(Reading time: 22 - 43 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 06 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

வளை பார்த்தவன் மனம் சிறகடிததது. ஏதோ ஒரு பரவசத்தில் அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டே அவள் அருகில் சென்றான். அவன் நெருங்குவதை  தாங்க முடியாமல் தரை  கவிழ்ந்து இருந்தாள் . மூச்சு காற்று தொடும் தூரத்தில் நெருங்கியவன்  பால் பொங்கும் சத்தத்தில் தன் உணர்வு  பெற்றான். எப்படி மறந்தேன் என்னுடைய இறந்த காலத்தை. சீட்டு கோட்டை சரிந்தது  போல நொறுங்கி போனது அவன் மனது. உடனே  அவளை விட்டு விலகியவன் வேறு ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டான்.

உள்ளே சென்றவன் மனம் உழைகலமாய்  கொதித்து தான் போனது. இது தப்பு இது தப்பு என்று மூளை எடுத்துரைக்க மனம் வாதம் நடத்த  கடைசியில்  பட்ட காயம் மனத்தை அழுத்த மூளை சொல்படி  தப்பு என்று முடிவு செய்தவன் தன்னை நிதான  படுத்தி கொண்டு  அறையை விட்டு வெளியில் வந்தான் வினோத். அவளை பார்க்க கூடாது என்று நினைத்து கொண்டே

ஆனால் வெளியே வந்தவுடன் அவன் கண்டது தவிப்புடன் அமர்ந்திருந்த அபர்ணாவை  தான். இவனை  பார்த்ததும் அவள் முகத்தில் வந்த நிம்மதியை  கண்டவன் அவளை பார்க்க சொல்லிய  மனதை  அடக்கி கீர்த்தியிடம் பேசி கொண்டிருந்தான்.

அவன் முகம் திருப்பியது வருத்தமாக  இருந்தது. அவனுடைய பழைய காதலி ஞாபகம் வந்திருக்கும் என்று நினைத்தவள் மனம் சிரித்தது அப்போது நீ தான் புது காதலியா  என்று அதன் கேள்வியில் விருக்கென்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள் அபர்ணா. அப்போது தான் அவளே உணர்ந்தால் அவன் அவள் மனத்தில் குடிஏறி  விட்டதை. அணு அணுவாய் அவனையே ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்  ஆனால் அவன் திரும்பவே  இல்லை.

தான் காதலை  உணர்ந்த தருணம் அபர்ணாவின் மனது ஆனந்த  பூக்களை சிதறியது. அவனுடைய பாரா முகம் வருத்தினாலும் மனம் மட்டும் உல்லாசமாகவே இருந்தது.

ஏதோ அந்த சூழல் அவனுக்கு சங்கடம் கொடுக்க அவனே பேச்சை ஆரம்பித்தான். கீர்த்தி இது உனக்கே ஞாயமா பால் வாங்கிட்டு வந்தது நானு. கடைசியில் எனக்கு தராமல்  ரெண்டு பெரும் குடிக்கீங்க. எனக்கு எங்க காஃபீ

ஏன்  டா  நீ என்ன தான் நினச்சிட்டு  இருக்க.

காஃபீ  தானே கேட்டேன் இதுல என்ன நினைக்க இருக்கு.

சரி நீயே  நியாயம்  சொல்லு. யாராவது வீட்டுக்கு டெலிவரீ பண்ண வரவங்களுக்கு காஃபீ  குடுத்து உபசரி பாங்களா .

கண்டிப்பா கூடாது கீர்த்தி. ஆனால்  ஏன்  இப்ப டெலிவரீ பண்ரவங்களை இழுக்கிற. நான் தானே காஃபீ  கேட்டேன்.

நீ  ஒரு ஞான சூனியம் என்று தெரியும் டா  ஆனால்  இன்று  தான் கண் கூடா  பார்க்கிறேன். பால் வாங்கிட்டு வந்து டெலிவரீ செஞ்சதானே. பிறகு என்ன

அபர்ணா அமைதியாக சிரித்து  கொண்டு இருந்தாள் . இருவரையும் பார்த்து முறைத்தவன் உங்களுக்கு போய் வாங்கிட்டு வந்தேன் பாரு  என்ன

இரு இரு செருப்பால்  தானே  அடிக்கணும்  அப்பவே வேற கேட்ட இரு எடுத்துட்டு வறேன் என்று எழுந்தாள்  கீர்த்தி.

ஏம்மா தாயே நீ  ஆனியே புடுங்க  வேண்டாம். குடிக்க காஃபீ  கேட்டால்  அடிக்க  செருப்பை  எடுத்து தரேன் என்று  சொல்ற. நானே போய் எடுத்துகுறேன்.

எதை செருப்பையா டா 

ஏய் நான் காஃபீய சொன்னேன் கீர்த்தி. ஐயோ பாவம் இந்த கார்த்திக் 

சிறிது நேரம் கீர்த்தி   அவனை மட்டம் தட்டி விட்டுவிட்டு அபர்ணாவை  அழைத்து கொண்டு மேலே சென்றாள். அவனும் வெளியே போய் வருவதாய் கிளம்பி விட்டான்.

இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள். அப்போது தான் பிரசாத் பற்றிய பேச்சு வந்தது.

நீ  அவன் மண்டையை மட்டும் உடைத்திருக்க கூடாது கீர்த்தி. நான் இருந்துருக்கணும். கொலையே செய்திருப்பேன்

விடு டீ அவனுக்கு என்னை பிடித்திருக்கு என்ன செய்ய. காதல் யார் மீது வரும் என்று கனிக்க முடியுமா உண்மையை சொன்னவுடன் புரிந்து கொண்டான்

 என்னவோ போ உன்னை யாரு கீர்த்தன என்று  பெயர்  வைக்க சொன்னா . அ எழுத்தில்  ஆரம்பிக்குற  மாதிரி வைத்திருக்கலாம். அப்படி என்றால்  நம்மை கல்லூரியில்  பாதி பேரை பிரிக்கும் போது என் கூடவே வந்துருப்ப. இப்ப பாரு நா ஃபர்ஸ்ட் பாட்ச்  நீ  ரெண்டாவது  பாட்ச்

ஏய்  லூசு அப்பு நானே என் பெயர் இதை வைத்தத்துக்கு  சந்தோசமா இருக்கேன். எங்க அம்மா அப்பா உறுப்படியா செஞ்சது இந்த ஒரு விசயம் தான். மாமா பெயரும் என் பெயரும் ஒண்ணு. அதனால் தான்.

எதுக்கு கீர்த்தி உனக்கு அண்ணா  மேல இவ்வளவு காதல்.

சொல்ல  தெரியாது  அப்பு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து பார்க்கிறேன். எனக்கு ஹீரொ மாமா தான். அவங்களோட ஒவ்வொரு செயலையும் ரசிக்க தான் தோணும்.

நமக்கு சில பேரை  பார்த்த உடனே பிடிக்கும் அது மாதிரி தான். அவங்க கூட இருக்கணும். அவங்க சத்தத்தை கேக்கணும். அவங்களை  தொட்டுகொண்டே  இருக்கணும் என்று  தோன்றும். சாதாரணமா பேசினால்  பேச மாட்டாங்க. அதனால் வம்பிளுத்து கோப பட  வைப்பேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.