(Reading time: 22 - 43 minutes)

எங்க மாமா வர நேரம் ஆகும் என்று சொல்லி விட்டாங்க . நான் உனக்காக தான் டா  லூசு காத்துக்கிட்டு இருக்கேன் ஏன்  இத்தனை நேரம் அவளை விட்டு விட்டு வர என்ன மாமியார் வீடு பிடித்து விட்டதா என்று கேட்டதில் அதிர்ச்சி அடைந்து அவளை பார்த்தான்.

எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கிறாயா  அதான்  ரெண்டு பேர் முகத்திலே எழுதி ஒட்டி வச்சிருக்கீங்களே உன்கிட்ட கொஞ்சம் பேசனும் மொட்டை மாடிக்கு வருகிறாயா

கார்த்திக் வரும்  நேரம் மா அப்பறம் பேசலாம்.

அப்படி எல்லாம் எஸ்கேப் ஆக  முடியாது தம்பி ஒழுங்கா வா  நான் மாமாவுக்கு  மெஸேஜ் அனுப்பிவைத்துவிட்டேன்  நாங்க மேல இருக்கோம்   கதவை திறந்து வந்துருங்க என்று  ஒழுங்கா வா.

ஆட பலி கொடுப்பது போலவே கூட்டிட்டு போகிறாளே என்று நினைத்தாலும் மனம் மட்டும் நிறைந்து இருந்தது

ம்ம்ம் என்று சொல்லி சந்தோசமாகவே சென்றான்.

அதே நேரம் வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக் அவள் அனுப்பிய  மெஸேஜ் படித்து விட்டு தன்  அறைக்கு சென்றான். முகத்தை மட்டும் கழுவி கொண்டு அவன் மேலே செல்வதுக்கும்  அங்கே கீர்த்தி பேச்சை ஆரம்பிக்கவும்  சரியாக இருந்தது.

வரும் போதே அவள் சமையல் செய்து வைத்திருந்ததை பார்த்தவன் அதை கிண்டல் செய்யலாம் என்று வாயை திறக்கையில்  அவளுடைய குரல் இவன் வாயை கட்டி போட்டது.

வினோத் அண்ணா  என்று அழைத்தாள் கீர்த்தி. வினொத்துமே அதிர்ச்சியாகி தான் அவளை பார்த்தான். கார்த்திக்கும் அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்டான் என்ன டா மங்கம்மா இன்று மரியாதையாக அழைக்கிறாள் சரி இல்லையே

அண்ணா என்று சொன்னதுக்கு எதுக்கு இப்படி அதிர்ச்சியாகி பார்க்கிற  எனக்கு நீ மட்டும் தானே  எப்பவுமே அண்ணன் அது உனக்கும் தெரியும் தானே பிறகு என்ன ஆ என்று வாயை திறந்து பார்த்து கொண்டு இருக்க.  சொன்னது புரிந்தது தானே அந்த உரிமையில் தான் கேக்குறேன் சொல்லு  இப்ப உன் மனதில்  என்ன இருக்கு என்று கேட்டாள் கீர்த்தி.

கார்த்திக்கின் புருவம் வளைந்தது இவள் எதை கேக்கிறாள் அவனிடம்

அது வந்து எனக்கு ஒரு குழப்பம் கீர்த்தி அதான்.

நான் சொல்லவா  என்ன குழப்பம் என்று உன்னுடைய பழைய  காதலி மாதிரியே அபர்ணாவும்  உன்னை விட்டு போய் விடுவாள் என்று பயப்படுகிறாய் சரி தானே

அமைதியாக இருந்தான் வினோத். அதிர்ச்சியில் இருந்தான் கார்த்திக். இது எப்ப டா நடந்தது ரெண்டு தடவை தானே பார்த்தான். மறுபடியும் பிரச்சனை வந்தால் இவன் தாங்க மாட்டானே

நான் இப்படி யோசிக்கிறது தப்பா கீர்த்தி என்று கேள்வி கேட்டான் கீர்த்தியிடம்

தப்பு தான் ஒருத்தருடைய  அன்பை சந்தேக படுவது   ஆனால் உன் விசயத்தில் தவறில்லை. ஆனால் அவள் உன்னை உண்மையாகவே  உயிருக்கு உயிராக விரும்புகிறாள். அவளை நம்பு அவள் காதல் நிஜம்.அவளுக்கு யாரையும் ஏமாற்ற தெரியாது கொஞ்சம் நேரம் முன்பு நீ அவளை பார்பாயா என்று உன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தாள். உனக்கு முழு நம்பிக்கை இருந்தால் மட்டும் காதலை சொல்லு இல்லை என்றால் அதை பற்றி அவளிடம் பேசாதே. எனக்கு அவளும் முக்கியம் அவள் கண்ணீர் விடுவதை என்னால் பார்க்க முடியாது

பயமா இருக்கு கீர்த்தி இவளும் உன்னை விரும்பவில்லை நடித்தேன் என்று சொல்லி விடுவாளோ என்று. ஆனால் அந்த நித்யா என்னை விட்டு போன போது எனக்கு அவள் பெரியதாக தெரிய வில்லை என்னை நண்பர்கள் முன்னிலையில் அவமான படுத்தியத்தை தான் என்னால தாங்கி கொள்ள முடிய  வில்லை. கேவலமா ஏமாந்திருக்கேன் என்று தான் என்னுடைய வருத்தமே அசிங்கமா இருந்தது வாழ்வே பிடிக்காத மாதிரி கார்த்திக் மட்டும் இல்லை என்றால் நான் உயிரோடே இருந்திருக்க மாட்டேன்

அதனால் தான் பயமாக இருக்கு ஆனால் எனக்கு அபர்ணாவை விட்டு விலகும் போது வருத்தமாக இருக்கிறது கீர்த்தி மனம் முழுவதும் குழப்பமாக இருக்கு அடுத்து என் பழைய காதல் தெரிந்தால் இவளும் என்னை வெறுத்து விடுவாள்

உன்னை பற்றி அவளுக்கு எல்லாம் தெரியும் வினோத் அதன் பிறகு தான் நீ அவள் மனதில் நுழைந்தாய் 

ஓ பரிதாப பட்டு விரும்புகிறாளா

உன் புத்தி ஏன்  இப்படி யோசிக்கிது அவள் முகத்தில் உன்னை கண்டதும் பரிதாபம் தான் இருந்ததா

அவனை பார்த்ததும் அவள் சிந்திய வெக்கம்  தான் ஞாபகம் வந்தது வினோத்க்கு

நான் சாயங்காலமே அவளிடம் பேசி விட்டேன் அப்போது தான் உன் மேல் இருந்த காதலை அவள் ஒத்து கொண்டாள். ஆமாம் எனக்கு தெரியும் எந்த சூழ்நிலையிலும் அவள் உன்னை விட்டு விலகமாட்டாள். காதலித்து அதற்கு பதிலாக காதலை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கும் மனம்  அந்த காதல் கிடைக்காமல் அனுபவிக்கும் வலி ரொம்ப கொடுமையானது வினோத் அந்த வலியை நீ அபர்ணாவுக்கு தந்து விடாதே நீயாவது அவள் காதலை புரிந்து கொள்

கீர்த்தி நீ கார்த்திக் பற்றி பேசுறாயா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.