(Reading time: 17 - 34 minutes)

ஆனால்  லவ் பண்ணவில்லை பண்ண வில்லை என்று சொல்லிகொண்டு  பேபீ  பேபீஎன்று கொஞ்சுவது இவனாக தான் இருக்கும் இதை  சொன்னால்  என்ன முறைப்பான் என்று நினைத்து கொண்டான் வினோத்

வீட்டுக்கு அனைத்து பொருள்களையும் எடுத்து கொண்டு வந்தவுடன் தான் ஞாபகம் வந்தது கீர்த்திக்கு வீட்டு  சாவி அவனிடம் வாங்க வில்லை என்று.

ஸாரீ டீ  அப்பு சாவி வாங்கவில்லை  நீ வேணா  வீட்டுக்கு கிளம்புரியா. வெளியவே  வெயிட்  செய்ய வைத்து விட்டேன்.

பரவா  இல்லை கீர்த்தி அண்ணன் வந்த பிறகே போகிறேன். பக்கத்து தெரு தானே எத்தனை மணிக்கு வருவாங்க.

அவங்க வர 7 மணிக்கு மேல் ஆகும் என்று நினைக்கிறேன். இரு நான் சீக்கிரம் வர சொல்லி போன்  செய்றேன். கண்டிப்பா இப்ப  கிளிப்பாங்க ஏற்கனவே இன்னைக்கு என்ன செய்ய போறாங்களோ தெரிய வில்லை

அது அவன் மண்டையை உடைக்கும் முன்பு யோசித்திருக்கணும் 

மறுபடியும் அவள் அழைத்தத்தில் கார்த்திக் கலவரமானது மட்டும் நிஜம். பிரச்சனை  இல்லை என்று தெரிந்தவுடன் தான் உயிரே வந்தது. பிசாசே காலையிலே  சொன்னேன்ல சாவி எடுத்துக்கோ என்று . திண்ணும்  விசயம் மட்டும் மறக்கா உனக்கு 

மாமா இது நல்ல  இல்லை சொல்லிட்டேன். வெறும் ரவை  உப்மாவை  செஞ்சு குடுத்துட்டு இந்தா பேச்சு. இனி உப்மா  செய்ய வேண்டாம் மாமா    நல்லாவே  இல்லை. வேற ஏதாவது நல்லா  செஞ்சு தாங்களேன். நாளைக்கு மெனு நான் சொல்றேன் அதை செய்யுங்க சரியா

ஆமா டீ  உனக்கு சமைத்து  போட தான் உங்க அத்தை  என்னை  பெதிதிது  போட்டிருக்காங்க பாரு. கல்யாணம் ஆகியும் என் கையாலே  திங்க வேண்டி இருக்கு அதை விட கொடுமை. உனக்கும் ஆக்கி  போட வேண்டி இருக்கு. ஒரு மாசத்துல  சமையல் செய்ய பழக வில்லை  என்றால்  உனக்கு இருக்கு.

அதை பிறகு  பார்த்து கொள்ளலாம். சரி எப்ப வருவீங்க. நாங்க வெளியே நிற்கிறோம்

வாட்ச்மேன்  வேலை செய் அப்ப  தான் கொஞ்சம் கொழுப்பு குறையும் என்று விடனும் என்று  தான் ஆசை. ஆனால்  அபர்ணா பாவம்    நிற்க வைக்க வேண்டுமே  அது தான்  வருத்தம். உன்னால்  இன்று  நாள் முழுதும் வீணா  போச்சு. வினோத்தை  அனுப்புகிறேன் .

அந்த கடங்காரனை  வூரு  சுத்தாமல்  சீக்கிரமா வர சொலுங்க. நான் ஏன்  கொழுப்பை குறைக்க வேண்டும். குண்டா தான் இருப்பேன். இன்னும்   குண்டா தான்  ஆவேன் உங்களால முடிஞ்சதை  பார்த்துக்கோங்க. சீக்கிரம் அந்த தடியனை  வர சொல்லுங்க  நான் வைக்கிறேன்.

கீர்த்தி செல்லம் அப்படி எல்லாம் விபரீதமாக முடிவு எடுத்து விடாதே இப்போது தான் சிலிம்மாக அழகாய் இருக்கிறாள். குண்டா ஆனால் இந்த மாமா பாவம் தானே அதனால் இப்படியே இருக்க வேண்டும் என்ன. என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசினான்.

அவன் பேச்சில் வெக்கம் வந்தாலும் அது நீங்கள் சமைத்து போடுவதில் தான் இருக்கிறது என்று வைத்து விட்டாள் 

இவள் கொழுபை கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் குரைக்க முடியாது என்று தனக்குள் சிறிது கொண்டே வினோத்தை  தேடி சென்றான் கார்த்திக்

ன்ன டீ  ஆயிற்று என்றாள் அபர்ணா

இந்த மாமாக்கு  வேற வேலையே இல்லை எப்ப டா  தித்த  என்று காத்து  கொண்டிருப்பாங்க. வினோத் வாரானாம்

அப்ப  சரி டீ  நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று நவில பார்த்த அபர்ணாவை  வியப்பாய் பார்த்தாள்  கீர்த்தி என்னவாயிற்று இவளுக்கு என்று இப்ப தான் சொன்ன  அண்ணன் வந்த பிறகு போகிறேன் என்று

அது அது வந்து அப்போது தான் அவள் முகத்தை பார்த்த கீர்த்திக்கு விசயம் விளங்கியது. விளங்கியது மட்டும் அல்லாமல் முகத்தில் சந்தோசமும் அதே நேரம் யோசனையும் வந்தது. அதில் முதல் யோசனை அபர்ணாவின்  வீட்டில் காதலுக்கு சரி சொல்வார்களா என்று தான்

அவள் அப்பா இராணுவத்தில்  இருந்தவர். அவருடையது  காதல் திருமணம் தான் அதனால் கவலை இல்லை. என்று சிந்தித்த பின்னர் தான் கீர்த்தி  அவளை இன்னும் கூர்மையாக கவனித்தாள். அதில் சிறு தவிப்பு தெரிந்தது. மாட்டி  கொள்வோமோ என்ற பதட்டம் தெரிந்தது.

அவளை வம்பு இழுப்பதுக்காக  வினோத் பற்றி பேச்சை வளர்த்தாள் கீர்த்தனா . அபர்ணாவும்  விளையாட்டுவாக்கில்  அவனை பற்றி பேசி கொண்டிருந்தாள்.

அப்போது வினோத் வந்தான். வண்டியை வெளியவெ  நிறுத்தியதால் சத்தம் கேட்க வில்லை. கையில் பால் பாக்கெட்கொண்டு வந்தான்.  அவன் வந்ததை கீர்த்தி கவனித்தும்  எதுவும் சொல்லாமல்  அமைதியாக இருந்தாள் . அவன் வந்தது  தெரியாமல் அபர்ணாவின்  புலம்பல் தொடர்ந்தது. அதை கேட்டு வினோத் அப்படியே நின்றான்.

அன்று உங்கள் வீட்டுக்கு வந்த போது  எப்படி பார்த்தான் தெரியுமாடீ. சரியான முண்ட கண்ணன்.குறு  குறு என்று பார்த்தான் . என்றாவது  நமக்கு வெக்கம்  வந்திருக்கா  அவன் பார்த்த போது  எனக்கே வெக்கம்  வந்துவிட்டது என்றால்  பார்த்து கோயன். அவனுக்கு போய் நீ நல்லவன் என்று    ஸர்டிஃபிகேட் குடுக்கிறாய் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.