(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 05 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

ன்ன இத்தனை மணிக்கு போன்  பண்றா  சரி இல்லையே. என்ன பிரச்சனையை இழுத்து வச்சிருக்கானு தெரியலையே. மாமா சொன்னது ஞாபகம் வந்தது. திடீர்னு கல்லூரியில்  இருந்து போன்  வரும் கார்த்திக். அங்க வரிசையா ரவ்ண்டு  கட்டி நம்மள திட்டுவாங்க  என்ன பிள்ளை பெத்து  வச்சிருக்கீங்க  என்று. ஏதாவது செஞ்சுட்டு நம்ம உயிரை  வாங்குவாள் . இனிமே நீ கொஞ்சம் கவனமா இரு என்று சொன்னது ஞாபகம் வந்து பயத்தை தந்தது

பீதியோடே தான் அழைப்பை ஏட்ரான். என்ன ஆயிற்று கீர்த்தி எதுக்கு இத்தனை மணிக்கு போன்  பண்ணி இருக்க. சரி இப்ப எதுக்கு அழுது  கொண்டு இருக்க என்ன பிரச்சனை  எங்கே இருக்க. அவள் அழுகையில் அவன் மனமும் பதற  தான் செய்தது.

மாமா இங்க இங்க நீங்க உடனே காலேஜ் க்கு வாங்களேன்.

ஏய்  முதலில்  என்ன நடந்தது என்று  சொல்லு. உடனே கிளம்பி வா னா  என்ன எதுக்கு. முதலில் அழுகையை நிறுத்து கீர்த்தி

எங்க  ஏச் ஓ டீ  உங்களை பார்க்கணுமாம்.

எதுக்கு

மாமா ப்லீஸ் நீங்க வாங்க

போனை முதலில்  வை  நான் ஒரு மணி நேரத்தில் வர பார்க்கிறேன்

ஹ்ம்

ரு மணி நேரம் கழித்து கல்லூரியின் ஏச் ஓ டீ மணிமேகலை முன்பு நின்றாள் கீர்த்தி. அவள் அருகில் கார்த்திக் நின்றான்.

இது யாரு

என் மாமா

மாமாவா உன்னை உங்க அப்பாவ   இல்லை கார்டியனை  தானே வர சொன்னேன் நீ என்ன டா  என்றால்  வயது பையனை அழைத்து வந்து மாமா என்கிறாய். நீ விடுதியில் தானே இருந்தாய்.

நான் ஹோஸ்டலில்  இப்போது இல்லை மேடம்.

ஓ அப்ப  உன் குடும்பமே சென்னைக்கு வந்து விட்டதா. சரி உன் அப்பா எங்கே.

குடும்பம் வர வில்லை மேடம்  இங்கே நானும் மாமாவும் தான் தாங்கி இருக்கிறோம்.

கீர்த்தனா  உன்னை நான் இப்படி நினைக்க வில்லை. நீ  கொஞ்சம் சேட்டை செய்வாய்  என்று தெரியும் அதுக்காக உன் காதலனையே  என்னை பார்க்க அழைத்து வந்திருப்பாய் எவ்வளவு தைரியம் உனக்கு. அது மட்டும் இல்லாமல் அவருடன் தான் தாங்கி இருக்கிறாயா. இவ்வளவு மோசமான பெண்ணா நீ. ஹெலோ மிஸ்‌டர் என்னது  இது. கீர்த்தனா  கார்டியன்  தானே  வர சொன்னேன். நீங்கள் வந்துருகிறீர்கள்

மேடம்  ப்லீஸ். நான் சொல்வதை கொஞ்சம் கவனமாக கேளுங்கள் கீர்த்தி தெளிவாக சொல்லாததால் நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள்.  என் பெயர் கார்த்திக். நான் கீர்த்தனாவின்  கணவன். போன வாரம் தான் எங்களுக்கு திருமணம் நடந்தது. நான் அவளின் அத்தை  பையன் தான்.

கணவன் உடன் மனைவி இருப்பதில் என்ன தவறு. அவன் குரலில் சற்று எரிச்சல் இருந்தது. வர சொல்லி விட்டு  காரணம் சொல்லாமல் படுத்தி   எடுக்குது. இந்த எருமையாவது காரணத்தை சொல்லி இருக்கலாம். வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு என்று அவளை முறைத்தான். உடனே காதல் கல்யாணம் என்று நினைத்து விடாதீர்கள் எங்கள் வீட்டில் தான் செய்து வைத்தார்கள்.

என்னது  கல்யாணம் முடிந்து விட்டதா சத்தியமாக அதை அவர் எதிர் பார்க்க வில்லை. எதுக்கு இன்னும் காலேஜ்யில்  அப்‌டேட் பண்ணவில்லை. எங்கள் ஒருவருக்கும் தெரியாதே.

இது ஒரு அவசர கல்யாணம்.  இன்னும் சான்றிதழ் கைக்கு வராததால் கல்லூரியில்  சொல்ல முடிய வில்லை என்றான்.என்ன  விசயமா வர சொன்னீங்க  மேடம் .

ஏன் அதை உங்க அருமை மனைவி சொல்லலையா. இவள் செய்வது கொஞ்சம் நஞ்சம் இல்லை. செய்வது எல்லாமே தில்லுமுல்லு தான்

உன்னை  பல தடவை வார்ன்  பண்ணி விட்டேன் கீர்த்தி நீ அடங்குவதாய்  தெரிய வில்லை.  எப்போது பார்த்தாலும் எதையாவது செய்து எங்கள் உயிரை வாங்குவது. உங்க அப்பாவிடமும் பேசிவிட்டேன் அவங்களும் உன்னை கண்டிப்பது  போல் தெரிய வில்லை. இங்கே பாருங்கள் ஸர். இவளுக்கு டீ ஸீ  குடுப்பது  தவிர வேறு வழி இல்லை.

மேடம்  முதலில் என்ன நடந்தது என்று சொல்லுங்கள். அப்போது தான் எனக்கு புரியும்.

உங்கள் மனைவி இன்று ஒரு பையனின் மண்டையை உடைத்திருக்கிறாள். அவன் ரத்த  வெள்ளத்தில்  மருத்துவமனைக்கு தூக்கி சென்றிருக்கிறார்கள். என்ன நடந்தது என்று காரணம் கேட்டாள் சொல்ல வில்லை. இன்னும் விசயம் பிரின்ஸிபால்லுக்கு  சொல்ல வில்லை. நான் அவரிடம் சொல்லி  விட்டு வருகிறேன். நீங்கள் அவளிடம் விசாரியுங்கள். அந்த பையன் கண் விழித்த பிறகு தான்   நிலைமை  தெரியும். இல்லை என்றால்  போலீஸ் கேஸ் தான் ஆகும். நீங்கள் காரணத்தை கேட்டு வையுங்கள் நான் 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சென்று விட்டார்.

அவர் போன பிறகு அவளை முறைத்தான். என்ன டி நடந்தது. எதுக்கு அவன் மண்டையை உடைத்த. சொல்லி தொலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.