(Reading time: 17 - 34 minutes)

முடிந்த அளவு விரைவாகவே திருமண சான்றிதளை  அலுவலகத்தில் ஒப்படைத்து விடு. உனக்கு பாடம் எடுக்கும் எல்லா ஆசிரியர்களும் புகார் செய்கிறார்கள் இனிமேல் கவனமாக இரு. இவளுக்கு நீங்களாவது கொஞ்சம் புத்தி மதி சொல்லுங்கள் ஸர். இப்போது நீங்கள் செல்லலாம்

அவரிடம் நன்றியையும் மன்னிப்பையும் சொல்லி  விடை பெற்று வகுப்பில் இருந்த அபர்ணாவிடம்  சொல்லி விட்டு மருத்துவ மனை சென்றனர்.

அப்போது அவன் மயக்கத்தில் இருந்தான். பக்கத்தில் அவன் அம்மா அப்பா தங்கை போல ஒரு பெண்.

இவர்களை பார்த்ததும் அவன் அப்பா திட்டி கொண்டே இருந்தார். பிரசாத்தும்  மயக்கம் தெளிந்தான். இவளை பார்த்ததும் அவன் கண்ணில் கொலை வெறி வந்தது. கார்த்திக் தான் பிரசாத் அப்பாவிடம் பேசினான்.

ஸர்  ப்லீஸ் உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு. அவளிடம் ஒரு பையன் தவறாக நடந்தால் அவள் இது போல் அவனை அடிக்காமல் பார்த்து கொண்டு இருக்க வேண்டுமா.எல்லாரும் அமைதியாக இருந்தனர். அடித்தது தெரியும் ஆனால் காரணம் யாருக்கும் தெரியாது 

உங்கள் பையன் காதல் காதல் என்று சொல்லி இவளை துன்புறுத்தி இருக்கிறான். இது போதாது என்று இன்று வரம்பு மீறி கையை வேற பிடித்து இழுத்திருக்கிறான். உண்டா இல்லையா  என்று கேளுங்கள்.

அவன் தலை குனிந்தான் அதுவே  உண்மையை உணர்த்தியது.  ஆனால் கார்த்திக் தெளிவாக பேசினான். இங்க பாரு பிரசாத். இந்த முறை இருவருடைய படிப்புக்கு பாதிப்பு வர கூடாது என்று தான் பொறுமையாக இருக்கிறேன். இன்னொரு முறை அவளை திரும்பி பார்த்தால் உன்னை கொலை செய்யவும்  தயங்க மாட்டேன்.

அதை சொல்ல நீங்க யாரு ஸர் . எனக்கு அவளை பிடிச்சிருக்கு. அதை சொன்னது தப்பா.

நீ காதலை சொன்னது  தப்பு இல்லை. அதனால் தான் அவளும் விளக்கம் கொடுத்திருக்கிறாள். ஆனால் தனிமையில் வரம்பு மீறியது பெரிய பிழை.    பின்பு  நான் யாரு என்று கேட்டாய் அல்லவா அவளுடைய கணவன்.

என்னது 

ஆமாம் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டது. என் மனைவியின் நிழலை தொட்டால் கூட நான் சும்மா இருக்க மாட்டேன் புரிந்ததா

மன்னித்து விடுங்கள் சார் நீயும் மன்னித்து விடு கீர்த்தி. அவசரத்தில் தவறாக நடந்து கொண்டேன் இனி என்னால் உனக்கு எந்த தொந்தரவும் வராது 

அவனுடைய மன்னிப்பை ஏட்காமலே  அவளை கல்லூரியில்  விட்டு விட்டு நீ வீட்டுக்கு வாடி இருக்கு உனக்கு என்ற மிரட்டல்வுடன் அலுவலகம் வந்தான் கார்த்திக். 

டீ பிரேகில் கார்த்திகை பிடித்து கொண்டான் வினோத். என்ன டா  ஆச்சு . எதுக்கு அவள் கல்லூரிக்கு போன. நான் மதியம் போன் செய்யும் போது மருத்துவமனையில் இருக்கிறேன் என்று சொன்ன கீர்த்திக்கு என்ன 

இந்த எருமையோட தொல்லை  தாங்கல டா. ஒருத்தன் வம்பு இழுத்தான் என்று மண்டையை உடைத்து வைத்திருக்கிறாள். ஒரு வழியாக சமாதான படுத்தி விட்டு வந்திருக்கிறேன்.

அவள் செய்யாமல் இருந்தால் தான் அதிசயம். யார் மேல் தவறு.

அந்த பையன் மீது தான்

அவனை எச்சரித்தாயா

ஆமாம் டா  கொலையே செஞ்சுருவேன் என்று சொல்லிவிட்டு வந்துருக்கேன்.

அது வேஸ்ட் டா.

ஏன்  டா 

நீ  செய்யவே வேண்டாம் உன் பொன்டாடியே  அதை செய்து விடுவாள்  என்று சொல்லி சிரித்தான்  வினோத்

ஆமா டா வினோத். இதுல வேற அவன் செத்துவிடுவானோ ஜெயிலுக்கு  அனுப்பிருவாங்காளோ நீங்க  வேற கல்யாணம் செஞ்சிருவீங்களோனு  கேக்குறா என்று சிரித்தான் கார்த்திக்

கார்த்திக்

ம்ம்

இப்போது கூட அவளுக்கு ஜெயிலுக்கு  போறது பெரிய விசயமா தெரிந்திருக்காது அதனால் நீ அவளை விட்டு பிரிந்து விடுவாயோ என்று தான்  கவலை பாடுகிறாள். உன் காதலை எதிர் பார்க்கிறாள் டா 

ம்ம்

புரியுது டா . மாமா மாமா னு என் பின்னாடியே  சுத்தி சுத்தி வருவது  நன்றாக  தான் இருக்கு. ஆனால்  ஏதோ ஒன்று  எனக்குள்  மிஸ்ஸிங்க் டா. எனக்கு பேபீயாகவே  தெரியுறா டா . சண்ட  போட தான் தோணுது. வம்பு இழுக்கணும் . மண்டையில்  நாலு கொட்டு கொட்டனும். அவள்  ஜடையை பிடித்து இழுக்கணும்  அவள் முறைக்கிறதை  பார்த்து சிரிக்ககணும் இப்படி தான் தோணுது. பார்க்கலாம்  இன்னும் காலம் இருக்கே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.