(Reading time: 17 - 34 minutes)

இதில்  வாய் வேற. கடலை போட மாட்டானாம். என்னிடம் பேசினால் குறைந்து விடுவானாம். அப்படியே  முகத்தில்  ஒரு குத்து  விடலாம் என்று  வேகம் வந்தது. பய  புள்ள  திருப்பி குத்துனா  அதான். இவன் மட்டும் கொஞ்சம் அழகா  இல்லை என்று  வச்சிக்கோ நாய் கவ்விட்டு  போய்ரும் டீ  கீர்த்தி.

அவனை திட்டுவது கீர்த்தனாவுக்கு  சந்தோசமாக இருந்தாலும் இதுக்கு மேலே இவளை பேச விட்டால் கழுவி கழுவி ஊத்துவாள்  என்பதால் எதுக்கு டா  இவ்வளவு நேரம் என்றாள்  கீர்த்தி அவனை பார்த்து.

அதிர்ந்து திரும்பினாள்  அபர்ணா ஆனால் அவன்  முகம் சாதாரணாமாக இருந்தது. கேட்டிருக்க மாட்டான். இல்லாவிட்டால்  சண்டைக்கு  வந்திருப்பான் என்று நினைத்து கொண்டாள் அபர்ணா.

அவனும் கேட்டதை காட்டி கொள்ளாமல் வந்த சிரிப்பையும் அடக்கி கொண்டு ஏன் சொல்ல மாட்ட  உனக்காக அங்க வேலையை  விட்டு ஓடி    வந்தேன் பாரு  என்னை  செருப்பால்  அடிக்கணும் 

அதை அப்றம் பொறுமையா அடிச்சிக்கோ. நான் வேணும் என்றால்  எடுத்து தரேன். இப்ப முதலில் கதவை திற .

எதை எடுத்து தருவ புரிய வில்லை கீர்த்தி 

செருப்பை தான் வேற என்ன

ஹீ  ஹீ  ஜோக்கா சிரிப்பே வரல என்று சொல்லி முறைத்தான் கீர்த்தியை 

நல்லதா  போச்சு வினோத் உனக்கு சிரிப்பு வரல. அதனால நாங்க தப்பிச்சோம். இல்லவிட்டால்  யாரு அந்த கொடுமையை பார்ப்பது.

எங்குட்டு  போனாலும் பதிலடி குடுகுறா பா . கார்த்திக் நிஜமாகவே பாவம் தான் என்று நினைத்தான்.

முதலில் ரெண்டு வீட்டுக்கு ஒரு வாசல் படியை  வைத்திருக்கான் பாரு அவனை சொல்லணும். உனக்கெல்லாம் நான் கதவை திறந்து விட வேண்டி இருக்கு என்றான்.

அதுக்கு பதில் கீர்த்தி எதையோ சொல்ல வருவதை கண்டு. கீர்த்தி தங்கச்சி விட்டுவிடுமா  இந்த அண்ணன் பாவம். காலையில்  உன் புருஷன் செஞ்சு தந்த மோசமான  உப்மாவையும் ஆஃபிசில்  தந்த நொந்த தயிர் சாதததையும் தின்றுவிட்டு தெம்பு இல்லாமல் வந்துருக்கேன். உன் வார்த்தை  போரை  ஆரம்பித்து விடாதே  மீ  பாவம் உள்ளே  போகலாம்.

ஆமா டா  வினோத் இந்த மொக்க உப்மாவில்  இருந்து தப்பிக்க உடனே  ப்ளான் செய்யனும்.

அவளுடைய சூழ்ச்சி அறியாத அவனும் தன்னை கூட்டு  சேர்கிறாள் என்று ஆனந்த பட்டு  என்ன மா செய்யலாம்  என்றான் கதவை திறந்து கொண்டே .

அதனால்  நாளையில்  இருந்து நல்ல  சாப்பாடா நீயே  செஞ்சிறு என்ன.

அதிர்ந்து திரும்பி பார்த்தவன் பேய் அடித்தது போல் நின்றான். அவனை கண்டு கொள்ளாது நீ  உள்ள வா அபர்ணா என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.

உள்ளே போகும் போது வினோத் முகத்தை பார்த்து அபர்ணாவுக்கு  சிரிப்பை அடக்க முடிய வில்லை.

இது தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறதா. கிடைத்த உப்மாவும்  இனி கிடைக்காது போலவே என்று அவன் புலம்பும் போதே ஏய்  எருமை  அந்த ரெண்டு பையையும்  உள்ள தூக்கிட்டு வா என்றாள் கீர்த்தி.

ஃபர்ஸ்ட் வாட்ச்மேன்  வேலை இப்ப போர்டர் வேலை. என்ன வச்சு நல்லா  செய்றாங்க டா  புருஷனும் பொண்டாடியும்

இவ்வளவு நேரம் கீர்த்தியுடன் வாயடித்ததால் இப்போது தான் அவன் கவனம் அபர்ணா வின்  மேல் பதிந்தது.

இவன் பார்த்த உடன் அவள் தலை குனிந்து கொண்டாள் எப்படி பார்க்கிறான் பாரு எருமை என்று நினைத்து கொண்டே. அதனால் அவள் வெக்கம்  அவனுக்கு மறைக்க பட்டது கீர்த்திக்கு தெள்ள  தெளிவாய் விளங்கியது.

உள்ளே சென்ற உடனும் இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் தொடர்ந்தது.

கையில் பால் வாங்கி கொண்டு வந்ததால் அதை எடுத்து கொண்டு கீர்த்தி உன்னோட பொருளை மேலே வைத்து விட்டு இருவரும் கீழே  வாருங்கள் நான் காஃபீ போட்டு வைக்கிறேன் என்றான் வினோத்

கீர்த்தி நீ மேல கொண்டு போய் வை  நான் காஃபி  போடுறேன் என்று சொல்லிவிட்டு அவன் கையில் இருந்த கவர்ரை  பிடுங்கி கொண்டு

சமையல் அறைக்குள் நுழைந்தாள்  அபர்ணா.

ஏய்  உனக்கு எல்லா பொருளும் எங்க இருக்கு என்று தெரியாது என்று சொல்லி கொண்டே அவள் பின்னால் சென்றான் வினோத். அவர்கள் போன 

பின்பு சமையல் அறையை பார்த்து சிரித்துவிட்டு எப்படிஓ ஒரு நல்ல காஃபி  போட்டால்  சரி தான் என்று நினைத்து கொண்டு மேலே சென்றாள்  கீர்த்தி

நானே போடுறேன் அபர்ணா நீ  அங்க போய் உக்காரு.

இல்ல நானே போடுறேன் .

எல்லாவற்றையும் எடுத்து கொடுத்தவன் அங்கேயே நின்றான். அவன் வீட்டில் அவள் வேலை செய்வதை ஏதோ ஒரு பரவசத்துடன் பார்த்து கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் மூளையில்  விளக்கு எறிந்தது என்ன டா  இது இந்த பிள்ளை வந்ததில் இருந்தே என் முகத்தை  பார்க்காமல்  பேசுகிறாள் என்று.  அன்று  என்னை பார்த்து பட்டாசாய்  பொரிந்தாள். ஏன்  இப்போது கூட என்னை அப்படி புகழோ புகழோ என்று புகழ்ந்தாள் .ஆனால் என்னை பார்த்தவுடன்  இந்த மௌனம் ஏன் . புதிதாய் பார்த்தான் அவளை

 அவனிடம் சத்தம் வராததால்  அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வையில் இருந்த கூர்மையில் தலை குனிந்து கொண்டாள் தன்  வெக்கத்தை  இந்த முறை வினொத்துக்கு மறைக்காமல்.......

சுவடுகள் பதியும்....

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.