(Reading time: 22 - 43 minutes)

ம்ம் நினைவு தெரிந்த நாளில் இருந்து அவருடன் தான் என்னுடைய வாழ்க்கையே. ஆனால் அதில் ஒரு சதவீதம் எதிரொலிப்பு கூட அவரிடம் கிடையாது பல நேரம் வலிக்கும். மாமா மேலும் தப்பு கிடையாது எனக்கு பிடித்த மாதிரியே அவருக்கும் என்னை பிடிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை தானே

அப்படி எல்லாம் இல்லை கீர்த்தி அவனுக்கும் உன்னை பிடிக்கும்

எனக்கும் தெரியும் வினோத் பிடிப்பதட்க்கும் காதலிப்பதட்கும் வேறுபாடு உண்டு. என் மேல் அவருக்கு அதிக அன்பு உண்டு ஆனால் காதல் சுத்தமாக கிடையாது. நானும் காத்திருப்பேன் அவர் காதலுக்காக ஆனால் கடைசி வராமல் போனால்

லூசு நீ அவனுடைய மனைவி ஏன் வருத்த படுகிறாய்

கடமைக்கு மனைவிக்கு உரிய மரியாதை எனக்கு குடுப்பாங்க ஆனால் அவர் மனதில் காதலியாய் என்று இடம் பெறுகிறேனோ அன்று தான் என் காதல் ஜெயிக்கும் அது வரை என்னுடையது ஒரு தலை காதல் தான்

சரி அதை விடு  உன் முடிவு என்ன. 

எனக்கு அப்பு வை பிடித்திருக்கிறது அதை அவளிடமும் சொல்லி விட்டேன் அவள் காதலையும் ஒத்து கொண்டாள் ஆனால் இன்னும் ஒன்றும் தெளிவாக பேச வில்லை  அவளிடம் பேசிய பின் தான் முடிவுக்கு வர வேண்டும்

அப்பு வா கலக்குற போ. இனி ரெண்டு பறவைகள் சிறகடித்து பறக்க போகிறது பாவி முன்னாடியே சொல்றதுக்கு என்ன நான் என்னமோ இனி தான் சொல்ல போற என்று நினைத்தேன்  காந்தி செத்துடாரா  மாதிரி உனக்கு அட்வைஸ் மழை பொழியுரேன். ஆனால் நீ எல்லாம் முடித்து விட்டு வந்து சின்ன பாப்பா மாதிரி நிக்குர 

போ கீர்த்தி

தயவு செய்து வெக்கம் எல்லாம் படாதே என்னால் பார்க்க முடியாது

அது வரை அவர்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்த கார்த்திக் அவளின் காதலை சொல்லும் போது சிறிது உருகித்தான் போனான் அதற்கு மேல் யோசிக்காமல் அப்போது தான் வருவது போல அண்ணனும் தங்கச்சியும் என்ன கதை பேசுறீங்க என்று கத்தி கொண்டே சென்றான்

அடுத்து அவர்களுக்குள் பேச்சு சாதாரணமாக இருந்தது அபர்ணா செய்து வைத்த சப்பாத்தி குருமாவை சாப்பிட்ட கார்த்திக் கீர்த்தி நீயா செய்தே என்று அதிர்ச்சி ஆனான்

நான் இல்லை மாமா அபர்ணா செய்தாள் நாளையில் இருந்து நானே செய்றேன் சரியா

முடிவு எடுத்து விட்டாய் எங்கள் இருவரையும் கொல்வது  என்று

ஏற்கனவே புருசனும் பொன்டாட்டியும்  சேர்ந்து கத்தியே  மனுசனை தூங்க விடாமல் செய்றீங்க இதில் சாப்பாடு கொடுமை வேற என்றான் வினோத்

டேய்  அண்ணா  நீ  நாளைக்கு என் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் தா கீர்த்தி அப்படினு கெஞ்சுவ நான் தரமாட்டேன் என்று சொல்லுவேன்  இது நடக்கவில்லை என்றால் நான் கீர்த்தி இல்லை.

கண்டிப்பா அப்படி ஒரு சம்பவம் இந்த சென்னையில் நடக்காது  கீர்த்தி

ரு நண்பர்களும் வினோத் வீட்டிற்க்கு கதை பேச சென்ற பின் தன்னுடைய புத்தகங்களை எடுத்து வைத்து கொண்டு அமர்ந்தாள் கீர்த்தி

சுமார் ஒரு மணி நேரம் அபர்ணாவை பற்றி பேசி வினோத் மனதை கொஞ்சம் தெளிவுற செய்தான் கார்த்திக் சரி டா நல்ல முடிவா எடு காலையில் பார்ப்போம் என்று சொல்லி விட்டு வந்தவன் அவள் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து சிரித்து கொண்டான் 

தன்னை  சுற்றி ஒரே ஒரு புத்தகம் ரெண்டு கிண்ணத்தில் பண்டம் சாப்பிட்டு விட்டு வைத்திருந்தாள் தண்ணீர் பாட்டில் வேற. இப்படி சாப்பிட்டா எப்படி படிப்பா சரியான லூசு எப்படி தூங்குது பாரு என்று நினைத்து கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்

சின்ன பொண்ணு என்று நினைத்தால் மேடம் என்னா பேச்சு பேசுரீங்க. அழகுடி செல்லம் நீ. அவனுக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்து  விட்டாய் கீர்த்தி

நீயே சொன்னது போல எனக்கு உன்னை பிடிக்கும் கீர்த்தி ஆனால் இப்போது காதல் இல்லை தான் ஆனால் இனி கண்டிப்பா காதல் என்று ஒன்று வந்தால் அது உன்னிடம் மட்டும் தான் வரும். அதுவும் நல்ல விசயம் தான் உன்னை மனைவியாய் மனம் பார்க்க ஆரம்பித்தால் உன் கவனம் படிப்பில்  செல்லாது. உனக்கு படிப்பு  முடிய இருக்கும் நேரம் எனக்குள் காதலை விதைக்க முயற்சிக்கிறேன் என்று மனத்தோடு அவளோடு பேசியவன் அவளை எழுப்பினான்

கீர்த்தி உள்ளே வந்து படு

படுக்கவா மாமா எனக்கு படிக்கணும் படிக்கிற பிள்ளையை தூங்க கூப்பிடுறீங்க இருங்க அத்தை கிட்ட சொல்றேன் 

ஆமா ஆமா நீ படிக்கிற லட்சணம் நல்லா தெரியுது மேடம். அடுத்து அம்மாவிடம் அப்படி எல்லாம் சொல்லி விடாதே வேற ஏதாவது நினைத்து கொள்வார்கள் 

ம்ம் என்று எழுந்து வந்தவள் உள்ளே வந்த உடன் திரு திரு என்று விழித்தாள் மேலே படுப்பதா இல்லை கீழே படுப்பதா என்று

அவளை ஒரு பார்வை பார்த்தவன் கட்டிலின் ஒரு ஒரம் சென்று படுத்து விட்டான்

இன்னைக்கு கீழே படுக்கலயா மாமா

கீழே படுத்தாலும் நீ என் பக்கத்தில் தான் படுக்க போற அதுக்கு ஏன் கீழே

ஐ மாமா என் மேல கோபம் இல்லையா

லூசு மேல எப்படி கோபம் வரும் நீயும்  படுத்து தூங்கு என்று சொல்லி விட்டு கண்களை மூடி கொண்டான்

எப்போது தான்  அவனை ஒட்டி வருவாலோ தெரியாது ஆனால் அவனுக்கு விழிப்பு வரும் போது அவன் கை அணைப்பில் இருந்தாள் கீர்த்தி. அதை பார்த்தவன் சிரித்து கொண்டே அனைப்பை அவனுடைய வேலையாக்கி தூக்கத்தை தொடர்ந்தான்

ரவு பதினொரு மணிக்கு தன் மொபைல் சத்த்ததில் எழுந்த வினோத் அதில் தெரிந்த அப்பு என்ற பெயரில் தூக்கத்தை விடுத்து உடனடியாக அழைப்பை ஏற்றான் 

அந்த பக்கம் இருந்து சத்தம் வர வில்லை அபர்ணா என்று அழைத்தான் 

ம்ம் மட்டும் வந்தது

சுவடுகள் பதியும்....

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.