்தி கழுதை தம் அடிக்கிறாள் என்ன என்று கொஞ்சம் சத்தம் போடுங்கள் அண்ணி என்று சொன்னது ஞாபகம் வந்தது. நானும் கூட இவ செய்திருப்பாள் என்று தானே நினைத்தோம் என்று ஞாபகம் வந்து அவனின் புன்னகையை விரிய செய்தது
இருங்க அவங்க பேசியதை உங்களுக்கு சொல்லி காமிக்கிறேன். ஏண்டி எருமை இந்த பழக்கம் எல்லாம் கத்து வச்சிருக்கியா. எத்தனை நாலா நடக்குது இந்த விசயம்.ஒத்தை பொண்ணு என்று உனக்கு செல்லம் குடுத்தது தப்பா போச்சு. ரெண்டு வயசுல கூட படிக்குறவன் பல்ல உடைத்து விட்டு வந்த.
மூணு வயசுல பரிச்சையில் பார்த்து எழுதி எங்க மானத்தை வாங்கினாய். எங்க போனாலும் யார் கூடவாது சண்டைய போட்டுட்டு வம்ப விலைக்கு வாங்கிட்டு வந்த. வீட்டில எங்கயாவது துட்டு வைத்திருந்தால் அதையும் ஆட்டையை போட்ட.ஒரு வாரத்துக்கு பண்டம் வாங்கிட்டு வந்தால் ஒரு நாளிலே தின்னு காலி செய்கிறாய்.