(Reading time: 18 - 35 minutes)

தன்  வயிற்றில் கை போட்டு நெஞ்சில் முகம் பதிய  தூங்கும் மனைவியை பார்த்து கொண்டே இருந்தான். அவளை விலக்கவும்  மனதில்லை

இன்னும் இவளை சிறு பெண்ணாக தான் நினைக்க தோன்றுகிறது. எப்போதும் கூடவே இருந்து சண்டை போட்டு கொண்டு அவனிடம் கொட்டு  வாங்கி கொண்டு இருப்பவள் மேல் திடிரென்று காதல் எப்படி வருமாம். ஏனோ அவன் எந்த பெண்ணை பார்த்தும் சலனம் அடைந்தது இல்லை.

ஆனால் இப்போது அவள் அவன் மனைவி அவனுக்கே அவனுக்கான போக்கிசம். இவள் மேல் எல்லா உரிமையும் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்ள கடமையும் இருக்கிறது . இன்னும் கொஞ்சம் நெருங்கி படுத்தாள் கீர்த்தி. ஏதோ சொல்ல முடியாத உணர்வு அவனை ஆட்கொண்டது.  இவள் படிப்பு  முடியும் வரைக்குமாவது கல்யாணம் ஆகாமல் இருந்திருக்கலாம். 

விடிவிளக்கின்  ஒளியில் அவளை ரசித்து கொண்டு இருந்தான். பார்க்க  சின்னதா இருந்து கொண்டு இன்று  இவள் பண்ணிய வேலைய பாரு. ஆனால் ஏன்  கார்த்திக் அவள் முத்தம் தரும் போது தள்ளி விடவில்லை  அதற்கு அப்றம்  அவளை திட்டவில்லை . நீயும்  அந்த தருணத்தை  ரசிக்க தான் செய்தாயா. அப்போது உனக்கும் அவளை பிடித்து தானே இருக்கிறது.

அவளை பிடிக்கவில்லை என்று நான் எப்போது சொன்னேன். என் அத்தை  மகளை எனக்கு பிடிக்காமல் போகுமா. இவளிடம் சண்டை போடுவது எனக்கு பிடித்தமான விசயம் அது உனக்கு தெரியாதா என்று மனசாட்சியிடம் கேள்வி எழுப்பினான்

அப்போது நீயும் அவளை விரும்புகிறாய் சரி தானே 

பிடிப்பது வேறு காதல் வேறு . பிடிக்கும் ஆனால் காதல் இல்லை 

அப்போது உனக்கு கீர்த்தனா  இல்லாமல் வேறு பெண்  யாரும் வந்து முத்தம் தந்தால் இன்று போல் தான் அனுபவித்திருப்பாய் அப்படி தானே.

மனசாட்சியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல  முடியாமல் நீ சும்மா இரு நான் தூங்க போகிறேன் என்று சொல்லி விட்டு அவள் இடையில் கை போட்டு இருவருக்குமான இடைவெளியை இன்னும் குறைத்து கொண்டு கண்களை மூடினான். அவனுக்கும் தெரியும் வேறு பெண்கள் அவனை நெருங்கி இருந்தால் கன்னம் பழுத்திருக்கும்  என்று அதை ஒத்து கொண்டால் அவன் எப்படி கார்த்திக் ஆவான் 

பிடிக்க வில்லை என்று சொல்லி விட்டு கட்டி பிடித்து தூங்குவது இவனாக தான் இருக்கும் என்று சொல்லி விட்டு மனசாட்சியும் தூங்கியது

காலையில் விழிப்பு வந்த கீர்த்திக்கு கண்களையே நம்ப முடிய வில்லை. இத்தனை நெருக்கத்தில் அவனின் கைகளுக்குள். அவனும் என்னை பிடித்திருக்கான் அப்ப  என்னை பிடிக்குமா மாமாக்கு. இருக்கும் நிலை சிறிது கூச்சத்தை  கொடுத்தாலும் சந்தோசமாகவே இருந்தது. விழித்த பிறகு திட்டுவானோ என்று நினைத்து விட்டு மெதுவாக அவன் பிடியில் இருந்து விலகினாள்.

அடுத்த நாள் அவனும் அவளை எதுக்கு என் அருகில் வந்து படுத்தாய் என்று கேட்க  வில்லை. நல்லதா போயிற்று மாமாக்கு தெரியாது தெரிந்திருந்தால்  கண்டிப்பாக திட்டிஇருப்பாங்க என்று நினைத்தாள். அவன் தூக்கத்தில் இவளை பார்க்க வில்லை என்று நினைத்து கொண்டாள்

குளித்து உடை மாற்றி  கிளம்பி கொண்டிருந்தவளின்  அருகில் வந்த கார்த்திக் இப்ப எதுக்கு இதை போட்டுட்டு போற என்று தாலியை சுட்டி காட்டினான்.

பின்ன கழற்றி வைத்து விட்டா  போக முடியும் என்ற கேள்வியை கண்களில் தாங்கி அவனை பார்த்தாள்.

தாலி கயிறு பளிச்சினு தெரியுது.படிக்கும் போதே கல்யாணம் செஞ்சிக்கிட்டா  கூட படிக்கிறவங்க கேலி பண்ணுவாங்க அதனால தான் சொன்னேன். என்ன கேலி செய்வாங்க என்று தெரியும் தானே. அது தெரியாமல் கண்டிப்பாக நீ இருக்க மாட்டாய்

அதெல்லாம் பரவாஇல்லை  மாமா நான் சமாளீச்சிகுவேன். அத்தை தான் இந்த வார விடுமுறைக்கு வந்து செயின்  மாற்றும் வரை இப்படியே இருக்கட்டும் என்று சொன்னார்கள்

எப்படி நேற்று  உன் ப்ரெண்ட்  கிட்ட நடக்காத விசயத்தை நடந்தது என்று  சொன்னாயே  அப்படியா.  அவள் முகம் சிவந்து போயிற்று. நடக்காததை சொன்னாலும் அது நடந்து விட்டது தானே மாமா. 

அதை ஞாபக படுத்தினால் கொன்று விடுவேன் 

ஏன் மீண்டும் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறதா

ஆமாம் பயமாக தான் இருக்கிறது என்று எப்படி சொல்லுவான் அதை சொல்லாமல் பேச்சை மாற்றினான் கார்த்திக் 

உனக்கு அறிவு இருக்கா  அதெல்லாம் பற்றி  வெளிய சொல்லுவாங்களா  அதுவும்  நடக்காத விசயத்தை. நான் எங்கடி அப்படி செஞ்சேன்

அது ஒரு கெத்தூக்காக  அப்படி சொன்னேன். உங்களை யாரு நாங்க பேசுறததை ஒட்டு  கேட்க  சொன்னா .

ஆமா டி அது ஒண்ணு தான் குறைச்சல். நான் ஏதாவது சாப்பிட  வேணுமா என்று  கேட்க  தான் வந்தேன். எதையும் கேட்க  நினைக்கவில்லை.   ஆனால் நீ  ஒரு வார்த்தை சொன்னாயெ  அதனால தான் கூர்ந்து கவனிக்க வேண்டியதா போயிற்று

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.